முகநூல் தமிழில் ரத்தபூமியாக ஆபாச வசவுகளின் தனிப் பெருந்திரட்டாக இருந்தாலும் அங்கங்கே வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற, படித்து மறந்து போன தகவல்களை மறுபடி நினைவு படுத்துகிற பகிர்வுகளும் நிறைய இருக்கின்றன என்பதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்! பார்த்ததும் சிரிக்க வைக்கிற மீம்களும் நிறைய உண்டு. முதலில் சிரித்து விடலாம்!
இப்படி ஒரு கேப்ஷனோடு இசுடாலின் முழிக்கிற படத்தைப் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்வதாம்?
சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் கொஞ்சம் மறந்து போன பழைய தகவல்களை எடுத்துக் கொடுக்கிறார்
படித்ததும் பிடித்தது:
ஏக் மார்...தோ துக்கடா...
இதத் தவிற எனிக்கி ஒன்னும் தெரியாதுய்யா!
இதத் தவிற எனிக்கி ஒன்னும் தெரியாதுய்யா!
சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் கொஞ்சம் மறந்து போன பழைய தகவல்களை எடுத்துக் கொடுக்கிறார்
படித்ததும் பிடித்தது:
பால்சாஹேப் தாக்கரே எமர்ஜென்ஸியை ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பை மாநகராட்சி தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சட்டவிரோதமான கட்டிடங்களை இடித்தபோது, அப்போதைய ஆணையருக்கு போன் செய்து நிறுத்தச் சொன்னவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்தால் பிரதீபா பாட்டீலை குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சஞ்சய் தத்துக்கு ஆதரவாகப் பேசினார், எழுதினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்துக்காக ஷரத் பவார் பிரதமராக வேண்டுமென்று சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாப்ரீ மஸ்ஜிதை நாங்கள்தான் இடித்தோமென்று சொல்லிவிட்டு, வழக்கு பாய்ந்ததும் பல்டி அடித்தது எத்தனை பேருக்குத் தெரியும்?
மண்ணின் மைந்தர் என்ற கோஷத்தையும், தென்னிந்தியர் மீதான துவேஷத்தையும் அவர் கைவிடக் காரணம், மும்பை நிழலுலக தாதாக்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஹாஜி மஸ்தான் தொடங்கி, வரதராஜ முதலியார் வரை பால் தாக்கரேயின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர்களால்தான், ‘இனி மராட்டி பப்பு வேகாது,’ என்று ’ஹிந்துத்வா’வைப் பிடித்துக் கொண்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மகாராஷ்ட்ராவில் கொங்கண் பகுதி தவிர்த்து பிற பகுதிகளில் சிவசேனாவை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; பாஜக இல்லாவிட்டால் சிவசேனா மும்பையைத் தாண்டி ஒரு கவுன்சிலர் கூட பெற முடியாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மனிதர் இறந்துபோய் விட்டார்; இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம் என்று அவரை என்னமோ கடவுளுக்கு நிகராக வர்ணிப்பவர்களின் அறியாமையை என்னென்று சொல்ல?
அவரும் ஒரு சந்தர்ப்பவாதிதான்! ஆனால், பின்னாளில் மும்பை நிழலுலக தாதாக்களுக்கு சிம்மசொப்பனம் ஆனார் என்ற ஒரே காரணத்துக்காக அவரைப் பாராட்டலாம். அவ்வளவுதான்.
அப்பாவைப் போல பிள்ளை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
ஒரு வாசகநண்பர் பின்னூட்டத்தில் வந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டுவதில் அன்றைய காங்கிரசின் முன்னெடுப்பில் உருவானது தான் சிவசேனா என்று இந்த லிங்க்கை எடுத்துக் கொடுத்து இருக்கிறார்.
The SS was formed in 1966 with the help of Congress and Bombay industrialists to combat Commie unions in Bombay. BT added another ingredient to it called “Aamchi Mumbai” and non-Marathis to get out. Therefore, the first assault by SS was on Commie union leaders and the non-Marathis (South Indians, Bengalis etc). Many non-Marathi families were violently attacked and driven out of Mumbai.என்று சிவசேனாவின் கதை ஆரம்பம் ஆகியிருக்கிறது
பரத்வாஜ் ரங்கன் விமரிசனமெல்லாம் ச்சும்மா!
ஆமா ENPT மூணு நாலு வருசம் தான லேட்டா வந்துருக்கு? அப்புராணி இளம் ஹீரோயின காமக்காசுவெறி புடிச்ச கார்டியன் ப்ரொடியூசர் கொடும படுத்துற ப்ளாட்லாம் 80ஸ்லயே காலாவதி ஆகிருச்சே... இது அதுக்கு முன்ன எழுதின கதையா?! இன்னிக்கி தேதிக்கு காண்டம்பரரியா எடுக்கணும்னா ப்ரொடியூசர் ஜல்சா வீடியோவ ஹீரோயினே எடுத்து வெச்சுட்டு லீக் பண்ணவானு மெரட்டியே நடிக்க சான்ஸ் புடிக்கற மாதிரிதான் பண்ணனும். டைட்டில் கூட என்னை நோக்கி பாயும் அனகோண்டானு வெச்சா மேட்சிங்கா இருக்கும்.😫
இத்தனை ஷார்ப்பா ஷார்ட்டா விமரிசனம் பார்த்து எத்தனை நாளாயிற்று!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!