#1100 மண்டேன்னா ஒண்ணு! சிறீலங்கா தேர்தல்! ராமசந்திர குகா!

நேற்றைக்கு சிறீலங்கா அதிபர் தேர்தலில் எதிர்பார்க்கப் பட்டபடியே கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்றிருக்கிறார். சிறுபான்மையினர் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள மக்களுடைய ஏகோபித்த ஆதரவிலேயே ஜெயித்திருக்கிறார். இனி சீனாவின் ஆதிக்கம்  சிறீலங்காவில் தடையில்லாமல் வளரும்  என்பது  இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல தான்!


முகநூலில் பத்திரிகையாளர் மாலன் நாராயணன் கொஞ்சம் விவரமான அலசலை எழுதியிருக்கிறார்.

இந்தப் பதிவு பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன்
இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது.
அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு
இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது.
.
இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்?
அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation)
உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன.
இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது
இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன
இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது
இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்  

சிவப்பில் காட்டியிருக்கிற வரிகளை ஒத்துக் கொள்ள முடியவில்லை. சிறீலங்கா தமிழர்கள் தங்களுடைய முன்னுரிமை எதற்கென்று அவர்களே முடிவுசெய்து கொள்ளட்டுமே! வழக்கம்போல இதற்கும் பின்னூட்டக் கேள்விகள் வந்திருக்கின்றன. மறவன்புலவு க.சச்சிதானந்தம் கொஞ்சம் வாக்குவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதற்கு மாலன் எழுப்பிய பதில் கேள்விக்கு மபு சச்சிதானந்தம் இது வரை பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தை ஒரு தகவலுக்காக வெறும் செய்தியாக மட்டுமே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

Mahatma Gandhi had four sons. All four went to jail during the freedom struggle. None sought political office of any kind in independent India. இப்படி ஒரிஜினல் காந்தியைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஆரம்பிக்கிறார் ராமசந்திர குகா. டூப்ளிகேட் காந்திகள் பற்றி என்ன சொல்ல வருகிறாராம்?


ஒரிஜினல் காந்தியுடன் நெருக்கமாக இருந்த ஜவஹர்லால் நேருவே, காந்தியையோ காந்தீயத்தையோ பின்பற்றவில்லை. தன்னுடைய மகள் இந்திராவை 1957 இல் காங்கிரஸ் தலைவராக்கினார். இதைச் சொல்கிற ராமச்சந்திர குகா கூடவே இன்னொரு விசித்திரமான வாதத்தையும் சேர்த்தே சொல்கிறார். வல்லபாய் படேலுடைய வாரிசுகள், ராஜாஜியின் மகன் இவர்களெல்லோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களே என்றும் சொல்கிறார். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ராமச்சந்திர குகா ஒரு அபிமானி. அதனால் வாரிசு அரசியலைத் தொடங்கிய குற்றம் நேருவுடையது அல்ல என்பதற்காக படேல், ராஜாஜி இவர்களையும் சேர்த்து, இவர்கள் செய்தது சிறிய அளவு என்று சப்பைக் கட்டுக் கட்டத்தான்!

Gandhi’s strong sense of propriety was not shared by other stalwarts of the freedom movement. However, to use your influence to get your son or daughter a parliamentary seat is one thing; to have your family control and dominate your party, quite another. Nehru, Patel, Rajaji, and Pant were guilty of nepotism on a minor scale. It was Indira Gandhi who made nepotism into a defining principle, when she anointed Sanjay Gandhi as her political successor in 1975. When Sanjay died prematurely, Indira brought her other son, Rajiv, into politics, making it clear that if the Congress stayed in power, he would succeed her as prime minister. நேரு பாரம்பரிய வாரிசு அரசியல் பித்து  மோதிலால் நேருவிடமிருந்தே ஆரம்பித்தது  என்பதை வரலாற்று புத்தகங்கள் எழுதுகிற ராமசந்திர குஹா சௌகரியமாக மறந்துவிடுகிறார். 

The Congress of today reminds one of the later Mughals; the emperor and empress in their palace, surrounded by courtiers singing their praises, while, outside, the territory owing allegiance to the ruler shrinks to nothingness. This would be funny, were it not so tragic. The longer the Congress remains a Family firm, the easier it will be for Narendra Modi to deflect criticism of his policies and remain not just in power, but in control of the political narrative. Sonia and Rahul and Priyanka may think they owe it to the Congress to stay in politics. They owe it to the country to go என்று முடித்திருக்கிறார் பாருங்கள்! அதற்காகவே மேலே லிங்கில் ஒருமுறை ராமசந்திர குகாவின் புலம்பலைப் படித்து விடுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

1 comment:

  1. Sir,
    when i went to Srilanka @ 2015 for a business tour.. i was shell shocked to see the massive presence of Chinese in the name of construction and development . If china manages an airport it will take less than 20 minutes to bomb chennai ... as the commercial flight itself was 45 min including ascension... the locals are themselves are aware of this and were petrified about the fact they preferred an indian support rather than chinese support. but i think they got terrified by the fact of Islamic terrorism which had base in tamil nadu and they tilted the support to gotobaya...

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!