இட்லி வடை பொங்கல்! #52 அரசியல்! அரசியல்! அரசியல்!

அரசியல் என்பதே வினோதமான ஒருவிஷயம்! அதிரடி, திருப்பங்கள், சஸ்பென்ஸ் எல்லாமே நிறைந்தது என்றால் நிறைய நண்பர்களுக்கு அது ஏனோ சரிவரப் புரிய மாட்டேன் என்கிறது! ஊடகங்களெல்லாம் ஏறக்குறைய சிவசேனா NCP காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது, உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்கு உரிமைகோர இன்று மாலை மஹாராஷ்டிரா ஆளுநரைச் சந்திக்கிறார் என்றே முடிவு கட்டிவிட்டன.
ஆனால் திடீர்த் திருப்பமாக பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிஸ் இன்று காலை முதலமைச்சராக மறுபடி பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்!


காங்கிரசுக்கு முற்றிலும் விலைபோய்விட்ட NDTV ஒன்றும் செய்யமுடியாமல் மூன்றுமணிநேர செய்தியாக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றதைப் பற்றிய செய்தித்தொகுப்பாக ஒளிபரப்பியிருக்கிறது.  

In the Maharashtra political drama, the biggest loser are the newspapers. They must be looking at their headlines today and cringing.
9:09 AM · Nov 23, 2019Twitter for iPhone  


#BreakingNews Today Saamana will not distribute newspaper as it had already printed news about Uddhav Thackeray becoming CM of Maharashtra.
😂
#MaharashtraGovtFormation #Maharashtra
9:21 AM · Nov 23, 2019Twitter for Android
இன்றைக்கு சிவசேனாவின் சாம்னா நாளிதழை விநியோகிக்க முடியாதே என்று லந்தடிக்கிறார் இவர்!  


சிவசேனாவுடன் NCP, காங்கிரஸ் இருகட்சியினரும் நேற்றிரவு கூடப் பேசிக் கொண்டே   இருந்தார்களே தவிர, சரத் பவாருடைய அண்ணன் மகன் அஜித் பவார் NCPயை உடைத்து பிஜேபியுடன் ஆட்சியமைக்க முந்திக் கொள்வார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. இதிலும் சரத் பவாருடைய மறைமுகக் கைவரிசை இருக்கலாமென்ற சந்தேகம் இப்போது சிலருக்கு வந்து இருக்கிறது.  இது அஜித் பவாருடைய சொந்த முடிவு, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சரத் பவார் ட்வீட்டரில் சொல்லியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் சரத் பவாரும் பிரதமரும் சந்தித்துக் கொண்டபோதே இப்படி முடிவாகிவிட்டதாகவும் NDTV புலம்புகிறது.  

Tweet


Conversation

9:41 AM · Nov 23, 2019Twitter for Android  
சஞ்சய் ராவத் மீதே முழுப்பழியையும் சுமத்துவது ரொம்பவுமே அநியாயம். உத்தவ் தாக்கரே சொல்ல நினைத்ததை வெளியே சொல்லப்பயன்படுத்திய ஊது குழல் மட்டுமே அவர். முழுப்பழியும் சுமக்கவேண்டியது உத்தவ் தாக்கரே மட்டும்தான்!


அரசியல் விவகாரம் அதிரடிகளுக்கு அதிரடியாகவே போய்க் கொண்டிருந்தால் விஷால் நடித்த Action படம் மாதிரி ஊற்றிக் கொள்ளாதோ?  திருஷ்டிப் பரிகாரமாக திருநாவுக்கரசர் காமெடி! கொஞ்சம் relief வேண்டுமில்லையா?

மீண்டும் சந்திப்போம்.     

2 comments:

  1. ஜோதிஜி திருப்பூர்
    Yesterday at 14:26 ·

    சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?

    இன்று பாஜக - தேசியவாத காங் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். இதனைச் சந்தர்ப்பவாதம் என்கிறார்கள். 2014 பாஜக பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகள் (122 சீட்டு) உதவி தேவைப்பட்ட போது அன்றே சரத்பவார் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கின்றேன் என்று முதலில் துண்டு போட்டு வைத்தார்.

    ஆனால் சிவசேனா என்ன அப்போது என்ன செய்தது?

    நாம் இருவரும் பங்காளிகள். நாம் தான் ஒன்றாகச் சேர வேண்டும். எனக்குத் தான் நீங்கள் அந்த வாய்ப்பு தர வேண்டும் என்று நேராக டெல்லிக்கே சென்று ஆதரவு வழங்கினார். அன்றே பாஜக வுடன் இணைய சரத்பவார் மனதளவில் தயாராக இருந்தார். இன்று செயலில் காட்டியுள்ளார்.

    ஆனால் பொதுவெளியில் அவரும் அவர் மகளும் அஜித்பவார் கட்சியை உடைத்து விட்டார் என்று ஓரங்க நாடகம் நடத்துகின்றார்கள்.

    அஜித் பவார் மேல் பாஜக ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தி வழக்கு நிலுவையில் உள்ளதே?

    இந்திய அரசியலில் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு பிரகடனத்தை இப்போது நீங்கள் நினைவில் கொண்டு வந்தாக வேண்டும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. நீதிமன்றம் இறுதியில் தீர்ப்பு வழங்கும் வரைக்கும் அனைவரும் நிரபராதிகளே. மேட்டர் சிம்பிள்.

    காங்கு அவமானப்பட்டதா? சிவசேனா அவமானப்பட்டதா?

    சிவசேனா கட்சியின் கொள்கை என்பது தற்போது கிச்சன் காபினெட் மூலம் எடுக்கப்படுகின்றது. ஒரு பக்கம் மனைவி. மறு பக்கம் மகன். உண்மையான தொண்டர்கள், முதல் கட்ட இரண்டாம் கட்ட முக்கிய தலைகள் அனைவரும் பால் தாக்கரே இறந்தபின்பு படிப்படியாக வெளியே அனுப்பியாகி விட்டது.

    காங்கு மதச் சார்ப்பின்மை என்ற அல்வா கிண்டும். எதிர்கொள்கை கொண்ட சிவசேனா மண்ணின் மைந்தர் என்ற ரவையில் மதம் என்ற டால்டா ஊற்றி கிச்சடி செய்கின்றவர்கள்.

    நான் காங்கு வுடன் கூட்டணி அமைப்பேன் என்று சிவசேனா சொல்வதும், நான் சிவசேனா காங்கு வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி ஆதரவு கொடுப்பேன் என்று சரத்பவார் சொல்வதும் எப்படியிருக்கும்?

    நரி,நாய், பூனை மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தால் என்ன உருவம் வருமோ? அது தான் நமக்கு இறுதியில் கிடைக்கும்.

    பாஜக செய்தது சரிதானா?

    கர்நாடகாவில் காங்கு வை எதிர்த்து தேவகவுடா களமாடிவிட்டு மகன் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகக் காங்கு வை கம்பு கூட்டுக்குள் வைத்து ஆட்சி நடத்தவில்லையா? அதனை ஜனநாயகம் என்று நாம் ஏற்றுக் கொண்டோம் என்றால் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    இந்திய அரசியலில் மக்களின் பங்கு தான் என்ன?

    ஓட்டுப் போட்டவுடன் மக்கள் வேலை முடிந்து விட்டது. ஜனநாயக ஆட்சியில் மக்கள் வேடிக்கை தான் பார்க்க வேண்டும். பார்க்க முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. பாஜக தேசியவாத காங் கூட்டணி ஓப்பந்தத்தை இறுதி செய்ய இரவுப்பணி முடித்து இப்போது மக்கள் பணிக்கு பிரம்மமுகூர்த்தில் தங்கள் பணியைத் தொடங்கி சேவை செய்ய ஆய்த்தமாகி உள்ளனர்.

    சோனி நிலைமை இப்போது எப்படியிருக்கும்?

    மூத்திரச்சந்துக்குள் வைத்து கும்கும்ன்னு என்னை வைத்து அடித்தார்கள் என்று வடிவேல் சொன்னது இப்போது உங்கள் நினைவுக்கு வர வேண்டும்.

    நீதி

    மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஆட்சிக்கு வர நினைப்பவர்களுக்கு முன்று இடங்கள் முக்கியமானது. டெல்லி (மூளை) மும்பை (இருதயம்) உத்திரபிரதேசம் (நுரையீரல்). இந்த மூன்றும் ஒவ்வொரு விதங்களில் அதி முக்கியமான இடங்கள். மூன்று உறுப்புகளும் வெவ்வேறு நபரிடம் இருந்தால் என்ன ஆகும்?

    திருடனுக்குத் திருடன். வல்லவனுக்கு வல்லவன் பாஜக. ஆட விட்டு அமைதியாக இருந்தார்கள். ஈரச் சாக்கு போட்டு இப்போது அமுக்கி விட்டார்கள்.

    அதிகாரமென்பது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் சூட்சமம் உள்ளது.

    அதில் அறநெறிகளைத் தேடாதீர்கள். நம் மக்களே அதனை மறந்து நாளாகிவிட்டது.

    சுபம்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதி ஜி!

      அதற்குள்ளாகவே சுபம் என்று முடித்துவிட்டால் எப்படி? காங்கிரசுடைய காசுக்கார வக்கீல்கள் இருவர் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் சரக்கு மிடுக்கைக் காண்பித்திருக்கிறார்கள். எடுபடுமா அல்லது ராகுல் காண்டி மாதிரியே எடுபடாமல் போய்விடுமா என்று வருகிற நாட்களில் பார்க்கவேண்டாமா? :-)))

      நாளைக்கு இரண்டு கடிதங்களை சமர்ப்பிக்கும்படி மட்டும்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காசுக்கார வக்கீல்களைவைத்து ஆர்ப்பாட்டமாக குதித்ததால் மட்டும் நாளையே நீதிமன்றத் தீர்ப்பு வரப்போவதில்லை. இன்னும் கொஞ்சம் இழுக்கும். கொஞ்சம் பொறுங்கள்! இன்னும் பார்க்க வேண்டிய வாணவேடிக்கை நிறைய இருக்கிறது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!