மதன் ரவிச்சந்திரன்! கேலிச்சித்திரமாக சிவசேனா! ராகுல் காண்டி!

அரசியலில் ஏதோ ஒரு கட்சிக்குப் பல்லக்குத் தூக்குவது என்ற அளவுக்குப் போய்விட்டால், கட்சித் தலீவரை விட அடிப்பொடிகள் (அல்லக்கைகள் என்பது திராவிடங்கள் பரவலாகப் புழங்குகிற வார்த்தை) செய்கிற அலப்பறை எப்போதுமே ஸ்பெஷல் காமெடி தான்!


உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குப் பிறகு சோனியா மற்றும் வாரிசுகளுக்கான SPG பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு Z+ பாதுகாப்பை CRPF கமாண்டோக்கள் வழங்கி வருகிறார்கள். காங்கிரஸ்காரன் குதித்ததைவிட திமுகவின் TR பாலு நாடாளுமன்றத்தில் குதித்தது மிகவும் வேடிக்கையாக இருந்ததே! பார்த்தீர்களா? அந்தப்புள்ளியிலிருந்து  ஒரு விவாதத்தை மதன் ரவிச்சந்திரன் நடத்துவதை இந்த 49 நிமிட வீடியோவில் பார்க்கலாம்! ரசிக்கலாம்!


அரசியலில் இன்றைக்கு மிகவும் ரசித்த செய்திகளில் NCP சரத் பவாரும், சோனியா காங்கிரசும் கருத்து ஒருமித்து சிவசேனாவை சுற்றலில் விட்டிருப்பதுதான்! ஆனால் அரசு அமைப்பது குறித்த முடிவு இதோ அதோ என்று இந்த வாரத்தைக் கடந்துவிடும் போலத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சுவாரசியமான கார்டூன் லந்துகள் நிறைய வந்துகொண்டே இருப்பதில் சில பார்க்க! சிரிக்க! 


வரட்டு வீம்புடன் எங்களுக்கு 170 சமஉக்கள் ஆதரவு இருக்கிறதாக்கும் என்று பிஜேபியுடன் உறவை முறித்தது சிவசேனா தான்! எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டவுடன் யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று வெட்கமே இல்லாமல் கேட்டதும் சிவசேனாதான்!

        
நீங்களாகவே வெளியீறினீர்களா? அவர்கள் வெளியே தள்ளிவிட்டார்களா? உத்தவ் தாக்கரேவால் இன்னமும் நம்பமுடியவில்லை.


மகாராஷ்டிரா அரசியலில் பழம்தின்று கொட்டை போட்ட சரத் பவார் என்னமாதிரியான அரசியல் கேம் ஆடுகிறார் என்பது சிவசேனாவுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்குமே கூடப் புரிந்துவிட்டதா என்ன?  


சுரேந்திரா ஹிந்து நாளிதழில் வரைந்திருக்கிற கார்டூன் சிவசேனாவை சுத்தலில் விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறதோ?


ஜெர்மனி குடியுரிமை இருப்பதை மறைத்து தெலங்கானா மாநிலத்தில் MLAவாகவும் ஆகிப்போன ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக் காரர் ஒருத்தருடைய இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப் பட்டிருக்கிறது. இப்போ அதுக்கென்னவாம்?

தானொரு பிரிட்டிஷ் குடிமகன் என்று ராகுல் காண்டி கையெழுத்திட்டு  தாக்கல் செய்த ஒரு விவகாரம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கிளப்பி, தலைக்குமேல் கத்தியாகத் தொங்கி கொண்டிருக்கிறதே! ஞாபகம் வருகிறதா? 

மீண்டும் சந்திப்போம்.     
           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!