#காமெடிடைம் கொஞ்சம் அமெரிக்கா! கொஞ்சம் நம்மூர் அரசியல்!

நண்பர் பந்து எனக்குப் பரிந்துரை செய்திருந்த The Great Hack என்கிற Netflix documentary குறித்து இந்தப்பதிவில் கொஞ்சம் பேசியிருந்தது நினைவிருக்கிறதா? இப்போது அதன் இரண்டாவது வெர்ஷனா அல்லது சீரியசாகவே காமெடி செய்கிறார்களா என்று புரியவில்லை, அதே மாதிரி வடிவம் ஒன்றைப் பற்றிய செய்தி ஒன்றை இன்று காலை படித்தேன். அதாவது 2020 அதிபர் தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என்ற மாதிரியான கணிப்பு! நிஜமாகவே இது கணிப்பா? அல்லது அமெரிக்க மக்கள் மீதான சாபமா?


If this plays out it will prove five trends America first has deep resonance The deep state is shallow American media is way way out of touch Globalization is in full retreat International relations precarious like in 1914 one spark and boom!

சில ஆனால்/இப்படி இருந்தால் என்கிற நிபந்தனைகளும் இந்தக் கணிப்புக்கும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.  "If voters were to vote primarily on the basis of their pocketbooks, the president would steamroll the competition, taking home 351 electoral votes to the Democrats’ 187, assuming average voter turnout," the document states. "This shows the importance that prevailing economic sentiment at the household level could hold in the next election."The caveat comes in the form of voter turnout. The report claims that if turnout among Democrats and independents match their maximum historical highs, Trump would lose in a tight race." என்று அந்தக் கணிப்பு சொல்கிறதாம்! Moody's said they have corrected their turnout models from 2016, which caused the forecast to incorrectly predict a victory by Hillary Clinton. என முந்தைய தேர்தலில் தவறாகக் கணித்த விதத்தை சரிசெய்துகொண்டுவிட்டதாகவும் சொல்வதைக் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இத்தனைக்கும் சிரியா விவகாரம் உட்படப் பல விஷயங்களில்    டொனால்ட் ட்ரம்பின் முடிவுகளுக்கு  அவரது ரிபப்லிகன் கட்சியிலேயே ஆதரவில்லை என்பதையெல்லாம் வாக்களிக்கும் ஜனங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அமெரிக்கத் தேர்தல் முறையின் வினோதம்! அதை விட பராக் ஒபாமா கனடாவில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வரவேண்டும் என்று ட்வீட்டி இருந்தது செம காமெடி!

I was proud to work with Justin Trudeau as President. He's a hard-working, effective leader who takes on big issues like climate change. The world needs his progressive leadership now, and I hope our neighbors to the north support him for another term.
11:28 PM · Oct 16, 2019 
ஒபாமா சொன்னால் போதுமா?

On the one hand, was very popular with Canadians, so this probably helps . On the other hand, he repeatedly endorsed too, and that didn’t help at all. #cdnpoli
#elxn43
#USPolitics
1:25 AM · Oct 17, 2019 
பதில் எப்படி வருதுன்னும் பாருங்க!


ராகுல் காண்டி இன்னமும் ஒரு பொறுப்பான அரசியல் செய்யத் தெரிந்தவராக முதிர்ச்சி பெறவே இல்லை. ஆதாரம் இல்லாத விஷயங்களைப்பேசுகிறார், களத்தில் நிற்காமல் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுகிறார் இந்த மாதிரி கல்லெறிந்துவிட்டு ஓடுகிற சிறுபிள்ளைத்தனத்தை எத்தனைகாலம் தான் சகித்துக் கொண்டிருப்பதாம்? நீங்களே சொல்லுங்கள்! மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராகுல் காண்டிக்கு, லோக்சபா தேர்தல்களில் எடுபடாமல் போன அதே பல்லவி, மோடி ஒரு திருடன் என்று கூவுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லையாம்! இந்தமுறை பிக்பாக்கெட் என்று சொன்னாராம்! பிஜேபி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறது. செய்து என்ன புண்ணியம்? ராகுல் காண்டி வயசுக்கு வந்துவிடப் போகிறாரா என்ன!!  காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பரப்புரை என்று நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டாலும் , மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீடியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது நிகழ்நேரக் காமெடியாக நேரலையில் நடந்து கொண்டிருக்கிறது. 

    
பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் வாயைத்திறந்து பேசாதவராக சோனியா கும்பலால் அடக்கி  வைக்கப்பட்டு இருந்த மன்மோகன்சிங்குக்கு  இப்போதுதான் பேச அனுமதி கொடுத்திருக்கிறார்கள் போல! ஆனால் பிரதமராக இருந்த நாட்களிலேயே எதுவும் செய்யமுடியாதவராக இருந்தவரிடம் நிருபர்கள் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் பேசச் சொல்கிறார்கள், பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரம்  பற்றிக் கேட்கிறார்கள் என்பது ஆகப்பெரிய காமெடி! சோனியாG  காங்கிரசுக்கு வாய்த்த அடிமைகள் இப்படி என்றால், காசுக்கு கூவும் ஊடகங்கள்   நிருபர்களின்  யோக்கியதை அதைவிடப் படுமோசம்!  

மீண்டும் சந்திப்போம்.           

4 comments:

  1. முதல் தலைமுறை சேர்க்கும். இரண்டாவது தலைமுறை பாதி உழைக்கும். மீதி அனுபவிக்கும். மூன்றாவது தலைமுறை முழுமையாக அனுபவிக்கும். நான்காவது தலைமுறையில் அதுவரையிலும் சேர்த்த சொத்து புகழ் கௌரவம் அனைத்தும் காற்றில் கரைந்து போய்விடும். உழைக்கத் தோன்றது. உன்னதமான விசயங்கள் பிடிக்காது. புரிபடாது. நன்றாக யோசித்துப் பாருங்கள். 2004 முதல் ராகுலுக்கு காலம் வாய்ப்புகளை வாரி வாரி வழங்கியது. ஏன் அவரால் முடியவில்லை. காரணம் மேலே சொன்னது தான். காலம் கழிவுகளை சுமக்க விரும்பாது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!
      இந்த ஆராய்ச்சியை இபின் கால்தூன் என்கிற 14வது நூற்றாண்டு அரேபியச் சிந்தனையாளர் செய்து முடித்து விட்டதாக ராமச்சந்திர குகா கொல்கத்தா டெலிகிராப் நாளிதழில் எழுதிய கட்டுரையைக் குறித்து இந்தப் பக்கங்களிலேயே இரு பதிவுகள் முன்னரே எழுதியிருக்கிறேனே! வாரிசுகளைப் பற்றி அத்தனை மட்டமாக நான் எடைபோடுவதில்லை.

      உதாரணமாக இந்திரா நேருவுக்குப் பெயரளவில்தான் மகள்! அப்பனுக்கும் மகளுக்கும் நேரெதிரான குணாதிசயம், அரசியல்! அதேபோல இந்திராவும் சஞ்சய் காண்டியும்! ராஜீவ் மாதிரியே ராகுலும் கூட மாற்றங்களைச் செய்ய விரும்பியவர்கள் தான்! ஆனால் முடியவில்லையே! அரசியல் குழப்பங்களை அத்தனை சுளுவாகப் பொதுமைப்படுத்திவிட முடியாது.

      Delete
  2. இந்தியாவைப் பொறுத்த அளவில் டிரம்ப் வருவதே நல்லது என்கிற கருத்து நிலவுகிறதே.....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! நீங்கள் சொல்கிற தகவல் புதிதாக இருக்கிறதே!
      டொனால்ட் ட்ரம்ப் மீது இந்திய ஜனங்களுக்கு அத்தனை அபிமானமா? அமெரிக்க அரசியலில் பொதுமைப்படுத்திச் சொல்வதென்றால் டெமாக்ரட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய விவகாரங்களில் அனாவசியக் குறுக்கீடுகள் செய்கிறவர்களாகவுமே இன்று வரை இருந்து வருகிறார்கள். ரிபப்லிகன் கட்சியினர் அந்த அளவுக்குப் போனதில்லை. அதற்குமேல் இங்கே அமெரிக்க அரசியலில் ஈடுபாடுள்ள இந்தியர் எவரையும் நான் காணேன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!