கமல் காசர்! ஸ்ம்ருதி ஈரானி! பின்னே பப்பு!

மக்கள் நீதி மய்யம் கமல் காசருக்கு திடீர்க் கொதிப்பும் ஆவேசமும் வந்துவிட்ட மாதிரி ஒரு ஷோ/உதார்  காட்டி இருக்கிறார்! பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.


ஒன் இந்தியா கேணைகள் மட்டும் இந்த வீடியோவில் கமல் காசர் எரிச்சலோடு ரிமோட்டை வீசியெறிந்து டிவி நொறுங்குகிற காட்சியில் H ராஜா பேச்சைக் கேட்டதும் டிவியை உடைத்த மாதிரிப் புளகாங்கிதப் படுகிறார்கள்! கமல் காசர் தொடர்ந்து நீட்டுக்காக, அனிதாவுக்காக உருகுகிறார். ஆனால் திமுக ஊடகங்கள் தவிர யூட்யூப் விளம்பரங்கள் அது இதுவென்று ஊது ஊதென்று ஊதிக் கொண்டிருக்கிறார்கள்! அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நல்லதல்ல, எதிரான மனநிலையையே உருவாக்கும் என்பதுகூடத் தெரியாமல்! கமல் காசர் அதே விஷயத்தை ஊதுவது என்ன பலனைத் தரும்?
  

ஸ்ம்ருதி ஈரானி அமேதியில் ராகுல் காண்டியை எதிர்த்து மீண்டும் களம் இறங்குகிறார் என்றதுமே காங்கிரஸ் கூடாரம் கலகலத்தது. காங்கிரசின் பிரியங்கா சதுர்வேதி ஸ்ம்ருதி ஈரானி தன்னுடைய கல்வித்தகுதியைப் பொய்யாக மாற்றிமாற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார் என்று அவர் பல ஆண்டுகளுக்கு முன் நடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் வசனத்தை வைத்து நக்கல் செய்ததும் கொஞ்சம் ஓவராகவே இருந்தது. அவரைத் தகுதி நீக்கம் செய்யவேண்டுமென்கிற கூக்குரல் வேறு! 

“They have attacked me in every possible way in the last five years. There is no abuse that they have not hurled at me for being a woman. I only have one message for them, the more you will insult me, the more you attack me, the harder I will work against the Congress in Amethi,” என்று ஸ்ம்ருதி ஈரானி பதிலடி கொடுத்திருக்கிறார்     கேணைகளின் கூட்டம் செய்வதற்கெல்லாம் கட்சித்தலைவர் தானே வாங்கிக் கட்டிக்க கொண்டாக வேண்டும்?! அதுவும் தலீவர் முதுகே ஒருமாதிரி என்கிறபோது!!

The scatter brained spokesperson is now ranting about Smriti Irani’s degree.Buddhu has also in his nomination form falsely claimed that he got MPhil degree. He failed the pre-Thesis exam so so not permitted to write his thesis. Ask him to produce his thesis or exam results proof.
7:53 PM - 12 Apr 2019            

அன்டோனியோ மைனோ மகன் ராவுல் விஞ்சியின் பழைய கந்தல் கதை மீண்டும் துவைக்கப்படுகிறது.
8:07 PM - 12 Apr 2019 

காங்கிரசில் ஒரே ஒரு பப்பு, பப்பி இருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம்! மொத்தக் கும்பலுமே பப்புமயமாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் ஒட்டு மொத்தமாக நிராகரிப்பது ஒன்றே நலம் கரும் வழி!
     

2 comments:

 1. தமிழ் - தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரதிற்கு விரோதி, தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும்
  என்றேல்லாம் ராகுல் பேச ஆரம்பித்து விட்டார். இப்படிப் பேசினால் தான் சுலபமாக மக்களை ஏமாற்றலாம்-- என்று எழுதிக் கொடுப்பதை பேச ஆரம்பித்து விட்டாரோ?..

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதானே காங்கிரஸ் மாநிலக்கட்சிகளின் குரலாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது, சற்றே பொறுங்கள்! வயநாடு பிரசாரத்தில் எப்படி மாற்றி பேசுகிறாரென்று பார்க்கலாம்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!