சண்டேன்னா மூணு! மூணுமே ஒவ்வொண்ணும் ஒரு விதமா! இதைப் படித்துக் களைத்துப் போன, அல்லது பார்த்தே களைத்துப் போன என் செல்லக் குட்டி வாசகர்களுக்காக இன்னும் ஒரு மூணு! பெரிசெல்லாம் இல்லை! ரெண்டு படம், ரெண்டே நிமிஷம் ஓடுகிற ஒரு வீடியோ! அவ்வளவுதான்! போன பதிவைப் படிக்கச் சொல்லி, இது "இலவசம்"! பதிவுகளில் கூட இலவசம் அறிவிக்கிற நிலைமையில் தான் தமிழ் வலைப் பதிவுலகம் இருக்கிறது, வயசுக்கு அல்லது பக்குவத்துக்கு வர இன்னும் கொஞ்ச நாளாகும் என்பதைப் புரிந்து கொண்டு கொடுக்கும் சுவாரசியமான இலவசங்கள் இது!
படங்கள் மேலே க்ளிக் செய்து பெரிதாக, தெளிவாகப் பார்க்கலாம்!
அந்த அணில் காமெரா டெலி லென்சுக்குள் முகத்தை உள்ளே நுழைத்து அப்படி என்னத்தைத் தான் தேடுகிறது? லென்ஸ் வழியாகப் பார்த்தால் எடுக்கும் மனிதருடைய மனசுக்குள் என்ன இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றா? அல்லது, லென்ஸ் முகப்பில் திங்கறதுக்கு ஏதோ கெடைச்சது என்றா?
இது இங்கே இருந்து சுட்டது! நன்றியுடன்!
பிரேயர் எல்லாம் சொல்லணுமாமே! அப்படியா?!
சரி! பிரேயர் சொன்னதுனால என்ன ஆச்சு? ரெண்டும் ஏன் இப்படி மல்லாக்க விழுந்து......ப்ரேயரோட எ ஃபக்ட் என்று மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!
இது இங்கே பார்த்தது! அவங்க இங்கேயிருந்து சுட்டாங்களாம்! ரெண்டு பேருக்கும் நன்றி! மல்லாக்க விழுந்து கிடந்து இல்லை! சாதாரணமாக, நேரே நிமிர்ந்து நின்று தான்!
ஒ அமெரிக்கா! அமெரிக்கான்னதுமே ஆச்சரியங்கள் தான்! அணுகுண்டு விஷயம் ஆனாலும் சரி, கிளிண்டன்- மோனிகா லெவன்ஸ்கி விவகாரம் மாதிரி நமட்டுச் சிரிப்போடு பார்க்கிரதானாலும் சரி! இடதுசாரி ஆதரவாளனாக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காஎன்றால் அப்படி ஒரு ஆர்வம்!Obsession!
இந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் அதையே தான் சொல்லுவீங்க!
மூன்றுமே நல்லா இருக்கு... மூன்றாவது "உன் கண் உன்னை ஏமாற்றினால்"....
ReplyDeleteஇரண்டாவது "கடமையைச் செய்...செய்யும் தொழிலே தெய்வம்.."
முதலாவது..."நீ என்னை அருகில் பார்த்தால் நான் உன்னை தூரத்தில் வைத்துப் பார்ப்பேன்.."
@ஸ்ரீ ராம்
ReplyDeleteமுதலாவது படத்துக்குக் கருத்து பொருந்தவில்லையே? என்னருகே நீ இருந்தால், உன்னை விட்டு வெகுதூரம் ஓடிப் போவேன் என்று பாட்டுப் பாடுகிற மாதிரியாகவா அந்த அணில் முகத்தை உள்ளே நுழைத்துக் கொண்டிருக்கிறது?
ரெண்டாவதுமே கூட என்னமோ பேசி வச்சுப் பக்கம் பக்கம் ஃபிளாட் ஆனமாதிரித் தெரியவில்லை?
மூணாவது ரொம்ப சரி! கண் ஏமாத்தினது சரி! நடுவர் குழுவில் இருக்கும் அந்த கறுப்பழகி மட்டும் ஏன் கடைசி வரை மந்திரிச்சு விட்ட கோழி போலப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் ?
பைனாகுலரின் ஒருபக்கத்திளிருந்து பார்த்தால் பக்கத்தில் தெரியும் பிம்பம்,சரி. அப்படியே திருப்பி அந்தப் பக்கம் வழியாக பார்த்தால் அதே பொருள் தூரத்தில் தெரியும்...அப்படிப் பார்த்ததில்லையா?
ReplyDeleteஇவருக்கு அருகில் தெரியும் அணில் கான்கேவில் இவர் கண்ணை தொலைவில் பார்க்கும்!
@ஸ்ரீராம்
ReplyDeleteபைனாகுலார்ல அது சரி! காமெராவில்...?பக்கத்திலேயா தூரத்திலேயா என்று நாம் இருவர் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!
அந்த அணிலும் சரி, காமெராவில் படம் எடுப்பவரும் சரி, இன்னும் எதையோ தெளிவாகப் பார்க்க முடியுமா என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பதுபுலப்படவில்லையா?