Showing posts with label பொய்கள். Show all posts
Showing posts with label பொய்கள். Show all posts

பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக வலைத்தளங்களா? #2

எங்கள் Blog ஸ்ரீராம் நேற்றைய பதிவில், நீளமான வீடியோக்களை பகிர்ந்தால் எப்படிப் பார்ப்பதாம் என்று ஒரு நியாயமான கேள்வியை பின்னூட்டத்தில்  எழுப்பியிருந்தார். நியாயம் தான்! ஆனால் இப்படி பார்ப்பதற்கும் கேட்பதற்குமே சோம்பல்படுகிற நம்முடைய இயல்புதான் ஊடகங்களில் சகட்டுமேனிக்குப் பொய்கள் பரப்புவதற்கு, காரணமாகவும் இருப்பதைக் கொஞ்சம் யோசிக்கலாமே!

வீடியோ சிறுசுதான் !

#2019தேர்தல்முன்னோட்டம் என்று அங்கங்கே கட்சிகள் கூடிக் கலைந்து கொண்டிருக்கின்றன. கூட்டணிக்கு அச்சாரம் என்று சொல்ல முடியாதபடி, கூட்டணி எதுவும் எந்தத் தரப்பிலுமே  முடிவாகவில்லை  #1

2014  நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா துணிந்து எடுத்த முடிவு என்று சொல்வதைவிட gambling என்றுதான் சொல்லமுடியும், அதைக்கூட இங்கே #திமுக அப்போதும் சரி, இப்போதும் சரி, துணிந்து செய்யவில்லை. ஆனாலும் கூட, அவர்களும் இன்னமும் தங்களுடைய கூட்டணி இவர்களோடுதான் என்று உறுதியாகச் சொல்லவில்லை. இப்போது அவர்கள் #கூட்டணி பற்றிப் பேசுவதே ஒரு calculated risk எடுப்பதற்கும் தயாராக இல்லை என்பதால்  #2

#அதிமுக குழப்பத்தில் இருக்கிறது. சொந்தக்காலில் நிற்பதற்கு பயம், தினகரன் என்ன சேதத்தை ஏற்படுத்துவார் என்பதில் எதுவும் தெளிவாகப் புரியாமல் இருப்பதும் பயத்தை இன்னும் கொஞ்சம்  அதிகரித்திருக்கலாம். #antiincumbency ஆளுவோருக்கு எதிரான அதிருப்தி என்பது இயல்பு. ஆனால் அந்த அதிருப்தியை சாதகமாக  மாற்றிக் கொள்வதில் #திமுக உள்ளிட்ட எதிரணியில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும் என்பது அவர்களுக்குமே கூடப் புரியாத புதிர்தான்! #3

இப்படி எத்தனை  அடுக்கிக் கொண்டே போனாலும் , எத்தனை டிவி விவாதங்கள் நடத்திக் கூவினாலும் , இப்போதிருக்கிற Winner takes all   என்பதான Westminster தேர்தல் முறையில் உள்ள கோளாறுகள் திருத்தப்படாத வரை ஒரு மாறுதலையும் கொண்டுவர முடியாது.

இங்கே ஜெயித்த ஒரு வேட்பாளர் மொத்த வாக்குகளில் எத்தனை சதவீதம் வாங்கினார் என்பதில் ஒரு bench mark  இல்லாமல், அவர் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதி ஆகிவிட யூடியுமா?

தோற்கிற தருணங்களில் மட்டும் புள்ளி விவரங்களை அடுக்குவது கருணாநிதி ஆரம்பித்து வைத்தது , இப்போது எல்லோருமே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். #திமுக விடமிருந்து கூட   விகிதாசார பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற குரல் ஒருமுறை எழுந்தது அப்புறம்  மூச்சுவிடக் காணோம்!

தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டுமென்கிற  குரல் பிரிட்டனில் இருந்து  https://www.electoral-reform.org.uk/voting-systems/types-of-voting-system/first-past-the-post/  இங்கே சில சுவாரசியமான, உபயோகமான தகவல்களைக் காணமுடியும்.

இங்கே எழுபதுகளில் தினமணி நாளிதழில் ஆசிரியர் திரு A N சிவராமன் தொடர் கட்டுரைகளாக எழுதினார். விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளிட்டு வெவ்வேறு நாடுகளில் வாக்குச்சீட்டு ஜனநாயகம் இயங்குகிற விதத்தை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க தொடர்ந்து எழுதினார். A N சிவராமன் போன்ற  நல்ல மனிதர்கள், சுயசிந்தனையோடு தங்களுக்குத் தெரிந்தது நாட்டுக்கும் பயன்படட்டுமே என்று எழுதினார்கள்.

இப்போதுள்ள ஊடகங்கள், அச்சு ஊடகமோ, விஷுவல் மீடியாவோ  சமூக வலைத்தளங்களோ என்ன செய்து கொண்டிருக்கின்றன? பயனுள்ள தகவல்களைத் தருகிறதா? சிந்திக்கத் தூண்டுகிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!

கூட்டணி முடிவாகி விட்டதா என்ன? பாமக நிறுவனர் மருத்துவர் இப்படி ட்விட்டியதும் ஆடிட்டர் குருமூர்த்தி retweet செய்திருப்பதும் .........  




  தொடர்புடைய பழைய பதிவு ஒன்று இங்கே 


பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக வலைத்தளங்களா?

ஊடகங்கள் என்றாலே பொய்கள் என்றொரு அர்த்தமும் இன்று வந்துவிட்டது இல்லையா? டிவிசேனல்கள், அச்சு ஊடகங்கள் என்று மெயின் ஸ்ட்ரீம் மீடியா பொய்கள்,
ட்வீட்டர்,  முகநூல் முதலான சமூக வலைத்தளங்கள் செய்யும் அலப்பறைகள் என்று ஒன்றுக்கொன்று சளைக்காமல் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதில் நம்முடைய நிலைமை என்ன? எவர் வேண்டுமானாலும்  எங்கள் காது இரண்டிலும் அம்பாரம் அம்பாரமாய் சுற்றுகிற பூவைச் சுற்றிவிட்டுப் போகலாம்  என்றிருக்கிற கேணைகளா நாம்? செய்திகளின் ஆணி வேரை, பொறுமையாகத் தேடிப்பார்க்கிற இயல்பை வளர்த்துக் கொள்ளாதவரை கேணைகளாக்கப் படுவதும் தொடரத் தான் செய்யும்! ஏன் இதை புரிந்துகொள்ள மறுக்கிறோம்?


ரெட்பிக்ஸ் தளத்தைப் பற்றி என்ன சொல்ல? சம்பந்தமே இல்லாத தவறான தலைப்பு வைப்பது முதல், தவறான தலைப்பிலுமே எழுத்துப்பிழைகள் என்றே தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரு தளம். யூட்யூப் தளத்தில் இரண்டு வீடியோக்கள் மீது  வந்திருக்கும் கமெண்டுகளில் இந்தச் சமுதாய வீதியில் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதையும் கொஞ்சம் பாருங்களேன்! 


இதே தலைப்பில் பாண்டேவுக்கு முன்னால் பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்! அன்புமணி அரங்கத்தில் இருந்தவர்கள் கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் சொல்கிறார். ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட அரசியல்வாதி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  

டாக்டர் அன்புமணி ராம்தாஸ், ரங்கராஜ் பாண்டே இருவரும் இங்கே மெயின்ஸ்ட்ரீம் மீடியா, Social media இரண்டைப்பற்றியும் பேசுவதைக் கேட்க மிகவும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. கொஞ்சம் கேட்டு விட்டு என்ன தோன்றுகிறது என்பதை மனம் திறந்து சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்!