பதிவு #1025 மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சொல்ல விடுபட்டவை!

ங்கே இங்கே எங்கே சுற்றினாலும் தமிழக அரசியலுக்கு வந்து தானே ஆகவேண்டும்? தமிழக அரசியலில் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, இங்கே சொல்ல விடுபட்டவைகளாக சில செய்திகளைப் பார்க்கலாமா?



ந்த 43 நிமிட விவாதத்துக்கு புதிய தலைமுறை சேனல் வைத்திருக்கிற தலைப்பே கொஞ்சம் காமெடியானது! நிறையவே விஷமத் தனமானது என்பதை தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? தமிழக சோனியாG காங்கிரஸ் தலைவர் நாங்குனேரியில் பேசியதை வைத்துத்தான் இந்த விவாதம் என்பதால் என்னபேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்! செய்தி 9 நிமிடம். 

   
ந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை எப்படி இந்திரா காண்டி, தேர்தல் கமிஷனில் எப்படி ஒரு சில்லறைத்தனமான வேலையைச் செய்து தக்கவைத்துக் கொண்டார் என்ற தகவல் இணையத்திலேயே தேடக் கிடைக்கும். ஆனால் அம்மணியின்  பிரதான குறிக்கோள், மத்தியில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே என்றிருந்ததில் படிப்படியாக அதன் தேசியத் தன்மை என்பது நீர்த்துப் போய்க் கொண்டே வந்து ஏதோ ஒருசில மாநிலங்களில் மட்டும் சில MP சீட் கெலிக்கிற, கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கேலிக்கதை ஆகிப் போய்க் கிடக்கிறது. இந்தப் பின்னணியில் மேலே முதலில் உள்ள விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்! செல்வப் பெருந்தகை என்னதான் முட்டுக் கொடுத்தாலும்  திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் பெரிதாகிக் கொண்டே வருவது நன்றாகவே புலப்படுகிறது. என்ன விரிசல் வந்தாலும் கூட்டணி தர்மம்  கூட்டுக்  களவாணிகளை எப்படி ஒன்றுசேர்க்கும் என்பதும் கூட ஊகிக்க முடிவதுதான்! 


டகங்கள் தேடுகின்றனவோ இல்லையோ, ஊடகங்களைத் தேடித்தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் விசிகவின் திருமாவளவன் என்பது கொஞ்சம் வினோதமாக இல்லையா? லண்டனில் அவர் பேசப்போன இடத்தில் ஒரு இலங்கைத்தமிழர் கரன்சி நோட்டுகளை வீசியெறிந்தார், அவரைப்போன்றவர்களால் தான் ஈழத்தில் இழப்பே, காசுதானே வேண்டும் இந்தா பொறுக்கிக் கொள் என்கிற மாதிரி ஒரு வீடியோ வைரலாகப் பரவியதும், அந்தக் கூட்டத்தில் விசிகவுக்கு நிதியுதவி கேட்டார் என்பதும், சீமான் பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்ட கதை மாதிரியே,  திருமாவளவனுக்கு சேரலாதன் என்பவர் வழியாக ஒரு சேதி அனுப்பினார் என்பதும், மூன்றுமாகச் சேர்ந்து ஒரு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதில், தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு மனிதர் படாதபாடு படுகிறார். திமுகவோடு இணக்கமா பிணக்கமா என்ற சாதாரணமான ஒரு கேள்விக்குக் கூட கொஞ்சம் முறுக்கிக் கொண்டே பதில் சொல்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

உங்களிடம் விடை இருக்கிறதா? இருந்தால்  பதிலைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம்.                 
      

4 comments:

  1. அரசியலில் பிழைக்க வந்த கூத்தாடிகள். இவர்களை நம்பும் மக்கள் சினிமாவுக்கு டிக்கட்
    வாங்கும் ஏமாளிகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் மாறாவது பாரா கடைசியில் கூட்டணி தர்மம் என்ற வார்த்தையில் முன்னம் எழுதிய பதிவுகளின் தொகுப்பு ஒன்று இன்னமும் விரிவாகச் சொல்லும் அம்மா! கூத்தாடிகள் கோமாளிகள் என்று அலட்சியப்படுத்திவிட்டுப் போக முடியாதபடி இவர்களுடைய திருப்பணிகள் மிக விபரீதமாக இருக்கின்றன.

      Delete
    2. மேலே முதல் வரியில் பதிவின் மூன்றாவது பாரா எனத்திருத்தி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறேன்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!