மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தான்! வேறென்ன?!

வெற்றி பெற்ற எந்த ஒரு அரசியல்  தலைவருடைய மிக முக்கியமான துணாதிசயமாகப் பார்த்தாலும்  ஜனங்களுடைய நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ற மாதிரிக் கொஞ்சம், தங்களுடைய அரசியல் கொள்கையில்  ஒரு தொலை நோக்குப்  பார்வையுடன் கொஞ்சம் என்று ஒரு பக்குவமான கலவையில் ஜனங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துவதும் தான் என்று சொல்ல முடியும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதைத் தாண்டி ராஜதந்திரி (statesmanship) என்ற நிலைக்கு உயர்கிற தருணம்,  இந்திய அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இங்கே வாய்த்திருக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கள்!


    ட்ரம்ப் பேசுகிறார் 25 நிமிடம் 

நேற்று ஹூஸ்டனில்  நடந்த Howdy Modi நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சராசரி அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாக உயர்ந்து வருவது தெளிவாகவே வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! டொனால்ட் ட்ரம்ப் ஒரு சராசரி அரசியல்வாதியாக, அமெரிக்கஇந்தியர்கள் வாக்குவங்கியைக் குறிவைத்தே இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதுகூடப் பொது வெளியில் தெரிந்த விஷயம்தான்! ஆனால் ஒரு ரெண்டுங் கெட்டான் அமெரிக்க அதிபரை அடுத்த ஆண்டு வரவிருக்கும் அதிபர்  தேர்தலிலும் வழிமொழிகிற மாதிரிப் பேசியிருக்க வேண்டுமா? இந்த ஒரு உறுத்தல் எனக்கும் முதலில் பார்த்த போது தோன்றினாலும், அமெரிக்க அரசியலில் ட்ரம்ப்பின் Republican Party எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததில்லை. டெமாக்ரட்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை என்பதைவிட பாகிஸ்தான் அவர்களுடைய செல்லமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸ் மறுபடி நிரூபித்திருக்கிறார்! டெமாக்ரட்டுகளுடைய பரிதாப நிலைமையைப் பார்த்தால் 2020 தேர்தல்களில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்பதில் டொனால்ட் ட்ரம்பைக் குளிர்விக்கிற மாதிரி  மோடி பேசியது  தவறாகப் படவில்லை. அவரா அங்கே வாக்களிக்கப் போகிறார்? 
      

இன்று காலை காங்கிரசின் இடைக்காலத்தலைவர் சோனியாவும் , மன்மோகன் சிங்கும் திஹார் சிறைக்குப் போய் சீனாதானவை சந்தித்துவிட்டுத் திரும்பிய போது இந்தியன் எக்ஸ்பிரெசுக்காக எடுத்த படமாம் இது! After the meeting, Chidambaram expressed his gratitude towards both the leaders. Through his Twitter handle, which is being handled by his family on his behalf, Chidambaram said, “I am honoured that Smt. Sonia Gandhi and Dr Manmohan Singh called on me today. As long as the Congress party is strong and brave, I will also be strong and brave.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. 


காங்கிரசின் முக்கியமான பணத் தூண்களில் இருவர் சிறையில் அடைக்கப் பட்டதால், காங்கிரஸ் கட்சி மொத்தமுமே ஊழல்கறை படிந்த கட்சியாக பிஜேபி சித்தரிக்க முயல்வதற்கு மாற்றுச் சித்திரமாக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள்!  ஊழல் கறை போய்விடுமா என்ன? 

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒரு பக்கம் அரசியல் தலைவர் என்பதிலிருந்து உயர்ந்து ஒரு நல்லத்தலைவராக, சிறந்த ராஜதந்திரியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடி! உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் மதிக்கப்படுகிறார்! அவர் பேசுவது கூர்ந்து கவனிக்கப் படுகிறது! ராஜீய உறவுகளை மேம்படுத்த அவர் முனைவதில் ஒவ்வொரு நாடும் மகிழ்வோடு பங்கேற்கிறது! 

இன்னொரு பக்கம் தேசத்தை நீண்ட காலம் ஆண்ட ஒரு கட்சி! 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் அதன் அப்போதைய தலைவரான சோனியா மற்றும் செலெக்டிவாக சீனாதானா  மாதிரியான கைத்தடிகள், கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சி என்று செயல்பட்டதும், திமுக மாதிரியான மாநிலக்கட்சிகளுடன்  கூட்டணி தர்மம் என்பது கூட்டுக கொள்ளை அடிப்பதற்காகவே என்றானதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியுமா? விதைத்ததை அறுவடை செய்தே ஆகவேண்டிய நேரமும் இப்போது வந்திருக்கிறது என்பதில் இப்போது பார்க்கப் போனவர்களும் கூட ஏதோ ஒரு கட்டத்தில் சிறைக்குள் தள்ளப் பட வேண்டிய நபர்களே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன!!


பிஜேபி ஆதரவாளனாக என்னைச் சிலர் தொடர்ந்து முத்திரை குத்திக் கொண்டிருந்தாலும்  தமிழக பிஜேபியைக் குறித்து எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பம் தான்! அதுவும் கூட வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி நல்ல அபிப்பிராயமும் இல்லை! அவரும் நானும் என்கிற இந்த நிகழ்ச்சியின் வழியாக தமிழிசையைப் பற்றி, ஏதோ கொஞ்சம் நல்லபடியாகச் சொல்கிற மாதிரி ஒரு வீடியோவை பார்த்து, இந்தப் பக்கங்களில் கூட பகிர்ந்திருப்பதாக நினைவு! வானதி சீனிவாசனைப் பற்றியும் கூட எனக்கு அதிகம் தெரியாது! இந்த நிகழ்ச்சி வழியாக அவரை அவரது குடும்பத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்கிற மாதிரி இருந்தது அவ்வளவுதான்! 

அபிப்பிராயம்? நான் தனிப்பட்ட குடும்பம், சொந்த விஷயத்தை வைத்து எவர்மீதும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதில்லை என்பதால், தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார் என்ற அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளும் அவசியமே எழவில்லை.

மீண்டும் சந்திப்போம்.              

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!