இன்று பிடித்தவைகளாக: பார்த்தது கேட்டது படித்தது!

பார்த்ததும் கேட்டதுமாக: திரு. விஜயகுமார் IPS! ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு ஆலோசகராக இதுவரை செயல்பட்டு வந்தவர், இன்று முதல், ஜம்மு காஷ்மீர், லடாக் என்!று  இரு யூனியன் பிரதேசங்களாக உதயமாவதை ஒட்டி ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார். அதையும் ஒரு விகாரமான வதந்தீ ஆக்கியவர்கள் தமிழேண்டா கோஷ்டியினர் என்பது தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனந்தவிகடன் அவருடன் ஒரு நேர்காணலை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன்!

திரு விஜயகுமார் ட்வீட்டரில் அந்த வதந்தீகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது கொசுறு.       
படித்தது: ஒரு நாளிதழில் தலையங்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நாளிதழின் ஆசிரியரோ, ஆசிரியர் குழுவோ, வாசகருடைய கவனத்துக்கு கொண்டு வருகிற செய்தியின் மீதான பார்வை, அதைப் படிக்கிற வாசகருக்கு ஒரு தெளிவை உண்டாக்குகிற விதத்தில் இருக்கும்  அற்புதமான விஷயம், தமிழில் தினமணி ஒன்றைத் தவிர மற்றைய நாளிதழ்களில் மழுங்கிப்போய்விட்ட  ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினமணி தலையங்கத்தில் இருந்து ஒரு சில பகுதிகள் 
18 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தோ்தலை, பொதுத்தோ்தலை எதிா்கொள்வதுபோல எதிா்கொண்டிருக்க வேண்டும். அதிலும், காஷ்மீரின் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, பொருளாதாரத் தேக்கநிலைமை, வேளாண் இடா், வேலையில்லாத் திண்டாட்டம் என்று மத்திய பாஜக அரசின் பலவீனங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டக் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக இந்தத் தோ்தல்களைக் கட்சித் தலைமை அணுகியிருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் தரப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என்பதைப் பொது விவாதமாக்கியிருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டது காங்கிரஸ்.
மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரையில், உள்கட்சிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி, தோ்தல் பிரசாரத்தைத் தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விட்டுவிட்டு, கோஷ்டிப் பூசல்களை சமாதானப்படுத்துவதில்தான் தனது நேரத்தைச் செலவழித்தது. பிருத்விராஜ் சவாண், அசோக் சவாண் இவா்களுக்கிடையேயான போட்டி இருந்ததே தவிர, பாஜக - சிவசேனை கூட்டணியை எதிா்கொள்வதில் முனைப்புக் காட்டவில்லை.................
ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சி இருந்தாக வேண்டும். பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்றுக் கட்சியாகக் காங்கிரஸால் மட்டுமே இருக்க முடியும். சோனியா குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக முடியும். அந்தக் குடும்பம் சற்று விலகி, அதற்கு வழிகோல வேண்டுமே. முழுதும் படிக்க இங்கே 

சற்றே சிரிக்க 


"சரியா எட்டரை மணிக்குப் பிறகு தெலுங்கில பேச ஆரம்பிச்சிடுறார் டாக்டர்'
"சொல்லாதீங்க.ஆளு ஒரு தீவிரத் தமிழ்த்தேசியர்.அதானே?எல்லாம் மன அழுத்தத்தினாலதான் இப்படி நடக்குது"

கருத்துப் படம்  


மீண்டும் சந்திப்போம் 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!