கரு "நாடகம்" அடுத்தது என்ன? மஹாராஷ்டிரா தானா?

கர்நாடகத்தில் எடியூரப்பா தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். பணப்பை சிவகுமார் இருந்தும் கூட காங்கிரசால் 2 தொகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.  சித்தராமையா சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

 மூன்று கோமாளிகள் சித்தராமையா ராஜினாமாவைப்பற்றி பிஜேபியின் சம்பிட் பட்ரா நக்கலாக ட்வீட்டியிருப்பது சிரிப்பை வரவழைத்தாலும், சிவசேனாவின் சஞ்சய் ராவத்தை சீண்டியிருப்பது, சூசகமாக எதையாவது சொல்கிறதா?


    
கார்டூனிஸ்ட் அமரன் இங்குள்ள ஊடக அறம் எப்படிப் பட்டது என்பதை நன்றாகவே படம் வரைந்திருக்கிறார். 

ஊழலுக்கெதிரான தினமாக இன்று டிசம்பர் 9 அனுசரிக்கப் படுவதை காங்கிகள் மிகப்பொருத்தமாக ஊழலின் மொத்த உருவான சோனியா பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்களாம்!! 


பாராளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருக்கும் குடியுரிமை மசோதா ..
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மாற்று மத அடிப்படையில் அடக்குமுறைக்கு ஆளாகி வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகும் இந்து / சீக்கிய/ பௌத்த / ஜைன/ கிறித்துவ மக்களுக்கு ..இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யும் மசோதா இது.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 3 நாடுகளும் இஸ்லாமிய நாடுகள். இவற்றில் இருந்து மாற்று மத அடிப்படையில் ஒடுக்குமுறையை சந்தித்து வெளியேறும் மக்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக தான் இருக்க முடியும்.
மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி, வட கிழக்கு மாநிலங்கள்..ஆரம்பித்து இந்தியா முழுவதும் பரவிவரும் / நிலவும் திட்டமிட்ட முறையில் ஏற்படுத்தப்படும் சட்ட விரோத குடியேறிகளின் பிரச்சினைக்கு...
நிர்வாக ரீதியாக திட்டமிட்ட முறையில் எடுக்கப்படும் தீர்வு இது.
வாக்குவங்கி கட்சிகள் எதிர்க்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
மேலே நியூஸ் 7 செயதியில் கணக்கு டாலியாகலியே! கூட்டினா 543 வரலையே! மிச்சமிருக்கறவங்க எங்கே போனார்களாம்? திருமாவளவன் இன்னும் ஜெர்மனில தானா அல்லது ஊர் திரும்பியாச்சா? வெளிச்சம் டிவி கூட சரியான தகவலைச் சொல்லமாட்டேனென்கிறதே! 

  
ஆர்னாப் கோஸ்வாமி நேற்று குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி நடத்திய விவாதம் வீடியோ 84 நிமிடம். எதற்கும் ஒரு முறை பார்த்து விடுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!