சொன் ஃபில்! நல்லெண்ணங்களை விதைத்தல்!


நேற்று மாலை, வால்பையனுடைய விடுத்த அழைப்பை ஏற்றுத் தொடர்பதிவை எழுதி முடிக்க நள்ளிரவு ஆகிவிட்டது. அதற்கும் முன்னால், மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் முனைவர் நா.கண்ணன் நல்லதே எண்ணுக என்ற இழையைப் பற்றிய சிந்தனை நேற்றும் இன்றுமாக இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த சிந்தனையின் பாதிப்பு  முந்தைய பதிவில் என்னை அறியாமலேயே எதிரொலித்தது.

முனைவர் நா.கண்ணன், தென் கொரியாவில் இருக்கிறார். தமிழ்மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவர். கவனிப்பாரில்லாமல் அழிந்து வரும் மரபுச் செல்வங்களை, பழைய நூல்களை மின்னாக்கம் செய்து பாதுகாக்கும் உன்னதமான குறிக்கோளோடு செயல்பட்டு வருகிற, ஆரவாரமில்லாமல் உன்னதமான பணிகளைச் செய்துவரும் தன்னார்வலர்களின் குழுமம் இது! இதைப் பற்றி ஏற்கெனெவே  இந்தப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.

முனைவர் நா.கண்ணன், நல்லதே  எண்ணுக என்ற தலைப்பில் ஒரு விவாத இழையைத் தொடங்கி, இப்படி எழுதுகிறார்:

"இணையம் எனும் அவஸ்தை (reality) தோன்றிய காலத்திலிருந்து நான் கண்ட ஒன்று.மின்வெளி என்பது மனப்பரப்பே என்பது  தான். மனதில் காணும் அத்தனை காட்சிகளும் மின்கதிராய் மின்வெளியில் காணக்கிடைக்கிறது. மனப்பயிற்சி அற்றோருக்கு மின்வெளிப் பயிற்சி நல்ல வைத்தியமாகும். மின்வெளியில் நல்லது சிந்தித்தால் மானுடத்திற்கு நல்லவே விளையும்.

இதே கருத்தை முன்னிறுத்தி கொரியாவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் சொன்பில் என்பது. 

[வழக்கம் போல் ஆங்கிலத்தில் எழுதும்போது Sunfull என்று எழுதுகிறார்கள்!]  

இது பற்றிய சேதி"

நல்லதை நாடு கேட்கும்!

இப்படி ஒரு படத்தலைப்பை வைத்து எம் ஜி ஆர் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது என்று நினைவு. நாடு கேட்குமோ கேட்காதோ என்ற சந்தேகமோ என்னவோ, எம் ஜி ஆர் இந்தப் படத்தை எடுக்கவில்லை.ஆனால் 1991 இல் வெளியான திரைப்படப் பட்டியலில், இப்படி ஒரு திரைப்படம் வெளியானதாக ஒரு தகவல் இருக்கிறது. 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

இப்படித் திருவள்ளுவர் முதற்கொண்டு, எண்ணம்போல வாழ்வு என்று சித்தர்கள் நெறியும், நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்று உபநிஷதக் கருத்துக்களும் காலகாலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான்  இருக்கின்றன.

சமீபகாலத்தில், உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, எளிய முறை குண்டலினி யோகம், காயகல்பப் பயிற்சி என்று சொல்லிக் கொடுத்த வேதாத்திரி மகரிஷி, ஒருவருக்கொருவர் முகமன் கூறுவதாக, வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததும் உண்டு.

இப்படி நேர்மறையாக எண்ணவோட்டங்களை வளர்த்துக் கொள்வது, மனித வாழ்க்கையில் வெற்றிக்கு மட்டும் அல்ல, மன  நிம்மதியையும், ஒருமையையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நார்மன் வின்சென்ட் பீல் என்ற நூலாசிரியர் தன்னுடைய     புத்தகத்தில் சொல்கிறார்.

இந்தச் சுட்டியில், புத்தகத்தின் சில பகுதிகளை இங்கேயே படிக்க முடியும்.
 
நல்லதையே நினை, நல்லதையே பார், நல்லதையே செய் என்று சொல்வது இங்கே நிறையப்பேருக்கு ஏளனமாகப் படுகிறது. எதற்கும் பயனில்லாத வெற்று உபதேசங்கள்,  நம்பிக்கை என்பதே ஒரு விதமான மூடத்தனத்தை வளர்க்கும் முயற்சி, ஏதோ ஒரு ஈயத்தின் சதி, என்றெல்லாம் பேசுகிறவர்கள், ஏளனம் செய்கிறவர்கள் இங்கே இணையத்திலும் நிறைய இருக்கிறார்கள்.

எதையெடுத்தாலும் ஒரு எதிர்மறையான சிந்தனை, அவநம்பிக்கையை வளர்ப்பது, கூட்டமாக வந்து வார்த்தைகளில் குத்தி குதறுவது, மாற்றுக் கருத்து மீது கொஞ்சம் கூட சகிப்புத்தன்மையோ, புரிந்துகொள்கிற முயற்சியோ இல்லாத ஒருவிதமான இணைய வன்முறையை, வக்கிர மனங்களில் வெறுப்பை உமிழும் போக்கை, இங்கே தமிழ்ப்பதிவுகளில் பார்க்க முடிகிற மாதிரியே, கொரியாவிலும் இங்கே இருப்பது போலவோ இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ இருக்கிறது.

இணையத்தில் அதிகரித்துவரும் இத்தகைய வக்கிரமான வன்முறை நிறைய உயிர்களையும் பலி கொண்டிருக்கிறது. நிறைய சேதத்தை, தன்னம்பிக்கை இழக்கச் செய்து கொண்டிருப்பதை அங்கே இணையத்தைப் பயன் படுத்துகிறவர்கள் கவலையோடு கவனித்ததோடு நின்று விடாமல், எதிர்மறைச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுத்து, செயல்படுத்தியும் வருகிறார்கள்.

எப்படி? தடா, பொடா சட்டங்கள் மாதிரிக் கடுமையான சட்டங்கள் மூலமாகவா, என்றால் இல்லை. 


நாளும் ஒரு நல்ல சிந்தனையை எழுதுவது, படிப்பது, இந்த செய்தியைப் பரப்புவது என்று ஒரு தன்னார்வ இயக்கமாகவே கொரியாவில் நடத்தி வருகிறார்கள்! புரட்சிகரமான மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற மகத்தான உண்மையை,  நல்ல ஒரு சிந்தனையை, எண்ணத்தை, வாழ்த்துக்களைப்  பரிமாறிக் கொள்வது  மூலமாக நல்லதொரு தொடக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

சொன் ஃபில் என்ற வார்த்தை சுயிம்சே என்ற இயக்கத்தின் அடிப்படையில் ஆனது. உற்சாகமூட்டுவது என்று கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நல்ல பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது  பலே, பேஷ், சபாஷ், ஆஹா என்றெல்லாம் உற்சாகப் படுத்துகிற ஒலி மாதிரி, கொரிய இசையில், தாளவாத்தியக் காரர், பாடுகிறவர்களையும் ரசிகர்களையும் உற்சாகப் படுத்துகிற முறைக்கு சுயிம்சே என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 

சொன் ஃபில் இயக்கத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகத்தை இங்கே பாருங்கள்:

1. Basic Concept of Sunfull

'Sunfull' means positive comments. It also means posting encouraging comments on the vicious posts to comfort the writer of original articles. It includes good words and deeds on the Web, stemming from a good heart and soul.

The Sunfull Movement aims to increase awareness of the impact that anonymous derogatory messages have on victims, although healthy criticism is sometimes necessary. Also, it aims to increase the practice of posting positive and encouraging messages on boards to change users' approach to online communications. Positive comments include posts that are: (1) complimentary, (2) encouraging, (3) comforting, (4) thankful, (5) apologetic and (6) forgiving.

2. The Background of Sunfull Movement: Chuimsae Movement

The Sunfull Movement is a social campaign to encourage people to take a harmonious approach to each other. It emphasizes that a positive comment will make the person who wrote it even happier rather than the writer of original article. People who write positive comments for others become happier than the people who receive them. It also teaches that people who bless others are blessed. In fact, it stems from the Chuimsae Movement.

The word, Chuimsae, is derived from an expression used by drummers to encourage singers, as well as to arouse the audience in the Korean traditional form of opera called "Pansori." It is equivalent to "There you go!" or "Attaboy!" The Chuimsae Movement also stresses that people should support others rather than stand in their way. The Sunfull Movement is an online version of the Chuimsae Movement which usually focuses on field-oriented activities.

'Chuimsae' is a Korean call of encouragement, used in a Korean traditional music form called Pansori (a traditional form of opera) where it is used by the drummer to express "Ulsoo", or "Cho-ta" to encourage the singer and arouse the audience."

முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.

இன்னொரு செய்தி இங்கே

முனைவர் நா. கண்ணன், இன்னும் சொல்கிறார்:

"Chuimsae geneன்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல் இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக் கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது. நல்லதே எண்ணும் உள்ளம்.

இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது!

நம் மொழியில் இல்லாத சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene  ஐ ஒளிபடச்செய்வதுதான்.செய்வோம்."

நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க  ஆரம்பிப்போம்!

சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது. 
அழுகையும், ஒப்பாரியும், வன்முறையும் நிறைந்த தொலைக்காட்சி மெகா சீரியல்களைத் தவிர்ப்பது, நம்மூரில் பாதிக்கு மேல் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்.

வரப்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் என்று சொல்லி வைத்தாளே அவ்வைக் கிழவி,அதை மனதில் வைத்துக் கொண்டு, முதலில் நம்மைப் பண் படுத்திக் கொள்கிற  முயற்சியில் நமக்கு நாமே என்று இறங்கினால் மீதிப் பிரச்சினைகளும் கூடக் குறைந்து விடும்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

என்று ‘ஊக்கம் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கே மனிதர்களின் உயர்வும் அமைகிறது’ என்று வலியுறுத்தும் குறள் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என அறிவுறுத்தியபின் மேலும் முன்னால்சென்று  
இன்னும் தீவிரமான ஒரு படிமத்தை அளிக்கிறது 

இதைப் படிக்க  வருகிற நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நண்பர்களுடன்,  இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! நல்ல எண்ணங்களை விதைப்பதில் உங்களுடைய பங்களிப்பும் இருக்கட்டும்!  

A good deed is sweeter to the heart than a sweet in the mouth. A day spent without doing a good deed is a day without a soul.

The Mother
Sri Aurobindo Ashram, Pondicherry
(16 October 1951 )  


6 comments:

 1. சுயிம்சே! வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 2. "நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க ஆரம்பிப்போம்..."

  நன்கு கூறீனீர்கள், ஐயா.

  இன்னம்பூரான்

  ReplyDelete
 3. நல்ல பதிவு. இதன் சம்பந்தமாக (சம்பந்தம் உண்டு என்று எண்ணுகிறேன்) என்னுடைய பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.

  http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html

  ReplyDelete
 4. //நல்லதையே நினை, நல்லதையே பார், நல்லதையே செய் என்று சொல்வது இங்கே நிறையப்பேருக்கு ஏளனமாகப் படுகிறது. எதற்கும் பயனில்லாத வெற்று உபதேசங்கள், //

  ஐயா, உங்கள் ஆதங்கம் புரிகிறது.

  நாடே அடிமைப் பட்டுக் கிடக்கும் போது வெறுமன அப்படியே 'நல்லதே நடக்கும்' என நினைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமா ? உலகில் மனிதர்களிடையே சமச்சீர் சமத்துவம் இல்லாத நிலையில் 'நல்லதையே நினை' என்பது வெறும் அறிவுரைச் சொற்களாகத்தானே பார்க்கப்படும், இன்றைக்கு அதிகாரம் செலுத்தும் மேற்கத்திய நாடுகள் எதுவும் ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் இருப்போரைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை. ஐரோப்பிய இன அரசு அவர்கள் நலனை நன்கே அரசியல் ரீதியாகவும் அமைத்திருக்கிறார்கள். ஒரு அமெரிக்கன் பிற நாட்டு குடி நுழைவு விண்ணப்பம் செய்வதற்கும் பிறர் அமெரிக்க குடிநுழைவு விண்ணம் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, குற்றவாளிகளைக் கேட்பதைவிட மிகுதியாகவே கேள்வி கேட்பார்கள் ( ஏன் செல்ல வேண்டும் என்கிற கேள்வியை தவிர்ப்போம், அதற்கான தேவை உள்ளவர்கள் விண்ணப்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது) . உலகெங்கிலும் உள்நாட்டிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் சமச்சீரின்மை இவை பற்றி நாம் கவலையே இல்லாதிருந்தால் மூன்று வேளை உண்டுவிட்டு கிடைத்த நேரத்தில் நம்மால் உபதேசம் பண்ணுவது எளிது (சத்தியமாக பொதுவாகத்தான் சொல்கிறேன், தெரிந்தவர்களை நோகடிக்க என்றுமே விரும்பியதும் இல்லை)

  நல்லதை நினைப்பதற்கு நாம் பாதிப்பற்ற நிலையில் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பாதுகாப்புச் சூழல், வசதி, பிரச்சனை எதுவும் இல்லாமை, தேவையான செல்வம் போன்றவை இருந்தால் அதற்கான வாய்பு இருக்கும். இதைத்தான் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு ஞாயம் தர்மம், அறிவுறைக் கூறுபவர்கள் என்று சொல்லுவார்கள்.

  நீங்கள் குறிப்பிடுவது போல் சிலர் ஏளனமாகப் பேசுவது தவிர்த்துப் பார்த்தாலும், ஒன்றை மறுத்துப் பேசுவதற்கான சமூகக் காரணங்களும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் நான் இந்தக் கருத்தைக் கூறினேன். தவறாகப்பட்டால் மன்னிக்கவும்.

  //நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க ஆரம்பிப்போம்!

  சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது.
  அழுகையும், ஒப்பாரியும், வன்முறையும் நிறைந்த தொலைக்காட்சி மெகா சீரியல்களைத் தவிர்ப்பது, நம்மூரில் பாதிக்கு மேல் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்.
  //
  மனத்தடுமாற்றம் உள்ளவர்கள், முடிவெடுக்கும் திறனற்றவர்கள் எந்த செயலையும் செய்யும் போது தாம் நல்லதைத்தான் செய்கிறோமா, நல்லதைத்தான் நினைக்கிறோமா என்று ஒருமுறைக்கு இருமுறை செயல்படும் முன் யோசிக்கலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன்.

  இணையத்தில் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள்...குறிப்பாக இன்றைக்கு பிறரின் நிர்வாணத்தை எளிதில் இணையம் ஏற்றிவிடும் செல்போன் கேமரா போன்றவை ஆபத்து சூழல்களை, அச்சத்தையும் ஏற்படுத்தித்தான் இருக்கின்றன என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று.

  நா.கண்ணன் ஐயா பற்றி தாங்கள் எழுதிய தகவல்கள் நன்று !

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!