ஒரு பிராண்ட் உருவாகும் விதம்........!


ஒரு புது விஷயத்தைப் பார்க்கிறோம். அது ஒரு பிராண்டாக மாறுவதற்கு என்னென்ன அவசியம்?

எல்லோருக்கும் அது ஏற்கத் தகுந்ததாக அல்லது ஒத்து வரக்கூடியதாக எடுத்த எடுப்பிலேயே அமைவது மிகவும் அபூர்வம். உண்மையைச் சொல்லப் போனால் அது  அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு புதுமையையும் மிகக் குறைந்த சதவீத மக்கள் மட்டுமே உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு பிராண்ட் அல்லது சேவையை அறிமுகப் படுத்தும் போதே அது அத்தனை பேராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு விதமான தவறான கண்ணோட்டம் அல்லது அடிப்படை உண்மையை.புரிந்துகொள்ளத் தவறுவதால் தான். உண்மையில் அப்படி நிகழ்வதே இல்லை!

அப்படியானால், பெரும்பான்மையான ஜனங்களைக் குறிவைத்து எந்த பிராண்டும் செயல்படுவது இல்லையா? பெரும்பான்மையான ஜனங்களின் ஆதரவு இருந்தால் அல்லவா ஒரு பிராண்ட் நீடித்து நிற்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஒரு பிராண்டாக உரு மாறுவது என்பது, பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில் தான் போய் முடிகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரு வெற்றிகரமான புது பிராண்டை சந்தைப் படுத்துகிறவர்கள், விளம்பரம் செய்பவர்கள் பெரும்பான்மையினர் கவனத்தை ஈர்ப்பதற்கு உடனடியாக எந்த முயற்சியையும் செய்வதில்லை. புதுமையை விரும்புகிற, ஏற்றுக் கொள்கிற ஒரு சிறு சதவீத மக்களை மட்டுமே குறி வைக்கிறார்கள். அவர்களிடம் தங்களுடைய ப்ராண்டைக் கொண்டு சேர்ப்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அப்படியானால், அந்த பெரும்பான்மை...?

அவர்கள் தானாகவே தேடி வருவார்கள்!

அதை விட்டு விட்டு, எல்லோரையும் ஒரே நேரத்தில் குறிவைத்து செய்யப் படுகிற முயற்சி, நம்மூர் சோஷலிசம் மாதிரி நீர்த்துப் போனதாக அல்லது நீர் மேல் எழுதி வைத்த எழுத்துப் போலத் தான் இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!



5 comments:

  1. கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!"//

    இவ்வளவு சின்னப் பதிவை இப்போதான் முதல் முறை பார்க்கிறேன்...!!

    ReplyDelete
  2. அதெல்லாம் இல்லை. எத்தனையோ வெளம்பரத்த பாத்துட்டு இது ஏதோ பெரிய ப்ராண்ட் போல, நமக்கு தான் தெஇரிலைன்னு நான் நெறைய பொருள் வாங்கியிருக்கிறேன். ஆக மக்கள் விரும்பி தான் ஒரு ப்ராண்ட் உருவாகிறதுன்ற வாதம் தவறு, தவறு, தவறு :)

    ReplyDelete
  3. ஸ்ரீராம்!

    யோசிச்சதெல்லாம், பதிவு சின்னதா இருக்கே அப்படீங்கற அந்த ஒரு விஷயம் மட்டும் தானா?

    வழக்கம்போல நீளமான பதிவாக எழுதவில்லையே என்று ரொம்பவுமே வருத்தப்படுகிறீர்கள் போல!
    :-))))

    ReplyDelete
  4. மரா!

    எதெல்லாம் இல்லை? உங்கள் வார்த்தைகளில் இருந்தே கேள்வியை இப்படிப் போட்டுப் பாருங்கள்! உபயோகிப்பவர்கள் (மக்கள் என்பது இந்த இடத்தில் சொல்வது ஒரு பொருளைப் பயன்படுத்துகிறவர்களை மட்டுமே) ஆதரவு, விருப்பம், தேர்வு இல்லாமல் ஒரு பிராண்ட் உருவாக முடியுமா?

    அப்படி உங்கள் கருத்தாக இருக்குமேயானால், பிராண்ட் என்பதை நீங்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை! பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்ற சொற்களை வைத்து இந்தப் பக்கங்களிலேயே கூகுளில் தேடினால் முந்தைய சில பதிவுகள் கிடைக்கும்.

    ReplyDelete
  5. ராஜு என்பவரிடமிருந்து வந்திருக்கும் ஒரு பின்னூட்டம், ப்ரொபைல் விவரம் எதுவும் இல்லாமல் வந்திருப்பதால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தவிர அவர் இன்றைக்கு வெளியான ஒரு படம், நடிகர், தயாரிப்பாளரைத் தொட்டும் சிலவற்றை சொல்லியிருக்கிறார்.

    இன்றைக்கு பிராண்டுகள் அடிமட்டத்து மக்களையும் குறிவைத்து நகர்வதைப் பேசியிருக்கிறார். இந்த விஷயம் ஏற்கெனெவே, இந்தப்பதிவுகளில் சி கே ப்ரகுஅலாத் பட்டி, அப்புறம் பிராண்டு பற்றி எழுதிய முந்தைய பதிவுகளில் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!