ரங்கராஜ் பாண்டே வேந்தர் டிவியை விட்டும் விலகி விட்டதாக பதிவர் நண்பர் மாயவரத்தான் கி. ரமேஷ் குமாருடைய முகநூல் பகிர்வில் ஒற்றை வரி மட்டுமே இருந்தது. என்னவென்று முழுத்தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
உடனே பின்னூட்டமிட்டு ஒருவர் இப்படி சந்தோஷப் பட்டுக் கொள்கிறார். முதலாளிகளுடைய விருப்பம், நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் ஊடகத்துறையில் இருப்பதோ, தனித்து ஓற்றை மனிதராக களத்தில் ஜெயித்துக் காட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.
இது மதன் ரவிச்சந்திரனுடைய ட்வீட்டர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட். எதிராளிகளை இவரே இப்படிக் கையைப்பிடித்து வம்புக்கிழுப்பது எத்தனை நாளைக்கோ? நான் மட்டும் கவலைப்பட்டு என்ன செய்துவிட முடியும்?
படம் பார்த்தோமா வந்தோமா என்றிருக்க முடிந்ததா? சின்னப்பசங்களெல்லாம் டிவியில் விவாதம் நடத்துகிற அளவுக்கு ஆகிப்போச்சேன்னு இப்போது முட்டிக் கொண்டு என்ன பிரயோசனம்? வீடியோ 47 நிமிடம்.
சதீஷ் ஆசார்யாவுக்கு அவ்வப்போது நகைச்சுவை கொஞ்சம் வரும் ரகத்திலான கார்டூன் இது! Tiger Zinda Hai? (புலி உயிருடன் இருக்கிறதா?) #Maharashtra என்று சூப்பராக படத்துக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறார்! அதைவிட சோனியா, சரத் பவார் இருவரையும் கூண்டில் அடைத்துக் கூட்டிப்போகிற மாதிரிக் கற்பனை இருக்கிறதே! அபாரம்! நிலைமை உண்மையிலேயே அப்படித்தானா? ஆட்டுக்கு மாலை, பரிவட்டம் எல்லாம் கட்டி மஞ்சத்தண்ணி தெளிப்பது எதற்காக?
உத்தவ் தாக்கரே தான் மகாராஷ்டிராவின் முதல்வர் என்று NCP, காங்கிரஸ் இரண்டும் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருப்பதே அடுத்து நடக்கப்போவதற்கு முன்னோட்டமாகவும் ஆகியிருக்கிறதோ? இன்னொரு குமாரசாமியாகிறாரா உத்தவ் தாக்கரே?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!