ஏதோ பெயரளவுக்கே அரசியல் சாசனம், சட்டம், பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகள் என்று இருக்கிற பாகிஸ்தானில் கூட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆசீப் சயீத் கோசா ராணுவத்தளபதி க்வாமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட விதம் சரியானது அல்ல என்று அரசின் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்ததுடன் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார் என்கிறது செய்தி.
CJP ஆசீப் சயீத் கோசா
The chief justice observed that "the summary and approval of army chief's extension is not correct".The court issued notices to defence ministry, federal government and Gen Bajwa, who is due to retire on November 29 (Friday). The hearing was adjourned until Wednesday. ஜெனெரல் பாஜ்வாவின் பதவி நீட்டிப்பை எதிர்த்து மனுச் செய்த The Jurists Foundation அதை வாபஸ் பெறத்தாக்கள் செய்த மனு இன்றைக்கு தலைமைநீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது அதை நிராகரித்ததோடு, பாகிஸ்தான் அரசியல் சாசனப்பிரிவு 184 (3) இந்த கீழ் suo moto பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டு அரசுக்கும் ஜெனெரல் பாஜ்வாவுக்கும நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக DAWN நாளிதழ் சொல்கிறது. அதை விட தலைமை நீதிபதி உள்ளிட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பாகிஸ்தானின் அட்டர்னி ஜெனெரலைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்கள். படிக்கவே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
அஜித் பவார் இடையிலேயே கைவிட்டு ஓடிப்போன பிறகு பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிஸ் 2வது முறையாகவும் தனது ராஜினாமாக் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். முந்தைய ஐந்தாண்டுகளில் கைசுத்தமான ஆட்சியை வழங்கியவர், பதவிவெறி, பணத்தாசை பிடித்த மூன்று கும்பல்களால் பதவியிறங்க வேண்டிவந்தது சந்தோஷப்படவேண்டிய செய்தி இல்லைதான்! ஆனால் நம்மூர்த்தி தேர்தல் முறை, சட்டங்களை வைத்துக் கொண்டு நல்ல மாற்றங்களுக்கு ஆசைப்பட முடியாது என்பதுதான் சுரீரென்று உறைக்கிற பெருவலி. சரத் பவார் மாதிரியான ஊழல் பெருச்சாளிகளெல்லாம் அரசியல் சாணக்கியராகக் கொண்டாடப்படுவது மிகப்பெரிய கொடுமை.
சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுஹாஸ் பல்ஷிகர் இன்று அரசியல் சாசன தினம் என்பதை ஒட்டி எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை, அரசியல் சாசனமும் சட்டங்களும் நம்மூர் அரசியல்வாதிகளிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடுபடுகிறது என்பதை மஹாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளை வைத்து விளக்குகிறது. அரசியலைப் புரிந்துகொள்ள விரும்புகிற நண்பர்கள் படித்துப் பார்க்கலாம்.என்று சொல்லியிருந்ததை இன்னொருமுறை நினைவு படுத்துகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!