சண்டேன்னா மூணு! லயோலா! ஒருபக்கக் கலகம்!

லயோலா கல்லூரியின் கிறுத்திருவங்கள் பற்றி எந்தத் தொலைக்காட்சியும் விவாதமோ, கேள்விகளோ எழுப்பிய மாதிரித் தெரியவில்லை. மகஇக என்கிற நக்சல் குறுங்குழுவின் முகிலன் லயோலா கல்லூரியில் ஓவியக்கண்காட்சி நடத்த அனுமதிக்கப்பட்டது எப்படி? எதிர்ப்புக்குரல்கள் எழ ஆரம்பித்தபிறகு மழுப்பலான ஒரு மன்னிப்புக் கடிதம் என்று கூடச் சொல்ல முடியாது! கையெழுத்து இல்லாத மொட்டைக்கடிதாசி! இவ்வளவு தானா லயோலா கிறித்தவத்தின் யோக்கியதை?!


லயோலா கல்லூரிப் பேராசிரியர் காளீஸ்வரனுக்கு மதவெறியர்கள் தொலைபேசி மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல். மோடி ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டிய தருணம் இது.
நான் அறிந்த கதைதான்!

6 comments:

  1. யாராவது இதற்கெல்லாம் போராடுவார்கள், கைதட்டலாம் என்றே நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யாரோ ஆரம்பித்து நாம் ஏன் பின்பாட்டுப் பாடுகிறவர்களாகவே இருந்துவிட வேண்டும் ஸ்ரீராம்?

      Delete
    2. ​பழகி விட்டது!

      ஆரம்பம் நம்மிடமிருந்து வந்தால் மதிக்கவும் ஆளில்லை!​!!!

      Delete
  2. கிறிஸ்துவத்துக்குள் கம்யூனிசமும் அடக்கம் என்பது புதிய செய்தி. சபரிமலை பிரச்சனைக்கு புதிய அர்த்தம் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கிறித்தவம் என்பதே ரோம சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மதம் என்பது வாட்டிகன் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்த்தாலேயே விளங்கி கொள்ளக் கூடியதுதான்! ஆரம்ப நாட்களில் பாதிரியார்கள் கால் வைத்த ஒவ்வொரு இடத்திலிருந்தும் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளை லத்தீனில் மொழிபெயர்த்தார்கள். பிறகு லத்தீனில் இருப்பதைக் காட்டியே இதெல்லாம் பைபிளில் ஏற்கெனெவே சொல்லப் பட்டிருப்பது தான் என்று இங்கே டூப்ளிகேட்டுகள் தங்களை காந்தி என்று சொல்லிக் கொள்வதை போல பிரசாரம் செய்தார்கள். இங்கே ராபர்ட் கால்ட்வெல் என்கிற பாதிரி திருநெல்வேலிக்கு வந்து திராவிட மொழிக்குடும்பம் கோட்பாட்டை ஆரம்பித்து வைத்ததும் அந்த நாட்களிலேயே சமுகநீதி காத்த பாதிரியாகக் கொண்டாடப் பட்ட கதையும் கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளக் கூடியதுதான்!

      கிறிஸ்டியன் கம்யூனிசமுமே கூட அந்த மாதிரி கம்யூனிச ஆதிக்கம் வலுத்து வந்த பகுதிகளில் வாடிகன் ஆரம்பித்து வைத்த திருப்பணி! இங்கே மதுரையில் உருவாக்குகிற தியாலஜிகல் கல்லூரி அதைச் செய்ததை நேரடியாகவே கதையைத்தான் பதிவில் கோடிட்டுக் காட்டினேன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!