#செய்திகளில் புலி வால்! பபிதா போகாட்! சீனாதானா!

ன்றைக்கு திங்கட்கிழமை நவராத்ரி இரண்டாவது நாள் சில நல்ல செய்திகளும் வந்திருக்கின்றன. சீனாதானா இன்னும் சிலகாலம் திஹார் சிறையிலேயே பத்திரமாக இருக்கட்டும் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்கள் நீதிமன்றங்களை ஆட்டிப்படைத்த காலம் மலையேறுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

  
ரியானா சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிஜேபி தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பதில் சில ஆச்சரியங்களும் இருக்கின்றன. டங்கல் என்று  அமீர்கான் இரு ஹரியானா மல்யுத்த வீராங்கனைகளை வைத்துப் படமெடுத்து அவர் கல்லாவை நிரப்பிக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? 


ண்களுக்கான வீரவிளையாட்டு என்றே கருதப்பட்ட மல்யுத்தப் பயிற்சியை தனது இருமகள்களுக்கும் கற்பித்ததாக  ஹரியானா மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்  வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே டங்கல் சொன்னது. தனது நான்கு மகள்கள் கீதா, பபிதா குமாரி, ரித்து, சங்கீதா தவிர சகோதரர் மகள்கள் பிரியங்கா, வினேஷ் ஆக போகாட் சகோதரிகள் ஆறுபேரையுமே மல்யுத்த வீராங்கனைகள் ஆக்கிப்  பயிற்சி கொடுத்தார் என்பது அவ்வளவாக வெளியே தெரியாத செய்தி! 


ந்த ஆறு போகாட்  சகோதரிகளில் கீதா, பபிதா , வினேஷ் மூவருமே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமங்கைகள்! பிரியங்கா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ரித்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவர். சங்கீதா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர் என்ற தகவலைச் சொல்லிவிட்டு, இப்போது பபிதா போகாட், மற்றும் மல்யுத்தவீரர் யோகேஷ்வர் தத் இருவரும் ஹரியானாவில் பிஜேபி வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள் என்று சொன்னால்தான் செயதியை முழுமையாகச் சொன்னோம் என்ற திருப்தியே வருகிறது! 


னக்கு   புலித்தலை, புலிக்கொடி கொடி   காட்டி அரசியல் செய்கிற இந்தக் கட்சியையும் பிடிக்காது, புலி புலி என்று கூவி உண்டியல் குலுக்குகிறவர்களையும் பிடிக்காது என்ற தகவல் இங்கே வரும் நண்பர்களுக்குத் தெரிந்து இருக்கும்! சிவசேனா மட்டும் பிடிக்குமா என்ன? பால்தாக்கரேவின் பேரன் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, தெற்கு மும்பை ஒர்லி சட்டசபைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார் என்கிறது செய்தி. தாக்கரே, வாரிசுகளில் முதல்முறையாகக் களமிறங்குகிறவர் என்பதற்காக,   ஜெயித்தால் முதல்வர் நாற்காலிக்கு அடிபோட்டு , துணை முதல்வர் பெயர்ப் பலகைக்கு செட்டில் ஆகிவிடும்  ரகசியத்திட்டம் ஊருக்கே சிதம்பர வெளிச்சமாய் தெரிகிறதென்பதை சொல்லாமல் இருந்துவிட முடியுமா? 

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. கடந்த 25 பதிவுகளின் தலைப்புகளையும் சேர்த்து மொத்தமாக ஒரே மின் அஞ்சல் வழியாக இன்று தான் வந்து சேர்ந்துள்ளது. வியப்பாக உள்ளது. அனைத்தும் சமகால முக்கியமான விசயங்கள். மற்ற எவரும் தொடாத சமாச்சாரங்கள். ஆமா எப்ப படித்து முடிப்பது?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      வாசிப்பு ஒரு தொடர்ச்சியான அனுபவம். அன்றன்றைய நடப்புகளின் மீதான விமரிசனம் என்பதால் சிறிது காலம் கழித்து ஆர்வத்தோடு படிக்க முடியாதது.இன்றைக்கு சீனா எழுபது என்று ஆரம்பித்ததில் ஏராளமான பழைய தகவல்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தேன், ஆனால் பதிவை முழுமையாக்க முடியவில்லை.

      Followers option ஐ தேர்ந்தெடுத்தால் பிளாக்கரிலேயே ரீடிங் லிஸ்டில் வந்து விடுமே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!