தெரிந்து கொள்வோமே! #RCEP மகா இழுபறி!

இங்கே தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட பாங்காக்  நகரில் RCEP பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட மறுத்துவிட்டு வந்திருப்பது குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒப்பந்த விஷயத்தில் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியாமலேயே ராகுல் காண்டி, சோனியா காண்டி பரிவாரங்களோடு இந்தியத் தொழில்துறையின் ஒரு பகுதியும் விவசாயிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததை, முரண் பட்ட கருத்துக்களை, தேடிப்  படித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுதின் பெரும்பகுதி செலவானது.


இது News X சேனலில் ரிஷப் குலாடியின் பார்வை. வீடியோ 19 நிமிடம். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கே பெரும் பகுதி சாதகம், சந்தடி சாக்கில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகளுடைய பால் பொருட்களின் வரவு உள்நாட்டில் பால் உற்பத்தியாளர்களை நசித்துவிடும் என்ற ரீதியில் ஒரு சிறுவிவாதம்.


ஒரு அனுபவமுள்ள  ஊடகக்காரராக The Print தளத்தில் சேகர் குப்தா, பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது எது என்று சிலவிஷயங்களை இந்த 28 நிமிட வீடியோவில் தெளிவுபடுத்துகிறார். அவர் சொல்வதில் கவனிக்கவேண்டிய விஷயமாக நம்முடைய தொழில் துறை competitive ஆக மாறவோ,  தரமான உற்பத்திக்குத் தயாராகவோ இல்லாமல், சர்வதேச சந்தைகளைப் பிடிப்பதற்கு லாயக்கில்லாதவையாக இருப்பது முக்கியமானது. அரசின் பாதுகாப்பில் அவர்கள் இப்போதிருக்கிற நிலையிலேயே நீடிக்க விரும்புகிறார்கள் என்பது பரிதாபம் Make in India இன்னும் வெறும் கனவாக இருப்பது ஏன் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

Modi’s RCEP move shows sound political judgement. Don’t scoff, it’s rare these days. Pulling out of RCEP was not only an economic decision. It involved taking a call not just India’s foreign policy but also on India’s role in evolving world என்கிறார் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பின் வெளியே வந்து அரசியல் விமரிசகராகத் தொடரும் அதே யோகேந்திர யாதவ் தான்!


சிவசேனாவால் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி இன்னமும் தொடர்கிறது. சரத் பவார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கவே விரும்புவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  சுயேட்சைகள், சீட் கிடைக்காததால் எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் என்று 24 MLAக்கள் இருக்கிறார்கள். அதுதவிர இன்னும் 16 உதிரிகள் இருக்கிறார்கள். சிவசேனா பிளவுபட்டு சரிபாதி  MLAக்கள் கட்சி மாறுவார்களா என்றெல்லாம் ஹேஷ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எதுவானாலும்  வரும் 9 ஆம் தேதிக்குள் நடந்தாக வேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சிதான் என்ற மாதிரி அந்தரத்தில் தொங்குகிறது  மஹாராஷ்டிரா அரசியல். சரத் பவார் பேசியதன் முக்கியமான அம்சங்கள் என News 18 சொல்வது இப்படி:

Nov 6, 20191:11 pm (IST)
Pawar's Jibe at Amit Sha's 'Skills' | Sharad Pawar Subtly jabbing at Amit Shah, Sharad Pawar said he is keen to see the Union Home Minister's skills in Maharashtra. "Amit shah is known for his skills to form governments in the states where the BJP doesn't always have numbers. I'm keen to see his skills in Maharashtra," Pawar said.

Nov 6, 201912:49 pm (IST)
Sharad Pawar Warns of Constitutional Crisis' | Sharad Pawar said that Sanjay Raut had told him that the Shiv Sena will support the NCP in the Assembly on the issues that are common to both the parties. However, he said he has no idea about the figure of 175 MLAs that the Shiv Sena is boasting about. "We want them (BJP and Shiv Sena) to form the government. There shouldn't be any constitutional crisis. I will meet Sonia Gandhi over the next few days," Pawar said.

மீண்டும் சந்திப்போம். 


           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!