இன்றைய பதிவில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக சில காணொளிகளைத் தர விரும்புகிறேன். ஒரு ஊடகக் காரராக தன்னுடைய தனித்த அடையாளத்தை WIN News மதன் ரவிச்சந்திரன் எட்டிப்பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும், அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனுடன் அவர் நடத்துகிற இந்த வீடியோ 31 நிமிடம்
கிருஷ்ண பிரபு
தன்மீது குத்தப்படும் கட்சிசார்பு முத்திரைகளைப் புறம் தள்ளிவிட்டு, ஒரு ஊடகக்காரராக மதன் ரவிச்சந்திரன் பரிமளிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது சந்தோஷப் படவேண்டிய ஒரு நல்ல செய்தி. அதேமாதிரி அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனும் கேள்விகளை மென்மையாக எதிர்கொள்கிற விதம்கூட மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது .
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி! மகாகவி சுப்ரமணிய பாரதியாரைத் தவிர இப்படி எத்தனை பேரால் சொல்லிக் கொள்ள முடியும் சொல்லுங்கள்! மகாகவியின் 137 வது பிறந்த தினம் டிசம்பர் 11 ஆம் தேதி வருகிறது. அதையொட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த பொன் மாலைப்பொழுது நிகழ்ச்சியில் எழுத்தாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் உரையாற்றியதன் காணொளி இங்கே வீடியோ 90 நிமிடம்
நண்பர்கள் போற்றிய பாரதி என்பது தலைப்பு. எழுத்தாளர் கடற்கரய் ஒரு பத்திரிகையாளர். சமீப காலத்தில் பாரதி, வஉசி, காந்தி இவர்களைப் பற்றிய நூல்களை எழுதி சந்தியா பதிப்பக வெளியீடாக வந்து இருப்பதை நண்பர்களுடைய கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மாணவர்களிடத்தில் பாரதியார், வ உ சிதம்பரம் பிள்ளை பற்றி இவர் உரையாற்றி வருவதை அறிந்திருந்தாலும், இவருடைய பேச்சைக் கேட்பது எனக்கும் இதுவே முதல்முறை.
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் இப்படி எழுதியிருக்கிறார்:
ஒரு படம் வந்துவிட்டால் எல்லா எழுத்தாளர்களும் முதல்நாள் முதல் ஷோ பார்த்து எழுதுகிறார்கள். ஆனால் ஆகச் சிறந்த ஒருநூல் வெளியானால் கூட ஒரு சினிமாகாரனும் வாய் திறப்பதில்லை.
KN Senthil கூட இதே போன்ற கருத்தைத் தமிழ்ப் பொதுச் சமூகத்தின் மீதும் வைத்திருந்தார்.
So called இலக்கியவாதிகள் தனது சினிமாவைச் சிலாகிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் எதிர்பார்ப்பதும், so called திரை ஆளுமைகள் தனது கதைகளையும் புத்தகங்களையும் சிலாகிக்க வேண்டும் என்று இலக்கிய சூழல் எதிர்பார்ப்பதும் நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனைதான்.
மரியாதை நிமித்தமான கொடுக்கல் வாங்கல்கள் இங்கு மிக அரிதாகவே இருக்கிறது.
தொழின்முறை திரைக் கலைஞர்களான நாசருக்கோ, கமல்ஹாசன், கரு. பழனியப்பன், சமுத்திரக் கனி, மனோபாலா, ரோகினிக்கோ, பா. ரஞ்சித்துக்கோ, சசி, விஜய் சேதுபதிக்கோ ஒரு புத்தகத்தை மரியாதை நிமித்தமாக அனுப்புகிறீர்களா!? இதுபோல வாசிப்பில் ஆர்வம் இருக்கும் எத்தனை திரை ஆளுமைகள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்களுக்குப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா!?
"கொள்ள கொள்ளயா சம்பாதிக்கிறாங்களே. அவங்களே வாங்கிக்க மாட்டாங்களா"
புத்தகம் வாங்கக் காசில்லாமல் இல்லை. விஷயம் வாங்கிக்கொள்வதைப் பொருட்டு இல்லை. விஷயம் மரியாதை நிமித்தமானது.
~~~
விகடன், குமுதம், குங்குமம், வண்ணத்திரைக்கு காம்ப்ளிமெண்ட் டிக்கெட்டை அனுப்பும் - சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் - பி.ஆர்.ஓக்கள் தீவிர இலக்கிய இதழ்களுக்கு ப்ரிவிவ்யூ ஷோவுக்கான காம்ப்ளிமெண்ட் டிக்கெட்டை அனுப்புகிறார்களா!?
தியேட்டருக்குப் போயி டிக்கெட் எடுத்துப் பார்க்க காசில்லாமல் இல்லை. விஷயம் மரியாதை நிமித்தமானது.
படப்பெட்டி, அயல் சினிமா, படச்சுருள், ஸ்ருதி டிவி என சினிமா சார்ந்த இதழ்களாகட்டும், காலச்சுவடு, உயிர்மை, கணையாழி, ஸ்லேட், கல்குதிரை என இதழ்கள் ஒரு 50 இருக்குமா? இவர்களை ஏன் திரை ஆட்கள் சீண்டுவதில்லை.
~~~
ஓவியம், பரதம், இசை என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.
~~~
யாரும் யாருடனும் இல்லை
இருக்கவும் தேவையில்லை
இருக்கவும் தேவையில்லை
என சமூகம் நகர்கிறதா?
~~~
படைப்புகளைக் கடுமையாக விமர்சிக்க ஒரு பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அது இங்கு யாருக்கும் இருப்பதுபோலத் தெரியவில்லை. அதுதான் கொடுக்கல் வாங்களில் இருக்கும் பிரச்சனைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி இருக்கிறது.
வாசிக்க விரும்புகிற புத்தகம் இது.
மூணுன்னு சொல்லி ரெண்டுதானே இருக்கு என்று கேட்க நினைக்கிறீர்களா? மூன்றாவதாக எழுத்தாளர் கடற்கரய் எழுதிய இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!