சிவசேனா அலப்பறைகள்! ஜெயிக்கப் போவது யாராம்?

இங்கே ஓசிச்சோறு வீரமணிகள் மாதிரியே ஆளும் கட்சியோடு இணக்கமாக இருந்தே தண்டல் வசூல் செய்துகொண்டிருந்ததைத் தவிர சிவசேனா தாக்கரேக்கள் நேரடி அரசியலில் குதித்ததில்லை என்ற கதை இன்று மாலையுடன் பழங்கதையாகிறது. இன்று மாலை 6.40  மணிக்கு உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார். சிவசேனா NCP சோனியா காங்கிரஸ் மூன்று கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் கூடவே மந்திரிகளாகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்களாம்!  ஆதித்ய தாக்கரே மந்திரி சபையில் இடம் பெறப்போவதில்லை என்றாலும் நிழல் முதலமைச்சராகச் செயல்படுவார் என்றும் செய்திகள் கசிகின்றன.


அந்த நாட்களில் சி என் அண்ணாதுரை தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த நாட்களில் சட்டசபையிலேயே நான் முற்றும் துறந்த முனிவருமல்ல XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கொள்கை முழக்கம் செய்த மாதிரி இந்த 7 நிமிட வீடியோவில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்ன சொல்கிறார் என்றும் பார்த்துவிடுங்களேன்! லோக்சபா தேர்தல் சமயத்தில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானெர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளெல்லாம் பிஜேபிக்கு எதிராக ஒரு மகா கெட்ட பந்தன் அமைக்க முயற்சி செய்தது போலவே இப்போதும் செய்யலாம் என்று சோனியா காங்கிரஸ் நப்பாசையுடன் காத்திருக்கிறது. அப்போதும் காங்கிரஸ் கட்சிதான் போய்ப்போய் ஒட்டிக் கொண்டதே தவிர மாநிலக்கட்சிகள் எதுவும் காங்கிரசுக்கு முதல்மரியாதை கொடுக்கவில்லை என்பதும் கூட ஆறுமாதத்துக்கு முன் நடந்த சமீபகால வரலாறுதான்!  

இதுவரை மம்தா பானெர்ஜி உள்ளிட்ட மாநிலக்கட்சித் தலைவர்கள் சாதிக்க முடியாததை மகாராஷ்டிராவில் NCPயின் சரத் பவார் இப்போது சாதித்திருக்கிறார் என்ற ஒற்றை விஷயத்தை வைத்துக் கொண்டு, டில்லியிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று சிவசேனா சஞ்சய் ராவத் கூவுவதும்,மகாராஷ்டிரா மாதிரியே எதிர்வரும் நாட்களில் லட்சியக்கூட்டணி அமைத்து பிஜேபியைத் தோற்கடிப்போம் என்று சோனியா காங்கிரசும் கனவு காண்பது எங்கே போய் முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? #முட்டுச்சந்துகள் ஏராளமாக இங்கே இந்திய  அரசியல் களத்தில் உண்டு என்பது தெரியும் தானே!  
    
ட்வீட்டர் தமாஷ்!

சீனாதானா திகார் சிறையில் இருந்துகொண்டே குடும்பத்தார் மூலமாக ட்வீட்டரில் உபதேச அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறார்.
     

I have asked my family to tweet the following: What will remain in memory of Constitution Day 2019 is the most egregious violation of the Constitution in Maharashtra between November 23 and November 26, 2019.
83
678
3K
It was an assault on the office of Rasthrapathi to wake him up at 4.00 am to sign an order revoking President's Rule. Why could it not have waited until 9.00 am in the morning?
33
204
528
People who observe the evolution of Parliamentary democracy will agree that complex, diverse, plural societies are best governed by coalitions that learn to compromise and agree on a Common Minimum Programme.
13
224
809
Warm greetings to the Shiv Sena-NCP-Congress Coalition government. Please subordinate your individual party interests and work together to implement the common interests of the three parties - farmers' welfare, investment, employment, social justice and women and child welfare.
9:43 AM · Nov 27, 2019   
 
சீனாதானா  உபதேச மழையை யாராவது சட்டை செய்கிறார்களா என்ன?

பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட நிறையப்பேருக்கு அழைப்பு கொடுத்திருப்பதில் இலவு காத்த கிளி இசுடாலின் கலந்து கொள்கிறாராம். மம்தா பானெர்ஜி தனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாக சாக்கு சொல்லி வரமுடியாத நிலையைத் தெரிவித்து விட்டாராம்! இன்றைக்கு சிவசேனாவுடன் ஒரே மேடையில் நின்றால் 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல்களில் முஸ்லிம் வாக்குவங்கியில் பெரும் ஓட்டைவிழும் என்ற பயம் தான் காரணம் என்கிறது TOI செய்தி.

சிவசேனாவை அதன் கடந்தகாலம் வேகமாகத் துரத்திக் கொண்டிருக்கிறது. தப்பிப் பிழைப்பார்களா என்பது 99 ரூபாய் நோட்டு மாதிரி, இப்போது விடை தெரியாத ஆனால் ஊகிக்க முடிவதுதான்!

மீண்டும் சந்திப்போம்.   

  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!