சண்டேன்னா மூணு! நூறாவது நாள்! 1965! மம்தா பானெர்ஜி!

ரேந்திர மோடி வெர்ஷன் 2.0 வெற்றிகரமாகத் தனது 100வது நாளை, சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளோடு கடந்து, மேலும் தன்னுடைய செயல்திறனைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்து கொண்டே வருவதைக் குறித்த ஒரு விவாதம்! இங்கே புதிய தலைமுறை சேனல் கொஞ்சம் விசித்திரமாக மோடி எதிர்ப்பு ஊடகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அதற்கு முன் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேள்வியெழுப்பி, இருப்பதில் இதுவே கொஞ்சம் நல்ல கொள்ளியாக, சேதம் குறைவு என்று தெரிகிற  ஒரே ஒரு அடிப்படையில் மட்டும்!  



திர்க்கட்சிகளின் குரலாக ஒலிப்பதில்,பத்திரிகையாளர் S P லட்சுமணன் போன்றவர்களுடைய பங்கு அசாத்தியமானது. கட்சிப்  பேச்சாளர்களைப் போல அல்லாமல், கொஞ்சம் செய்திகளின் மீதான விமரிசனங்கள் வாயிலாகவே எதிர்ப்பைச் சொல்வது, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்பதுதான் ஒரே காரணமா? கொஞ்சம் யோசித்துத்தான்  பதில் சொல்லுங்களேன்! வீடியோ 22 நிமிடம்.


ந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையில் பல்வேறு கால கட்டங்களில் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ போர் நடந்ததுண்டு. காங்கிரஸ்காரனைக் கேட்டால் 1971 போரைப் பற்றி மட்டுமே பேசுவான்! 1965 இந்தியா பாகிஸ்தான் போரைப் பற்றி இங்கே நினைப்பதற்கு ஆளே இல்லையா என்ற குறையை, சேகர் குப்தா இந்த 33 நிமிட வீடியோவில் கொஞ்சம் தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் கூட பாகிஸ்தானியர்கள் பார்வையில் இருந்து என்பது நெருடத் தான் செய்கிறது. இருந்தாலும்  கொஞ்சம் பார்க்கலாமே!

கஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது.

நேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்டவுடன் அட்டையைத் துப்புவது போல, இந்தியா என்று சொன்னவுடனேயே, மகாராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசுமாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது. காந்தியைப் பற்றி, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள், பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அப்புறம், 1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று! இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை! கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றியகண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.இது நேருவை மட்டுமே முழுக்க முழுக்கக் குறை சொல்வதற்காக எழுதிய வரிகள் இல்லை. இப்படி ஒரு இந்தியக் கனவு! இந்தியப்பெருமிதமும் கூட! என்று இந்தப் பக்கங்களில் எழுதிப் பத்தாண்டுகள் நிறையப்போகிறது.


சந்திராயன் 2 பற்றி மம்தா பானெர்ஜி திருவாய் மலர்ந்து சில விஷயங்களை உளறியிருக்கிறார். அதுவும் போக இதை எதிர்த்து வருகிற 12 அன்று கண்டன   முதல்  வீடியோவில் SP லட்சுமணன் ஆகட்டும். மேலே மம்தா பானெர்ஜி உளறுவதாகட்டும், அவர்களுடைய அரசியல் இன்ன ரகம் என்று அடையாளம் காட்டுகிறது. பொதுஜனங்களுடைய எண்ணவோட்டத்துக்கு எதிராக இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டுதான் பேசுகிறார்களா? நரேந்திர மோடி மீதிருக்கிற பயம், இப்படிக்கு காழ்ப்புணர்வுடன் அவர்களை இப்படிப் பேச வைக்கிறதா  West Bengal BJP president Dilip Ghosh on Saturday criticised Chief Minister Mamata Banerjee for attacking the saffron party over Chandrayaan-2 programme, saying she is fond of finding fault with everything the country is proud of.     

கொஞ்சம் யோசித்துப்பார்த்து, ஒரு பதில் சொன்னால்தான் என்ன?

மீண்டும் சந்திப்போம்.  
        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!