சண்டேன்னா மூணு! பானா சீனா! இசுடாலின்!ராகுல் காந்தி

ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் முதற்கொண்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தின் தயவால் கைதாகாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிற சாமர்த்தியசாலி சால்வை அழகர்!அவரோடு  மனைவி, மகன் என்று  குடும்பமே வழக்குகளில் சிக்கியிருக்கிற பெருமை வாய்ந்த குடும்பம் அவருடையது.

இந்த உத்தமர் என்ன சொல்ல வருகிறார்? மூன்றாவது அணி  வரவே வராது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்? ரங்கராஜ் பாண்டேவுக்குப் பிறகு கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை சலீம் எப்படி நடத்துகிறார் என்று பார்த்ததில் சரியான கேள்விகளும் இல்லை தெளிவான பதில்களும் இல்லை என்பது மிக நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.

*******

ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டால் அந்த செய்தியையாவது ஊடகங்கள் வெளியிடுமா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இசுடாலினுக்கு ஊடகங்கள் மீது அப்படியென்ன வருத்தமோ? 

#பொதுமேடையில் #அசடுவழிந்த #ஜோக்கர்கள்! துபையில் #ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் #ஸ்டாலின்! பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில் இரு நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். ஒரு 14 வயதுச் சிறுமி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராகுல் காந்தி அசடு வழிந்து நின்றதும் நேரலை ஒளிபரப்பைக் கட் செய்து நிலைமையைச் சமாளித்ததுமான பரிதாபத்தை தினசரி தளத்தில் சொல்கிறார்கள்.துபாயில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் உதவி ட்விட்டர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை, ஆனால்,முடிவில் பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்
அதெல்லாம் சரி! காந்தி 150 என்று கொண்டாட இந்த டூப்ளிகேட் காந்தி துபாய்க்குத்தானா போக வேண்டும்? சாம் பிட்ரோடாக்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத்தான் முடியும்!
அசடுவழிந்து நிற்பதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்!

டிஸ்கி1 இது மாறன்கள் நடத்தும் தினகரனில் வந்த செய்தி

டிஸ்கி 2dt 15/1/2019

+Md. Sultan Ad. Gulam தினகரனில் வெளிவந்த மறுப்புச் செய்தியை அனுப்பியிருக்கிறார்! நன்றி! இதில் சொல்லப் பட்டிருக்கிறபடி செய்தி பொய்யானதாக இருந்தால் இங்கேயும் என் வலைப் பதிவிலும் எழுதியது தவறாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் என்று ஒப்புக்கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படியே இந்தப்பகிர்வு.

ஆனால் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன. சன் குடும்பத்தின் தினகரன் முதலில் வெளியிட்டிருந்த செய்தியின் கடைசி வரியில் யாரோ ஒரு பிஜேபி ஆதரவாளர் சொல்லிக் கொடுத்து பேசியதாக எழுதியிருந்தது ஏன்?

காங்கிரசோடு தான் கூட்டணி என்று திமுக தலைமை உறுதியாக அறிவித்தபிறகும் தினகரனில் முதலில் வெளிவந்த செய்தி எதற்காக வெளியிடப்பட்டது? தனி ஆவர்த்தனமா? தங்கள் படத்தை விமரிசனம் செய்த ஒரு யூட்யூப் பதிவை காப்பிரைட் பிரச்சினை கிளப்பி முடக்கியவர்கள், , இந்தச் செய்தியில் கேள்வி கேட்டது பொய் செய்தி என்கிறார்களே தவிர தாங்கள் முன்னர் வெளியிட்டது தவறானது என்று வருத்தம் தெரிவிக்கவில்லையே!
ஏன்?
Photo

  
   

4 comments:

 1. பாண்டே சென்றது தந்தி டிவிக்கு நஷ்டம்தான் போல...

  ராகுல் - சிறுமி கேள்வி தினமலரிலும் பார்த்தேன்.

  உ பியில் காங்கிரசுக்கு கூட்டணியில் இடமில்லை என்று விட்டார்கள் அகிலேஷும் மாயாவதியும்!!

  ReplyDelete
  Replies
  1. ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவியை தினத்தந்தி நாளிதழின் ஒளிநகல் மாதிரியல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைத்தார். சௌகரியப்படுகிறவரை முதலாளிகளும் அனுமதித்தார்கள். இப்போது வேறுவிதமாக! முதலாளிகள் எப்படி விரும்புகிறார்களோ, அதுபோலத்தானே இருந்தாக வேண்டியிருக்கும்?

   எண்பது தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று குலாம் நபி ஆசாத்தை வைத்து அறிக்கை கூட காங்கிரஸ் வெளியிட்டு விட்டதே!

   Delete
 2. உங்கள் சண்டேக்கு இவர்கள் தாம் கிடைத்தார்களா?..

  ReplyDelete
  Replies
  1. இந்த மூணு மட்டும் தான் என்றிருந்தால் அந்த நாள் இருண்ட நாளாகத்தான் இருக்கும் ஜீவி சார்! கொஞ்சம் திருப்பாவை, கொஞ்சம் புத்தகங்கள், இவற்றோடு அன்றன்றைய செய்திகளையும் பார்ப்பதில் வந்தது இந்த மூணு! ஒதுக்கிவிட்டுப் போய்விட முடிகிறதா என்ன?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!