ஒரே நேரத்தில் மூன்று வலைப்பதிவுகளில் எழுதி வருவது கூடப் பிரமாதமான விஷயமில்லை! ஆனால் எங்கே எப்படி என்ன எழுதினாலும் நாங்கள் எங்களுடைய சாய்ஸ், preference என்னவோ அதன்படிதான் வருவோம், பார்ப்போம்,என்றிருப்பது நண்பர்களுடைய உரிமைதான்! மறுக்கவில்லை! திரட்டிகள் என்றொரு necessary evil தமிழ் வலைப்பதிவுகளுக்கு சமீபகாலமாக இல்லாமல் போன பிறகு, அந்த வெறுமை மிகத்தீவிரமாகி இருப்பது நன்றாகவே புரிகிறது. முன்னொரு காலத்தில் எங்கள் திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள் என்று பத்துக்கும் மேற்பட்ட திரட்டிகளில் இருந்து அழைப்பு வந்த காலமும் இருந்தது. இப்போதோ இருந்த ஒரே ஒரு திரட்டியும் கோமாவில்!
இத்தனைக்கும் இவை வெறும் book marks செயலிகள்தான்! நாமாக ஒரு reading list தயார் செய்து கொள்ள அல்லது எந்த நபர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக என்றே ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ள அதிக நேரமும் பொறுமையும் தேவைப்படுவதில் இதோ அதை நன் எளிமைப்படுத்துகிறேன் என்று அறிமுகமான திரட்டிகளுக்குள்ளும் அரசியல், விளம்பரங்கள் இன்னபிற விஷயங்களே முன்னிலைப்படுத்தப் பட்ட தமிழ்ச் சூழலில் எதுவுமே நிலைத்து நிற்காமல் போனது வருத்தம் தரும் விஷயம்தான்! ஆனாலும் தொடர்ந்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிற எவருமே ஏன் அதைக் களைய முயற்சிக்கவில்லை என்பதும் கூட இன்னொரு வருத்தம் என்பதோடு முடிந்துவிடுகிற கேள்விதானா?
இதே பக்கங்களில் வால் நீளமாக இருப்பது நல்லது என்று ஒரு பதிவையும் எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது. உங்களுடைய நல்ல நண்பர்கள், உண்மையாகவே பின்தொடர்கிறவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு நல்லது, நீங்களும் ஒரு influencer தான் என்ற சிம்பிளான விஷயத்தைச் சொல்ல முற்பட்ட பதிவு அது.
வரப்புயர நீர் உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!
இது இன்றைக்கு ஒரு திங்கட்கிழமைச் சிந்தனையாக! என்னத்த சொல்ல என்று கடந்து போய்விடுவீர்களா என்ன? !!
நிஜந்தன்! முன்பு பொதிகையில் செய்தி வாசிப்பவராகப் பார்த்திருக்கிறேன். இப்போது MTamil என்கிற யூட்யூப் சேனலில்! இது அவருடைய சொந்த சேனலா அல்லது அதன் முக்கியப் பொறுப்பு எதிலும் . இருக்கிறாரா என்பதெல்லாம் தேவை இல்லாத விஷயம். இந்த 11 நிமிட வீடியோவில் சரியான home work இல்லாத தமிழ் ஊடகங்களுக்கே உரித்தான அரைகுறைப் புரிதலுடன் பேசுவது இதிலும் இருக்கிறது. சென்ற ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் வூஹான் நகரில் சீன அதிபரை சந்தித்துப் பேசியது போல இந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார் சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது என்பது ஏன் என்கிற அபத்தமான தலைப்புடன் கொஞ்சம் தடுமாறித் தடுமாறிப் பேசுகிறார். செய்தியின் பின்னணி, ராஜீய உறவுகளின் சிக்கல்கள் சவால்கள் இப்படி அடிப்படையான விஷயம் என்ன என்றே தெரியாமல் பேசுவது நிஜந்தன் மட்டும் தானா? சீனா எழுபது! என்று இங்கே தொடர்ந்து எழுபதிவுகளில் இந்திய சீன உறவுகளில் உள்ள சிக்கல்களை புரிந்துகொள்ள உதவியாக எழுதிவருவதில், நிஜந்தன் சொல்வதில் என்னென்ன தகவல் பிழைகள், தவறான கற்பிதங்கள் என்று பார்த்துவிடலாமா? முதலில் இது ஏன் சென்னையில் நடக்கிறது? இங்கே #தமிழேண்டா கோஷ்டிகள் நினைப்பதுபோல தமிழ்நாட்டு வாக்குகளைக் குறிவைத்து நடக்கும் நிகழ்ச்சியல்ல! அடுத்தது, மோடி சென்ற ஆண்டு சீனாவுக்குப் போன வூஹான், சுமார் 3500 வருடப் பழமையான நகரம், மக்கள் சீனக் குடியரசாக அறிவிக்கப் படுவதற்கு முந்தைய காலத்தில் சீனாவின் மூன்று தலை நகரங்களில் ஒன்றாக இருந்ததும் கூட! இன்றைய சீனா பழைய வரலாற்றுக் கற்பிதங்களில் நம்பிக்கை உள்ள நாடல்ல! அடுத்தது சீனா ஒரு சோஷலிச நாடு, ஏதோ கொஞ்சம் தளர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக மிகத்தவறான அனுமானம். ஆனால் பொன்மாலை பொழுது
பதிவர் நண்பர் மாணிக்கம் இப்படி ஒரு சான்றிதழ் வழங்கி இருப்பார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!😟😞
இன்று எங்கும் பெருகிவிட்ட ஒரு தலை பட்சமான, நேர்மையற்ற முறையில் பரப்பப்படும் செய்திகளை கண்டு சலித்திருக்கும் போது திரு. நிஜந்தன் அவர்களின் செய்தி தொகுப்பும், செய்திகளை வழுங்கும் முறையும் சிறப்பாக உள்ளது. அப்படியே கொண்டு செல்வது நேர்மையான ஒரு தமிழ் செய்தி ஊடகம் என்று என்று பெயர் எடுக்க ஏதுவாகும்.
அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்கு உங்களையும் நண்பர் மாணிக்கத்தையும் அன்புடன் வரவேற்கிறேன்! சில தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொள்ள இங்கே இதுவரை 30 பதிவுகள் வெளியாகிவிட்டன.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!