Showing posts with label பந்த். Show all posts
Showing posts with label பந்த். Show all posts

செவ்வாய்! கொஞ்சம் வாய் திறந்துதான் பேசுங்களேன்!

இன்றும் நாளையும் பொதுவேலைநிறுத்தம் என்று இடதுசாரிக் கட்சிகள் முன்னிருந்து இயக்கும் மத்திய தொழிற்சங்கங்களோடு பின்னிருந்து இயக்கும் வங்கி, காப்பீட்டு ஊழியர் சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் INTUC திமுகவின் தொ.மு ச அப்புறம் நிறைய உதிரிகளும் சேர்ந்திருக்கிறார்கள். சுமார் 20 கோடி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் என்று AITUC பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் சொல்கிறாராம்!(அத்தனை வாக்குகள் விழுந்திருந்தால், மத்தியில் ஆட்சியையே பிடித்திருக்கலாமே! யாரும் கேட்க மாட்டீர்களா?)   

Trade Union activists protesting while courting arrest during two day long Bharat Bandh called by Trade Unions, at Hazra in Kolkata on Tuesday 8th January 2019. செய்தி மற்றும் படத்துக்கு நன்றியுடன் (ARIJIT SEN / Hindustan Times)

மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்!  என்று இங்கும், 


வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்! 


Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world? 
Have you ever been on, or considered going on, strike?


இப்படி ஏழு கேள்விகளை முன்வைத்து எழுதியிருந்ததை ஒருமுறை வாசித்துவிட்டு , உங்களுக்கு என்ன மனதில் படுகிறதோ அதைக் கொஞ்சம் வாய்திறந்து பேசுங்கள்!

 


ஆனால் மேற்குவங்க முதல்வர்  மம்தா பானெர்ஜி இடது சாரிகளுக்கு பந்த் அதுஇது என்று நடத்தி 34 வருடங்களாக மாநிலத்தைச் சீரழித்தது போதுமென்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செய்தி இங்கே  

*******

சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம்  கூறும் ரகசியங்கள்!

இப்படி இதற்கும் ஜோதிடம் பார்க்கச் சொல்கிறது தினமணி. பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்! 

இரண்டே நாட்களில் எலக்கியவாதி ஆவது எப்படி ?

1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய் அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க "ஏய்... யாருய்யா நீ ?" அப்டீன்னு கேட்டா... நாந்தான் அனலினியன், புனல்தலையன் அப்டி இப்டீன்னு எதுனா சொல்லி சமாளிங்க...! " பயபுள்ள இவனும் எலக்கியவாதிதான் போலன்னு" நம்பிருவாங்க.

2. எல்லா ஸ்டால்லயும் போய் சிரிச்சி சிரிச்சி பேசுங்க... பட் எலக்கியவாதிங்க சிரிக்க மாட்டாங்க... முறைப்பாங்க... ஆனாலும் நீங்க சிரிக்கனும்...!

3. வீட்டுக்கு வந்த உடனே, ஃபேஸ்புக்குல உள்ள சொடலமுத்துங்கற ஒங்க பேர, சொடலமுத்திரன் அப்டீன்னு மாத்திருங்க...

4. "அவன் எழுதிய புத்தகத்தை நான் குப்பையில் கிடாசுகிறேன், இவன் எழுதிய புத்தகத்தை நான் ராக்கெட் செய்து விடுகிறேன், இது கல்யோவ்ஸ்கி - டி - லே த்மபுடிக்கி எழுதிய பிரெஞ்சு நாவலின் தழுவல், அவனையெல்லாம் ஏரித்தண்ணில முழுக வெச்சி அடிச்சாலும் அவனுகெல்லாம் எலக்கியம் வராது" என்றெல்லாம் பதிவ போட்டுத்தள்ளுங்க...

5. "தமிழ்" என்பதை "தமில்" என்றெழுதி, அந்த தவறை சுட்டிக்காட்டுபவனிடம், குமரிக்கண்டத்தில் தமில் என்றுதான் பிருந்தது, ஹீத்ரு மொழியில் இருந்து வந்ததுதான் "ழ" எனும் எழுத்து, என்று அவன் குரல்வளையை கடித்துத்துப்புங்கள்...
இரண்டாம் நாள் மாலை ஆறு மணிக்கு "எலக்கியவாதி" ரெடி...!

பதிவு பகிர்வு : ராம்ஜி இசை மழலை

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் கலாய்க்கிறார்!

‪இதற்கு சவாலாக பெரியார் நூல்களை சீனாவில் சீப்ரேட்டில் அச்சடித்து இலவசமாக விநியோகிக்கலாமே வீரமணி. எனக்கெல்லாம் பெரியார்போல் யாராவது சொத்து எழுதிவைத்துவிட்டுப்போனால் காலச்சுவடு கண்ணன் கேஸ்போடுவாரோ என்று பயந்து நடுங்காமல் வருவது வரட்டுமென்று இலக்கியத்தை சோவியத்போல இப்படிப் பரப்புவேன்‬
Photo