இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!


நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, நாளை ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும்

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.
ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.
ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை
ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கே நிறைந்திருப்பதைஅறிவேன் அம்மா!
அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?
நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர்
பலருடன் என்னுடைய பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!



The Mother left her physical body on 17th November 1973













7 comments:

  1. படித்தேன். தினம் காலை விஜய் டிவியில் அன்னை பாடல் கேட்பதுண்டு.

    ReplyDelete
  2. கங்கை அமரன் இசையமைத்த இன்னும் நிறைய பாடல்கள் உண்டு.யூட்யூபில் ஸ்ரீ அன்னை-ஸ்ரீ அரவிந்தரைப்பற்றிய குறும்படங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது, ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய சாவித்திரி மகாகாவியம்.காரடையான் நோன்பு என்ற குறியீட்டுச் சொல்லில் சாவித்ரியைப் பற்றி ஒரு விரிவான பதிவை இங்கேயே படிக்க முடியும்.

    ReplyDelete
  3. உங்களுடைய அருமையான வேண்டுதலையும், அன்னையின் அற்புதமான செய்தியையும், பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. அன்னையின் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  4. \\உனது அருளும் ஒளியும் எங்கும் நிறைந்திருப்பதை அறிவேன் அம்மா! \\

    அன்னையை வணங்குகிறேன்..

    ReplyDelete
  5. நானும் எங்கள் அறையில் அன்னையின் படம் வைத்து மலர்கள் இடுகின்றேன். பாண்டிக்கும் சென்றுள்ளேன். நல்ல கட்டுரை நன்றி அய்யா.

    ReplyDelete
  6. உலகின் அனைத்து அன்னையர்களையும் வணங்குகிறேன்

    ReplyDelete
  7. அன்னையர் அனைவருமே வழிபடத் தகுந்தவர்களே!
    உண்மைதான், திரு.சபரிநாதன்! ஆனால் ஸ்ரீ அரவிந்த அன்னையை அப்படிப் பொதுமைப்படுத்தி, அவ்வளவு தான் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
    அவளை ஏற்றுக் கொண்டவர்களுடைய வாழ்க்கையில், அவளே எல்லாமும் ஆகிப்போனதாய் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. ஆனாலும், அவள் என் வாழ்வில் என் அன்னையாக ஆகிப்போனதை இங்கே மற்றும் இங்கே சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள்.லிங்க் சரியாக இல்லையென்றால், அன்னை என்னும் அற்புதப் பேரொளி என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத்தேடிப்பாருங்கள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!