கடந்த ஜூனில் இந்தப்பக்கங்களில் ராகுல் காண்டியின் ராஜினாமா நாடகத்துக்குப் பிறகு நேரு விசுவாசியான எழுத்தாளர் ராமசந்திர குகா வாரிசு அரசியலின் விசிததிரங்களை டெலிகிராப் நாளிதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையை மறுபடியும் ஞாபகப் படுத்திக் கொள்கிற மாதிரி The Print தளத்தில் சேகர் குப்தாவின் வீடியோ ஒன்றை இன்றைக்குப் பார்த்தேன்.
உளறிக்கொட்டுவது திராவிடங்களின் மிகப்பெரிய வியாதி! நம்மையும் தொற்றிக்கொண்டுவிடாமல் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்?
இந்த 19 நிமிட வீடியோவில் சேகர் குப்தா இந்திய அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வந்த தருணங்கள், வாரிசு அரசியலில் யார் யார் எதனால் சோபித்தார்கள் அல்லது தோற்றார்கள் என்பதை சமீப காலத்திய அதிகம் பேசப்படும் வாரிசு வரவுகளான சிவசேனாவின் ஆதித்ய தாக்ரே, ஹரியானாவில் ஜாட் மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்த JJPயின் துஷ்யந்த் சவுதாலா உட்பட இந்திய அரசியலில் வாரிசுகளைப் பற்றி சுவாரசியமான பல சங்கதிகளோடு சொல்கிறார்!
The problem with the political dynast of the third or fourth generation, argued Ibn Khaldun, is that “he sees the great respect in which he is held by the people, but he does not know how that respect originated and what the reason for it was. He imagines that it is due to his descent and nothing else. … He trusts that (they will obey him because) he was brought up to take their obedience for granted...” As a political dynasty went into a fourth or fifth generation, argued Ibn Khaldun, it sowed the seeds of its own fall என்று ராமசந்திர குகா மாதிரி சுற்றி வளைத்து இபின் கால்தூன் மாதிரி அரேபிய சிந்தனையாளர்களிடமிருந்து இரவல் வாங்காமல், நேரடியாகவே, வாரிசு பரம்பரை ஜெயிப்பது இன்னார் வாரிசு என்பதனால் அல்ல, ஜனங்களை ஈர்க்கிற மாதிரியான ஒரு நல்ல கருத்தாக்கத்தினால் மட்டுமே என்று சொல்கிறார் சேகர் குப்தா. சுட்டிகளில் உள்ள விஷயங்களைப் படித்துவிட்டு வீடியோவையும் பார்ப்பது உபயோகமாக இருக்கும். #வாரிசுஅரசியல்
நாளை முதல் காங்கிரஸ் கட்சி பத்து நாட்களுக்கு ஜனங்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்! டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் சஜ்ஜித் குமார் நக்கலடிக்கிறார்! அதெல்லாம் சரி! ராகுல் காண்டி எங்கே இருக்கிறார்? எங்கிருந்து போராட்டத்தை களத்திலிறங்கி நடத்தப் போகிறார்? அதைச் சொன்னார்களா? அல்லது வழக்கம் போல ட்வீட்டரில் தானா? #சோனியாவாரிசு
விவசாயிகளுக்காக உருகுகிறாராம்!பெற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்காவது இரக்கம் காட்டக் கூடாதா என்று உத்தவ் தாக்ரே கெஞ்சுவதைப் பார்க்கையில் எனக்கே பாவமாக இருக்கிறதே! TOI நாளிதழில் சந்தீப் அத்வர்யு லந்து நெம்பவே ஓவர்தான்! #மும்பைவாரிசு
இங்கே உள்ளூர் வாரிசு கதையைச் சொல்லாமல் விட்டால் எப்படி?
உளறிக்கொட்டுவது திராவிடங்களின் மிகப்பெரிய வியாதி! நம்மையும் தொற்றிக்கொண்டுவிடாமல் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.
சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், டாக்டரின் பிள்ளை டாக்டர், ஆடிட்டர் பையன் ஆடிட்டர், லாயர் பிள்ளை லாயர் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழியில் அரசியல்வாதியின் பையன் அரசியல்வாதி ஆவதில் வியப்பு இல்லை. ஆனால், பல தலைவர்களின் வாரிசுகள், சினிமா, பத்திரிக்கை துறை (மீடியா), மருத்துவத் துறை என்று பல துறைகளிலும் புகுந்து, கொள்ளையடிக்கத் துவங்கிவிட்டனர் என்பதுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteவாரிசுகளை விடுங்கள்! 1974 இல் பாட்னாவில் ஊழலுக்கெதிராக மாணவர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெயப்ரகாஷ் நாராயணனை அழைத்து வந்த மாணவர்கள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய வெளிச்சத்தில் அரசியலுக்கு வந்தவர் பின்னாட்களில் எப்படி ஆனார் என்பது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
சமீபகாலத்தில் ஊழலுக்கெதிரான இந்தியா என்று அன்னா ஹசாரே நடத்திய போராட்ட வெளிச்சத்தில் அரசியலுக்கு வந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால், எப்படிப் புகழ் மணக்க ஆட்சி செய்கிறார் என்பது தெரியும்தானே!
சேகர் குப்தா வீடியோவை இன்னொரு முறை கவனமாகப் பாருங்கள்!
தவறுக்கு மன்னிக்கவும், முதல் வரி வாருங்கள் கௌதமன் சார் என்று இருக்கவேண்டும்.
Delete