ஊடகங்கள் என்றாலே பொய்கள் என்றொரு அர்த்தமும் இன்று வந்துவிட்டது இல்லையா? டிவிசேனல்கள், அச்சு ஊடகங்கள் என்று மெயின் ஸ்ட்ரீம் மீடியா பொய்கள்,
ட்வீட்டர், முகநூல் முதலான சமூக வலைத்தளங்கள் செய்யும் அலப்பறைகள் என்று ஒன்றுக்கொன்று சளைக்காமல் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதில் நம்முடைய நிலைமை என்ன? எவர் வேண்டுமானாலும் எங்கள் காது இரண்டிலும் அம்பாரம் அம்பாரமாய் சுற்றுகிற பூவைச் சுற்றிவிட்டுப் போகலாம் என்றிருக்கிற கேணைகளா நாம்? செய்திகளின் ஆணி வேரை, பொறுமையாகத் தேடிப்பார்க்கிற இயல்பை வளர்த்துக் கொள்ளாதவரை கேணைகளாக்கப் படுவதும் தொடரத் தான் செய்யும்! ஏன் இதை புரிந்துகொள்ள மறுக்கிறோம்?

ரெட்பிக்ஸ் தளத்தைப் பற்றி என்ன சொல்ல? சம்பந்தமே இல்லாத தவறான தலைப்பு வைப்பது முதல், தவறான தலைப்பிலுமே எழுத்துப்பிழைகள் என்றே தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரு தளம். யூட்யூப் தளத்தில் இரண்டு வீடியோக்கள் மீது வந்திருக்கும் கமெண்டுகளில் இந்தச் சமுதாய வீதியில் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதையும் கொஞ்சம் பாருங்களேன்!
இதே தலைப்பில் பாண்டேவுக்கு முன்னால் பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்! அன்புமணி அரங்கத்தில் இருந்தவர்கள் கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்கிறார். ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட அரசியல்வாதி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
டாக்டர் அன்புமணி ராம்தாஸ், ரங்கராஜ் பாண்டே இருவரும் இங்கே மெயின்ஸ்ட்ரீம் மீடியா, Social media இரண்டைப்பற்றியும் பேசுவதைக் கேட்க மிகவும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. கொஞ்சம் கேட்டு விட்டு என்ன தோன்றுகிறது என்பதை மனம் திறந்து சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்!
இவ்வளவு பெரிய காணொளிகளை எங்கே பார்ப்பது ஸார்...! முக்கியமான பகுதிகளை டெக்ஸ்டில் கொடுத்திருக்கலாம்!
ReplyDeleteஸ்ரீராம்! இப்படி யார் பார்க்க,கேட்க/நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்கிற ஒன்றில் தான் அடுக்கடுக்கான பொய்கள் கிளம்புகின்றன!
Deleteஅவசர உலகம் ஸார்!!!
Deleteஅவசரப்பட்டு அவசரப்பட்டு என்னத்தை கண்டோம் ஸ்ரீராம்?
Delete