நரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்பு மனுவை வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்திருக்கிறார்.  ஒரு  திருவிழாவைப் போல பிஜேபி தொண்டர்கள் நேற்றும் இன்றும் வாரணாசியில் கொண்டாடி அதை வழிமொழிந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்திகளும் வீடியோக்களும் சொல்கின்றன



தேவையே இல்லாமல் ஏன் நான் வாரணாசியில் போட்டியிடக்கூடாதா என்ற கேள்வியை எழுப்பி பப்பி பிரியங்கா வாத்ராவும், சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே என்று அந்த உளறலை நியாயப்படுத்திய ராகுல் காண்டியும் ஒருவழியாக தங்களுடைய ஜம்பம் செல்லுபடியாகாது என்று புரிந்துகொண்டு வாரணாசியில் பிரியங்காவை களம் இறக்குவதில்லை என்று முடிவுசெய்து, ஏற்கெனெவே அங்கே போட்டியிட்ட அஜய் ராய் என்பவரை மீண்டும் வேட்பாளராக்கியிருக்கிறார்கள். பப்பி பிரியங்கா பிரசாரத்துக்கு வேண்டுமானால் உதவலாம், வேட்பாளராக அல்ல என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். சோனியாG இதுமாதிரி அட்வெஞ்சர் எல்லாம் வேண்டாம் என்று எச்சரித்ததால் பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுகிற ஐடியா கைவிடப்பட்டதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி சொல்கிறது.இந்தத் தேர்தலின்ஆகப்பெரிய  காமெடிப் பீசாக பிரியங்கா வாத்ரா உருவெடுத்திருப்பது இன்று முதல்செய்தியாக. 

காங்கிரஸ் விரும்பினால்...வாரணாசியில்.. மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ப்ரியங்கா பேசியது அவரின் அரசியல் அனுபவமின்மை + அரசியல் வாரிசுகளுக்கே உரிய விளைவுகளை பற்றி கவலைப்படாத வெற்று சவடால்,அலட்சியம் ஆகியவற்றின் வெளிப்பாடு.
கட்சி அரியணையில் அமர்ந்திருக்கும் ராகுல் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருந்தால் தான் செய்தி.
ப்ரியங்கா போட்டியிடாததெல்லாம் செய்தியல்ல.


  • Like Brother, Like Sister. runs away to a faraway constituency and sister Vadra chickens out of a contest after toying with the idea. Naamdars have already conceded big defeat to the Kaamdar Ji. Varanasi reverberating #KashiBoleNaMoNaMo
    Quote Tweet
    ANI
    @ANI
    ·
    Ajay Rai to be the Congress candidate from Varanasi #LokSabhaElections2019
    12:57 PM · Apr 25, 2019 from Varanasi, India · Twitter for Android  


    இந்து நாளிதழில் கூட என் ராமின் கணிப்புக்களையும் மீறி கேசவ் இப்படி சோனியா காங்கிரஸ் தவிப்பதை கார்டூனாக வரையமுடிகிறது என்பது ஆச்சரியமல்ல, நடுநிலை என்று காட்டிக் கொள்ள ஒரு வணிக உத்தி!  

    நம்மூர் ஊடகங்கள் வழக்கம்போலவே ஒருபக்கப் பார்வை, திருகல் வேலைகளோடு .........
     



    மீண்டும் சந்திப்போம்.
            
         

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!