தபால் தலைகளில் நேரு குடும்பம்
ஒரு குடும்பத்தின் மொத்தப் பேர்களுமே தபால் தலையில் இடம் பெற்றது இந்தியாவில் மட்டுமே! அதுவும் நேரு குடும்பத்திற்கு மட்டுமே!
சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப்பக்கங்களில் நேருவின் குடும்பத்தை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் நேரு, நேருவுக்குப் பின் இந்திரா, அதன் பின் ராஜீவ், அதற்குப் பிறகும் மன்மோகன் சிங் மாதிரியான டம்மி பீசுகளை வைத்து நாட்டை ஆண்டு வரும் குடும்பம் அது என்பதால் மட்டுமல்ல. நேருவின் குடும்ப வாரிசுகள் ஒவ்வொரு தலைமுறையிலுமே கொஞ்சம் வித்தியாசமானவர்களாக இருப்பதாலும் தான்!
இங்கே தபால் தலையில் விடுபட்டுப் போனவர்கள், மேனகா காண்டி, வருண் காண்டி, விஜயலட்சுமி பண்டிட் வாரிசுகள் என்று, நேரு குடும்ப அதிகாரப் பட்டியலில் இல்லாமல் போனவர்கள் அல்லது கழற்றிவிடப்பட்டவர்கள் என்று கொஞ்சம் இருக்கிறார்கள்.
வாரிசுப்பட்டியலில், பிரியங்காவின் மக்கள் இருவரும் இன்னமும் தபால் தலையில் வெளி வரவில்லை. இதை மனதை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு தபால் தலையையும், அது வெளியிடப்பட்ட வருடம் செய்திகளோடு பாருங்கள்! இவை இணையத்தில் இருந்தே பெறப்பட்டவை.

மோதிலால் நேருவுக்கு முந்தின நேரு படம் கிடைக்கவில்லை போல! கிடைத்திருந்தால் இந்தியாவின் "வரலாறு" ஒரு வேளை அங்கிருந்தே ஆரம்பித்திருக்குமோ?
Jawaharlal Nehru | Kamala Nehru |
Indira Gandhi |
Rajiv Gandhi | Sanjay Gandhi |
Vijalakshmi Pandit (Sister of Jawaharlal Nehru) |
____________________________________________________
Motilal Nehru
(1861 - 1931)
__________________________________________
"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீது ஏறியே கூட ஒருவன் நரகத்துக்கும் போக முடியும்!" தோழர் கே.வரதராஜன் சொன்னது நேருவுக்குப் பொருந்துகிற விதத்தில் வேறு எவருக்கும் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தாது என்று தான் சொல்ல வேண்டும்!
வரதராஜன் தெளிவு படுத்தாமல் விட்ட, இன்றைக்கும் என்னுடைய மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி, "நரகத்துக்கோ சொர்கத்துக்கோ போவது என்பது தனிநபர் நம்பிக்கை, விருப்பம், தேர்வு என்பது வரை சரி! ஒரு தனி நபரின் பலவீனங்களும் முட்டாள் தனங்களுமே கூடவா ஒரு தேசம் மொத்தத்தையும் நரகத்தில் தள்ளி விடும்?"

JAWAHARLAL NEHRU
(1889 - 1964)
Mourning Issue - issued in 1964 | Issued in 1965 on the First Anniversary of Nehru's Death - 'Jawahar Jyoti' | ||
'Children's Day - Jawaharlal Nehru from 1 Rs. Commemoration coin. Issued in 1964 | |||
Nehru leading Naga Tribesmen - 4th Anniversary of Nagaland State. Issued in 1967 | 7th Non-Aligned Summit Conference, New Delhi. Issued in 1983 | ||
Gandhi and Nehru - Commemoration - Issued in 1973 |
Quit India Resolution, August 1942. Issued in 1983 (India Struggle for Freedom - 1st series) | 40th Anniversary of UNO - Nehru addressing General Assembly. Issued in 1985 |
Children's Day 1997 |
Jawaharlal Nehru - Birth Centenary (1989). Issued in 1988 | Jawaharlal Nehru - Birth Centenary (1989). Issued in 1988. Portrait by Soetoslav Roerich |
Jawaharlal Nehru - Birth Centenary (2nd issue). Issued in 1989 |
படம் பார்த்துக் கதை சொல்லுதல் என்பது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பப்பாடம்.நாம் கூட பல சமயங்களில், அந்த ஆரம்பத்திலேயே நின்றுபோய் விடுகிறோமோ என்ற சந்தேகம் அவ்வப்போது வருவதுண்டு! படம் மட்டும் பார்த்து விட்டுக் கதை சொல்லாமலேயே போய் விடுகிறோம் பாருங்கள்!
அதற்காகத் தான் இது! இங்கே சில இந்தியத் தபால் தலைகளின் படங்கள்! அவற்றோடு கொஞ்சம் கதை! அதாவது வரலாறு! அடம் பிடிக்கிற வால்பையன்களுக்காக என்று வைத்துக் கொள்வோமா? பின்னே! வரலாறு ரொம்ப முக்கியமாக்கும்! மொத்தப்பதிவுமே டிஸ்கியானதினால் தனியாக ஒன்று அவசியமில்லை! இது சும்மா, முன்னோட்டம் தான்!

_________________________________________________________
கமலா நேரு! ஜவகர்லால் நேருவின் மனைவி. காச நோயால் பீடிக்கப் பட்டு, ஸ்விட்சர்லாந்தில் மரணமடைந்தார். "மனைவி" இல்லாத குறை நேருவுக்கு எப்போதுமே இருந்ததில்லை! ஆனால் தாயில்லாத குறையும், தந்தை வேறு விஷயங்களிலேயே எப்போதும் மூழ்கிக் கிடந்ததும், மகள் இந்திரா பிரியதர்சினியின் வாழ்க்கையில் என்றுமே ஆறாத காயங்களாகப் போயின!
KAMALA NEHRU
(1899 - 1936)
Issued in 1974 in commemoration |
_________________________________________________________
தந்தையிடமிருந்து பெற முடியாத அன்பைப் பிறரிடம் தேடித் திரிந்த மிகவும் சோகமான இளமைக் காலம். தாயும் இல்லை. தந்தையின் எதிர்ப்பையும் மீறி, ஃபெரொஸ் காண்டியைத் திருமணம் செய்து கொண்டார். கணவருமே, சராசரியான, வீம்பு பிடித்த அற்ப ரகம் தான் என்று தெரிய வந்த நாட்களில் எவ்வளவு வேதனையை, சோகத்தை அனுபவித்திருப்பார் என்று எவருக்குமே தெரியாது. முதல் குழந்தை ராஜீவ் காண்டி பிறந்த பிறகு கணவருடன் நிரந்தரமான பிரிவு. சோகத்தை ஆற்றிக் கொள்ளத் தந்தைக்கு உதவியாக அரசியல் பிரவேசம்! ஆரம்ப நாட்களில் அமைதியாகத் தான் இருந்தது.
INDIRA GANDHI
(1917 - 1984)
Issued in 1984 in commemoration |
Issued in 1985 in commemoration | Issued in 1985 in commemoration | |
Issued in 1985 in commemoration |
கவனம்! அம்மையார் அமைதியாக இருந்தது ஆரம்ப நாட்களில் தான்! பேக் சீட் டிரைவிங் செய்ய முயன்ற கிழட்டுத் தலைவர்களை சமாளித்த விதம், இண்டிகேட், சிண்டிகேட் எனக் காங்கிரஸ் உடைந்த விதம் எல்லாமே ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருந்தது! ராஜமானிய ஒழிப்பு, வங்கிகள் தேசீயமயமாக்கப்பட்டது என்று கன்ஃபைட் காஞ்சனா ரேஞ்சுக்கு தூள்!
கொஞ்சம் அதிகமாகவே பிரமித்து நின்றபோது தான் தேசமே தூளாகி விடுமோ என்ற பயமும் கவலையும் வந்தது! எந்தக் கிழட்டுத் தலைவர்களை தூர எறிந்தோமோ, அந்த தலைவர்களையே தேடிப்பிடித்து எமெர்ஜென்சியை எதிர்த்து நின்ற அந்த நாட்கள்...! ......................................................................................................................................................................

துர்க்மான் கேட்! புது தில்லியில் ஒரு இடம். இன்னமும் சஞ்சய் காண்டி பெயரை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் மறந்துபோய் விட்டார்கள்! மகன் மேல் இருந்த பாசத்தில், மகனுடைய "வேகத்தை" யார் சுட்டிக் காட்ட முனைந்தாலும், அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிற வேகம் இந்திரா காண்டியிடம் இருந்தது.
SANJAY GANDHI
(1946 - 1980)
Issued in 1981 on 1st death anniversary |
....................................................._________________________________________________________
அரசியலில் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியே இருந்த இந்த இளைஞர், தாயின் கொடுமையான மரணத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டி வந்ததை விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும். முதல் தடவையாக, காங்கிரஸ் கிழவர்களிடமிருந்து விடுபட்டு, ஒரு இளைஞரின் கீழ் வந்தது.
அதுவும் கூட நீண்ட நாள் நிலைக்கவில்லை. ராஜீவ் காண்டியிடம் நல்ல எண்ணமும், செயல் வேகமும்,செய்து முடிக்கும் திறனுடையவர்களை இனம் கண்டு பயன்படுத்திக் கொள்ளும் விவேகமும் இருந்தது. இந்தப்பண்பு, பாட்டன் நேருவுக்கோ, அன்னை இந்திராவுக்கோ இருந்ததில்லை. போஃபார்ஸ் பீரங்கிகள் வாங்கிய விவகாரத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் ராஜீவின் பொறுமையை நிறையவே சோதித்தன. வெறும் 64 கோடி ரூபாய்கள் சுவிஸ் வங்கிக் கணக்கில் பறிமாரியதே அன்றைக்கு அவ்வளவு பரபரப்பான செய்தியானது. இன்றைக்கோ, சுவிஸ் வங்கிகளில் இந்திய அரசியல் வாதிகள் போட்டு வைத்திருக்கும் பணம் சுமார் 1,75,000 கோடிகள் என்று சொல்லப்படுகிறது. அறுபத்து நாலு கோடிக்கே மாய்ந்து மாய்ந்து எழுதின ஹிந்து பத்திரிக்கை கூட, சமீபத்தில் 2009 மே மாதம் நடந்த தேர்தல்களில் ஆந்திராவில் மட்டும் காசுக்குச் செய்தி என்ற திட்டத்தின் கீழ் அரசியல் வாதிகள் சுமார் 350-400 கோடி ரூபாய்கள் செலவழித்து, தங்களுக்குச் சாதகமாக செய்திகள் வருமாறு விலைக்கு வாங்கினார்கள் என்று சர்வ சாதாரணமாக இது வரை மூன்றே மூன்று கட்டுரைகளோடு முடித்துக் கொண்டிருப்பதை, இந்திய அரசியலின் மிகப்பெரிய நகை முரண் என்று தான் சொல்ல வேண்டும்!
அப்புறம் ராசா, ஆ ராசா என்று வாய்பிளக்க வைக்க வைக்கிற விதத்தில் 60000 கோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொன்னால், மனிதன் சர்வ சாதாரணமாக முந்தைய ஆட்சிக் காலத்தில் 1,60,000 கோடி ரூபாய்க்கு நட்டமேற்படுத்தினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ராஜீவுக்கு இந்த அளவுக்கு சாமர்த்தியமோ, நெஞ்சுரமோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!
நேருவின் காலத்தில் சீனாவுடன் ஏற்பட்ட உரசல்களை சரி செய்து கொள்ள ராஜீவ் காண்டி ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். பாகிஸ்தானில் அன்றைய பிரதமராக இருந்த பெனாசிர் புட்டோவுடன் ஒரு நட்புறவுடன் கூடிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். ஆனால், அவருடைய மரணத்துடன், அந்தத் தொடக்கமும் மலைப்பாதையில் பாறைகள் சரிந்துவிழுந்து, சாலைகள் மறிக்கப்படுவது போல ஆகிப்போனது.

RAJIV GANDHI
(1944 - 1991)
| |
Issued in 1991 to mourn his demise | Issued in 2004 to mark the Rajiv Gandhi Renewable Energy Day on 20th August |
_________________________________________________________
விஜயலட்சுமி பண்டிட்! ரொம்பப்பிரமாதமாக சொல்வதற்கு எதுவுமில்லை! நேருவின் சகோதரி என்பதைத் தவிர!சொல்லக் கூடிய ஒன்று இரண்டு விஷயங்களுமே கூட அவ்வளவு சுவாரசியமானவை அல்ல!
VIJAYALAKSHMI PANDIT
(1900 - 1990)
Issued in 2000 |
//"JAWAHARLAL NEHRU
ReplyDelete(1989 - 1964)"//
இதைத் திருத்தி விடவும்.
இந்திரா காந்தி + Point என நான் கருதுவது அந்தக் காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கு இல்லாத வீரம், முடிவெடுக்கும் திறன் அவரிடம் இருந்தது!
அவர் - Points எல்லோரும் அறிவோம்...!
ராஜீவ் காந்தி நன்றாக Blossom ஆகியிருக்கக் கூடிய காலத்தில் அவர் கொடூர மரணம் துரதிருஷ்டம்.
இந்திரா காண்டியைப்பற்றி எமெர்ஜென்சி காலத்தில் இப்படிக் கிண்டலாகச் சொல்வார்கள்:"இந்தியாவில் இருக்கும் புடவை கட்டின ஒரே ஆண்பிள்ளை" அது உண்மையல்ல. அவர் நிறைய விஷயங்களைக் கண்டு பயம் கொண்டிருந்தார், அந்த பயமே அவரை அடுத்தடுத்துத் தவறுகளைச் செய்யத் தூண்டியது என்ற கருத்தை முந்திய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்.
ReplyDeleteதாயை இழந்த தருணத்தில் ராஜீவ் காந்தி நிதானத்தையும் இழந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான சீக்கியர்களை ஜகதீஷ் டைட்லரும், சஜ்ஜன் குமாரும் ஏவிய குண்டர்கள் தேடித் தேடிப்படுகொலை செய்துகொண்டிருந்த தருணத்தில் "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்!" என்று சொன்னது மிகக் குரூரமாக இருந்தது.
போஃபார்ஸ் அப்புறம் இப்படி ஒன்றிரண்டு தருணங்களைத் தவிர, ராஜீவ் என்ற இளைஞரிடம் பொறுப்புணர்ச்சி மிகுந்திருந்ததை மறுக்க முடியாது. நேரு பரம்பரையில், கொஞ்சம் அதிக நிதானத்துடன் செயல் பட்டவர் அவர் என்ற எண்ணமே இப்போது கடந்த கால நிகழ்வுகளைப்பார்க்கும்போது தோன்றுகிறது.
முக்கியமான ஆளோட தபால் தலையைப் பற்றி கேக்காம இருக்க முடியல? இந்த குடும்பத் தபால் தலைல மௌன்ட்பெடனோட மனைவியோட தபால் தலை எங்கயும் காணோமே??? தப்பா கேட்ருந்த மன்னிச்சிருங்க :-(
ReplyDelete:-))))
Deleteஅட, ஆமா இல்லே?!
ReplyDeleteஎட்வினாவோட படம் போட்டா, அப்புறம் இன்னும் கொஞ்சம் பேர் படமும் போட வேண்டியிருக்கும்னு மறந்துட்டாங்களோ?
எப்படியெல்லாம் யோசிக்கறீங்கப்பு:-))
/"மனைவி" இல்லாத குறை நேருவுக்கு எப்போதுமே இருந்ததில்லை!/
ReplyDelete/காண்டி/
போன்றவை அருமையான குத்தல்!
உங்கள் குறை தீர, பிரியங்கா பிள்ளைகள் முத்திரை
விரைவில் வரலாம்.
திரு.யோகன்,
ReplyDeleteஇங்கே "குத்திக்" காட்டுகிற அளவுக்கு நேரு அல்லது அவரது குடும்பத்தின் மீது எனக்கு வெறுப்போ, அல்லது நேருவைக் கொச்சைப்படுத்தும் வேறு உள்நோக்கங்களோ இல்லை நேருவுடைய தனிப்பட்ட பலவீனத்தின் விளைவை இந்த தேசம் தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று என்பதை மட்டுமே இந்தப் பதிவிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் சொல்லியிருக்கிறேன். பெண்களை விட நேருவின் மிகப்பெரிய பலவீனமாக நான் உண்மையிலேயே கருதுவது, அவர் எல்லோரோடும் எப்போதும் இணக்கமாகவே இருக்க முயன்று, அரவணைத்துப்போவதிலும் தோற்றுப்போனதைத் தான்..ஒரு தலைவனாக இருப்பவனுக்கு எப்போதுமே சமாதானம் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, தேவைபடுகிற தருணங்களில் கடுமையாகவும், உறுதியுடனும் இருக்கத் தெரிய வேண்டும்! நேருவிடம் இல்லாத அந்த ஒன்றைப்பற்றிமட்டுமே, ஒரு பகுதிக் கண்ணோட்டத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்
அடுத்து காண்டி!
இந்திரா மனம் புரிந்து கொண்டது ஃபிரோஸ் காண்டி என்ற ஆஃகானிஸ்தான் முஸ்லிமை. காண்டி அல்லது காந்தே என்பது தான் உண்மை. அதை வெளிப்படையாக அறிவிப்பதில் நேருவுக்கு சில மனத் தயக்கங்கள் இருந்தன. தன்னுடைய மகள் இஸ்லாமுக்கு மதம் மாறித் திருமணம் செய்துகொண்டது நேருவுக்குப் பிடிக்கவில்லை. திருமணம் ஏற்கெனெவே முறைப்படி நடந்துமுடிந்திருந்த போதிலும், மறுபடியும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இங்கே அவருடைய குடும்ப விஷயங்களைப்பற்றி விமரிசனமாக அல்ல, ஒரு தலைவனாக இருக்க முடியாமல், எப்படிப்பட்ட குழப்பத்தில் நேரு இருந்தார் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
பார்சி இனத்தவராக ஃபிரோஸ் சித்தரிக்கப்பட்டதும், காந்தே என்பதை காந்தி என்கிற மாதிரி உச்சரிப்பில் செய்யப்பட்ட மாற்றம், உண்மையான மோகன்தாஸ் கரம் சந்திர காந்தியையே மறக்கடிக்கக் கூடியதாக மாறும் என்பதை அன்று யாரும் உணர்ந்திருக்கவில்லை.
நேரு என்ற புனித பிம்பத்தைக் காப்பாற்றுவதற்காக, செய்யப்பட்ட சில விஷயங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல எண்ணங்களுடன் தான் இருந்தன.
இப்போது அப்படியில்லை. புனித பிம்பம் குலைந்து போனால், ஆட்சி, அதிகாரம் கைவிட்டுப் போய்விடும் என்பதை உணர்ந்தே,அதனால் ஆதாயம் பெறும் ஒரு கூட்டம், தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இதில் நேருவுடைய பங்கு எதுவுமில்லை.
இப்படி ஒரு பிரமாதமான பதிவிட்டு எத்தனை நாட்களாச்சு.
Delete