சண்டேன்னா மூணு! #கருத்து #சுதந்திரம் #அரசியல்

பிஜேபியின் முந்தைய ஐந்தாண்டுகளில்  கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக, மாற்றுக்கருத்து சொன்னால் தேச துரோகி பட்டம் கட்டப்படுவதாக நிறைய கூக்குரல்கள் தொடர்ந்து ஒரு தம்பட்டமாகவே அடிக்கப்பட்டு வந்த கதை, தொடர் கூத்து  நினைவிருக்கிறதா? இப்போது அதன் 2வது சீசன் ஆரம்பமோ? ஆனால் முதல் சீசன் மாதிரி அல்லாமல் 2வது சீசன் ஆரம்பித்த அடுத்த கணமே புஸ்வாணமாகிப் போனதை இங்குள்ள ஊடகங்கள் சேனல் விவாதங்களில் சொல்ல மாட்டார்கள்!    


An FIR (First Information Report) was lodged in Bihar's Muzaffarpur on Thursday against nearly 50 celebrities, including Ramachandra Guha, Mani Ratnam and Aparna Sen, who had written an open letter to Prime Minister Narendra Modi raising concern over the growing incidents of mob killing, police said.
The case was lodged after an order was passed by Chief Judicial Magistrate Surya Kant Tiwari two months ago on a petition filed by local advocate Sudhir Kumar Ojha.
"The CJM had passed the order on August 20, accepting my petition upon the receipt of which an FIR was lodged today (Thursday) at the Sadar police station," Mr Ojha said. இது NDTV வெளியிட்ட செய்தி.  யார் இந்த சுதீர் குமார் ஓஜா? 

பிரபலங்கள் மீது பொதுநல வழக்கு  தொடர்வதையே அனேகமாக முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிற ஒரு பிஹார்-முசாபர்பூர் வழக்கறிஞர். சினிமாவில் முத்தக்காட்சி முதற்கொண்டு junk food விளம்பரங்கள் என்று ஆரம்பித்து 745 பொதுநல வழக்குகளை இதுவரை உள்ளூர் கோர்ட்டில் தொடர்ந்திருக்கிறார். இப்படி இவர் தொடர்ந்த ஒரு பொதுநல வழக்கின் மீது சென்ற புதன்கிழமை முசாபர்பூர் தலைமை  ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவின் பேரில்தான் பிரிவு 124 A கீழ் வழக்கும் முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print தளத்திலேயே விரிவான செய்தி சொல்கிறது.  இதற்கும் நரேந்திர மோடி, பிஜேபிக்கு என்ன சம்பந்தம்? ஒரு தகவலை அரைகுறையாகப் புரிந்து கொண்டு அதன் மீது இன்னமும் அரைவேக்காட்டுத் தனமாக விவாதம் நடத்துவது கண்டனக்குரல் எழுப்புவது #தமிழேண்டா இனத்துக்கே உண்டான தனிக்குணமா? கருத்து, சுதந்திரம் இவைகளுக்கு சில முன் நிபந்தனைகள், கடமைகள், பொறுப்பு இருக்கின்றன. அதை மறந்துவிட்டு கட்டற்ற அல்லது கட்டுப்பாடுகளே இல்லாததாக கருத்து, சுதந்திரம் என்பதெல்லாம்  அதீதக் கற்பனை மட்டும்தான் என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை சொல்லி இருப்பதுதான்! மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டியதாகவும்!  



வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர பேச்சாளராக  ராகுல் காண்டியை விட்டால் வேறு ஆளே இல்லை என்று இருக்கும் நிலை! அதுவும் போக ஹரியானா மகாராஷ்டிரா  இரு மாநிலங்களிலும் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் நேற்று இரவு திடீரென ராகுல் காந்தி பாங்காக் நகரம் புறப்பட்டுப்போய் விட்டார் என்பது  கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து நாளிதழில் செய்தி போடுகிறார்களே! இது இந்துவின் கருத்து சுதந்திரமா அல்லது உல்லாசமாக ஓடிப்போவதற்கு ராகுல் காண்டிக்கு சுதந்திரம் இல்லையா என்று எப்போது விவாதம் நடத்தப்போகிறார்களாம்? 


கொஞ்சம் சுவாரசியமான விவாதம்! வீடியோ 45 நிமிடம்.

சண்டேன்னா கொஞ்சம் கலகலப்பு வேண்டாமோ?

மீண்டும் சந்திப்போம்.    
     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!