எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்!

Consent to be ......nothing! என்று பதிவுக்கு கொஞ்சம் விசித்திரமான தலைப்பு எதற்காக என்று எப்போதாவது கேட்கத் தோன்றி இருக்கிறதா? இங்கே பதிவின் வலது பக்கத்திலேயே படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்! ஆனால்.......! ஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து .... Consent to be nothing and none, dissolve Time's work, Cast off thy mind, step back from form and name. Annul thyself that only God may be." Savitri Book 7 Canto 6 இப்படி எடுத்துப் போட்டிருப்பதை எப்போதாவது கவனித்ததுண்டா?
1973 நவம்பர் 17 ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த  நாள்! இன்றும் கூட அவளருளை வேண்டுகிற எவருக்கும் தன்னுடைய ஒளியையும் அருளையும் தடையில்லாமல் தருவதற்கு அன்னை தராத தயங்கியதே இல்லை என்பது அடியவர்கள் ஒவ்வொருவருடைய அனுபவமாகவும் இருக்கிறது.
                                                    

நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, இன்று  ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும் 

அதிலும் தெளிவு பிறக்கவில்லையே என்று கொஞ்சம் பிரார்த்தனை செய்தால் மிகத்தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதையும் அனுபவத்தில் அறிந்துகொண்டதுண்டு. பதிவின் வலதுபக்கத்தில் 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்  என ஸ்ரீ அன்னையின் படம் ஒன்று இருப்பதன் மீது எப்போதாவது க்ளிக் செய்து பார்த்தது உண்டா? 

திடீரென்று சூழ்ந்த வெறுமைக்கு உங்கள் பதிவு ஒரு வெளிச்சத்தை காட்டுவது போல இருக்கிறது. "நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும், நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவை. இன்றைய வலி, துயரம்,தோல்வி என்பதெல்லாம், உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை." - மிகப்பெரிய தெளிவை தர வல்ல அருளாசி! பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDelete
Replies
  1. வாருங்கள் பந்து!

    யாஹூ!360 இலும் அது மூடப்பட்டபிறகும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை இருவருடைய அருளமுதைப் பகிர்ந்து கொள்கிற பிரார்த்தனைப் பதிவுகளாகத்தான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததே! ஒரு சாதாரண மனிதனுடைய குழந்தைத்தனமான பகிரவுகளுக்குக் கூட ஒரு ஆன்மீகப்பதிவர் ரேஞ்சுக்கு சிலரிடமிருந்து வந்த ரெஸ்பான்சில், மிகவும் சங்கடப்பட்டுத்தான் இதரவிஷயங்களையும் தொட்டு எழுத ஆரம்பித்தேன். அதுவே அரசியல் விஷயங்களையும் தொட்டுப் பேசுகிற பதிவாக அப்படியே மாறிப்போய்விட்டது.

    ஆனாலும் இந்தப் பதிவுக்கு வைத்திருக்கிற தலைப்பே என்னைத் திசைமாறிப்போய்விட அனுமதிக்காமல் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் திரும்பவும் என்னைக் கொண்டு சேர்த்துவிடுகிறது.
நண்பர் பந்துவுக்கு நான் சொன்ன பதிலில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கோ ஆயிரம் கவனச் சிதறல்கள் இருந்தாலும் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்  திரும்பவும் கொண்டுவந்து சேர்த்துவிடுகிற திருவருளை,  கருணையை, ஒருமுறை இருமுறை அல்ல, ஒவ்வொரு முறையும் அனுபவித்து வருகிறவன்.  முந்தைய பதிவுக்கு சாண் ஏறி முழம் சறுக்கிய கதை என்று தலைப்பு வைத்திருந்தேன் இல்லையா? அது தவறு என்று திரு. பந்துவுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஸ்ரீ அரவிந்த அன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறார்!


எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்! என்பதை நான் அறிந்துகொண்ட தருணம் ஒன்றா இரண்டா?

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!         

6 comments:

  1. பல சமயங்களில் என்னடா நாட்டு நடப்புக்களை படிக்கும் போது அல்லது டிவி செய்திகளை பார்க்கும் போதுமனதில் அலர்ச்சி ஏற்படுவதுண்டு. வேற நல்ல அனுபவ விஷயங்களை படிக்க வேண்டும் என்று நினைத்து படித்தாலும் அதுவும் மனதிற்கு சந்தோஷம் தருவதில்லை ஆனால் உங்களின் இந்த வலைத்தளத்தில் இன்றைய மற்றும் முந்திய பதிவுகளை பார்க்கும் போது எனக்கு ஒரு நல்ல வலைத்தளம் படிக்க கிடைத்திருக்கிறது என்பது மனதியற்கு மகிழ்ச்சி அளிக்கிறது அதற்காக உங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ம.த.!

      ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் என்ற குறியீட்டுச் சொற்களில் நிறையப்பதிவுகள் இருக்கின்றன. ஒரு ஏவாஞ்செலிஸ்ட் மாதிரி பிரசாரம் செய்வதை அன்னையை நேசிப்பவர்கள் செய்வதில்லை. இருந்தாலும் என்னுடைய அனுபவப் பகிர்வுகளாக, அவ்வப்போது ஏதாவது எழுதிக் கொண்டுதான் வருகிறேன்.

      Delete
  2. Reject suggestions of Incapability. எனக்காகவே சொன்னது போல இருக்கிறது. உண்மையிலேயே அது எனக்காகவே தான். உங்கள் மூலம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் கேட்டவர்க்குக் கேட்டபடி பதில் கிடைப்பது மிகவும் இயல்பானதே! வழிகாட்டுதல் தேவைப்படுகிற சமயங்களில் வலதுபக்கத்தில் அன்னையின் படத்தின் மீது க்ளிக் செய்து பார்த்தால் inner guidance என்று ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி தளத்தில் இருந்து, நீங்கள் பார்த்தமாதிரியான வழிகாட்டும் தகவல்கள் கிடைக்கும்.

      Delete
  3. //Consent to be ......nothing! என்று பதிவுக்கு கொஞ்சம் விசித்திரமான தலைப்பு எதற்காக என்று எப்போதாவது கேட்கத் தோன்றி இருக்கிறதா? // 
    இருக்கிறது.
    //அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்  என ஸ்ரீ அன்னையின் படம் ஒன்று இருப்பதன் மீது எப்போதாவது க்ளிக் செய்து பார்த்தது உண்டா? // உண்டு.
    அன்னை ஒரு அசாத்தியமான குரு. என்னை மாற்றியதில் அவளுக்கு பெரும் பங்கு உண்டு. நம்மை புரட்டிப் போட்டு, மேலே கொண்டு செல்வதில் அவளுக்கு நிகர் அவளே.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!