அரசியல் இன்று! சீனாதானா! மகா இழுபறி!

சட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா? வந்தேவிட்டது என்று ஜாமீன் மனுவை இன்று நிராகரித்திருக்கிறது டில்லி உயர்நீதி மன்றம்.


சீனாதானா  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை அடுத்து, அவரது உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு, டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, அவரது உடல் நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் இன்று அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், சிதம்பரத்தின் உடல் நிலை நன்றாக உள்ளது என்றும், மருத்துவ மனையில் சிசிக்கை அளிக்க கூடிய அளவுக்கு உடல் நிலை மோசமில்லை என்றும், அவரது அறையை சுத்தம் செய்து, ஒரு கொசுவலை அளித்தால் போதும் என்று, அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.


அப்புறமென்ன? ஜாமீன் தேவையில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் இன்று முடிவு சொல்லிவிட்டது. கொசு வலையும் வீட்டுச்சாப்பாடும் கிடைக்குமாம்!  


படமென்னவோ பழசுதான்! என்ன  ஆச்சரியம் என்றால்  இதைப் பகிர்ந்திருந்தது ஒரு உள்ளூர் மார்க்சிஸ்ட்!    


சஞ்சய் ராவத் என்னமோ  கொஞ்சம் பழைய  சிவசேனா தெனாவட்டில் பேசுகிறார். ஆனால் சரத் பவாருக்கு இவர்கள் மீது நம்பிக்கையில்லை. பிஜேபியிடம் பேரம் பேசுவதற்கு சும்மா உதார்விடுகிறார்கள் என்றுதான் பரவலான அபிப்பிராயம் இருக்கிறது . ஹிந்து சுரேந்திரா கூட கார்டூனில் அதைத்தான் சொல்கிறார் போல!

   
என்னதான் புலிவேஷம் போட்டுக் கொண்டாலும் பதவி காசு பவிசுக்காக பச்சைப் புல்லென்ன, காய்ந்த வைக்கோலையும் தின்னத்தயாராக இருக்கிற தேசம் இது! 

😷
போஸ்டர் யுத்தம் ஆரம்பித்துவிட்டது என்றாலும் பழைய நினைப்பிலேயே சிவசேனா எத்தனை நாட்கள் தான் காலம் தள்ள முடியும்?

  
தமிழகச் செய்திகள் ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை!

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!