கமல் காசர் தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒருவருட காலத்துக்கும் மேலானதில் எடுத்திருக்கிற அரசியல் முடிவுகளில் நாளை திமுகவும் கூட்டணி உதிரிகளும் நடத்த உத்தேசித்திருக்கிற கண்டனப்பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது ஒன்றுதான் உருப்படியானது. கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொள்வதில் தன் அரசியல் எதிர்காலம் காணாமல் போய்விடும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். இன்னொரு உதிரியாகி விடுகிற விபத்திலிருந்து கமல் காசர் தப்பித்து விட்டார். தப்பித்தது கமல் மட்டுமே அல்ல, இசுடாலினும் தான்!
Wanted ஆக போலீஸ் ஜீப்பில் ஏறுகிற வடிவேலு காமெடி மாதிரி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு காமெடி செய்திருக்கிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுகவின் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார். அவர் தற்போது சென்னையில் இல்லை. கர்நாடகத்தில் படப்பிடிப்பில் உள்ளார் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். கமல் பங்கேற்காதது கூடக் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் இசுடாலினுக்கு இது கேவலத்துக்கு மேல் கேவலப்படுகிற நேரம் போல!
இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சென்சேஷனல் செய்தியாக அடிபட்ட ஒரு பெயர் சந்திரசேகர் ஆசாத். குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக டில்லி ஜமா மசூதியில் நடந்த போராட்டத்தில் முகம் தெரிந்த நபர் இவர். பீம் ஆர்மி என்ற அமைப்பை நடத்திவரும் இவரை போலீசார் கைது செய்த நிலையில் தப்பிவிட்டதாக செய்திகள் வந்தன. அப்புறம் மறுபடி கைது செய்து விட்டதாகவும்! உத்தரப் பிரதேச அரசியலில் வளர்ந்து வரும் தலித் இளைஞர். சேகர் குப்தா இவரைக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பீடு செய்கிற மாதிரித் தான் எனக்குப் படுகிறது. வீடியோ 15 நிமிடம்.
H ராஜாவுக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள்தான், அவரை கொச்சையாக விமரிசிப்பார்கள், கேலி பேசுவார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளில் விவரம் தெரிந்தவர், சொல்ல வந்த கருத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பேசக்கூடியவர். CAA குறித்து இந்த 42 நிமிட வீடியோவில் மிகத் தெளிவாகவே சொல்கிறார். கவனித்துக் கேட்க வேண்டிய காணொளியாக இதைப் பரிந்துரைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
// கமல் பங்கேற்காதது கூடக் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் இசுடாலினுக்கு இது கேவலத்துக்கு மேல் கேவலப்படுகிற நேரம் போல! // :))))
ReplyDelete