ஜனவரி 12, சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள்!
எதையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்த நரேன் என்கிற நரேந்திரநாத் தத்தா. சுவாமி விவேகானந்தராக பரிணமித்ததும் அவருடைய குரல் உறங்கிக் கொண்டிருந்த பாரதத்தை, தட்டியெழுப்புவதாக விடுதலை வேட்கையை வளர்ப்பதாக இருந்ததையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து வணங்க வேண்டிய தருணம் இது.
இங்கே தினசரி தளத்தில் திருமதி கமலா முரளி எழுதியிருக்கிற அஞ்சலிக் கட்டுரையைப் படிக்க
எதையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்த நரேன் என்கிற நரேந்திரநாத் தத்தா. சுவாமி விவேகானந்தராக பரிணமித்ததும் அவருடைய குரல் உறங்கிக் கொண்டிருந்த பாரதத்தை, தட்டியெழுப்புவதாக விடுதலை வேட்கையை வளர்ப்பதாக இருந்ததையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து வணங்க வேண்டிய தருணம் இது.
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை எப்படி மறந்தே போய் விடுகிறோம் என்று முந்தைய பதிவில் விசனம் மிகுந்து சொன்னது கவனிக்கப் பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்!
*******
மேலும் கவனிக்கப்பட வேண்டிய செய்திகளாக சில
*******
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸூக்கு செல்வாக்கு இல்லை.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வழக்கம் போல் உத்தர பிரதேசத்தில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார், எங்கள் கூட்டணியின் சார்பில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
*******
என்ன புத்தகம் வாங்கலாம் என்பது சரி, எப்படிப் புத்தங்களை வாங்கவேண்டும்?- சிறார் எழுத்தாளர் விழியனிடம் பேசியது இங்கே
’’முதலில் பெற்றோர், தங்களின் குழந்தைகளைப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். போனவுடனே புத்தகங்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து அரங்குகளையும் முழுமையாகச் சுற்றிப்பார்த்து விட்டு, குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களை குறித்துக் கொள்ளச் சொல்லலாம்.
அதில் குழந்தைகளே புத்தகத்தின் பேர், விலையைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டைக் கொடுத்து, அதற்குள்ளாகப் புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்ல வேண்டும். புத்தகங்களை, முழுக்க குழந்தைகளின் தேர்வுக்கே விட்டுவிட வேண்டும். அதில் பெற்றோரின் 20 சதவீத தலையீடு இருக்கலாம்.
ஏனெனில், குழந்தைகளின் தேர்வில் தலையிட்டால், வாசிப்பில் அவர்களுக்கு ஈடுபாடு மறையலாம், குறையலாம். புத்தகத்தின் அட்டையோ, படங்களோ, எழுத்து வடிவமோ அவர்களுக்குப் பிடித்திருக்கலாம். அதனால் அவர்களின் விருப்பத்துக்கு விட்டுவிடுவது நல்லது. அதுவே அவர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும்’’ என்றார் விழியன்.
விழியன் என்கிற உமாநாத் செல்வனுடன் உரையாடி நீண்ட நாட்களாகி விட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது!

