மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! சுருக்' அரசியல்!

முந்தைய பதிவில் எங்கள்Blog ஸ்ரீராம் நேரலை வீடியோ லிங்க் கொடுத்திருந்தும் கூட, நான் சுருக்'கெழுத்தாளர் இல்லை என்பது தெரிந்துமே சுருக்கமான அறிக்கை கேட்கிறார். என்ன செய்வது சொல்லுங்கள்! ஒரு சுருக்கமான வீடியோ வேண்டுமானால் கொடுக்கலாம்.

  
நேற்றைக்கு திருச்சியில் துக்ளக்50 சிறப்புக் கூட்டம் ஒன்று நடந்ததில், வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன், ரங்கராஜ் 
பாண்டே, தமிழருவி மணியன், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்கள்.துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது வழக்கம் போல இங்கே ஒருபக்கச் சார்புள்ள ஊடகங்களால் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. குருமூர்த்தி அப்படி என்னதான் பேசினார்? மேலே வீடியோவில் முழுப்பேச்சும் 36 நிமிடம். 

குருமூர்த்தி சார் துக்ளக் விழாவில் பேசிய வார்த்தை என்ன?
"சசிகலா அவர்களை முதலமைச்சராக ஆக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள். அந்த யுனிவெர்சிட்டி ஹாலில் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது OPS கூப்பிட்டு அங்கே supervisor பண்ணி கொஞ்சம் துப்புறாவா இருக்கா பாருங்கள் என்று சொன்ன பிறகு - அவர் என்னிடம் வந்தார் "சார் இந்த மாதிரி எல்லாம் பண்றங்களே எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை". நான் அவரிடம் பேசிய முறையை வெளியில் கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளயா ஏன் இருக்கேங்க என்று எனக்குத் தெரியவில்லை என்றேன். என்ன சார் பண்ண வேண்டும் என்று கேட்டார் ops.
இது தான் அவர் பேசியது. இதில் துப்புரவு வேலை பார்க்க சொன்ன அதுவும் முதலமைச்சராக இருப்பவரை துப்புரவு வேலை பார்க்கச் சொன்னால் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத செயல். தொடர்ந்து அவமானப் படுத்தி அடிமைகளாக இருந்த அதிமுக இதை விட அவமானம் என்ன எதிர் கொள்ள முடியும்!
என்ற வகையில் "ஆம்பளையாக ஏன் இருக்கேங்க" என்ற கோபம் வரத்தானே செய்யும். எதிர்த்து நிற்க அன்று எவருக்கும் துணிவில்லாத நிலையில் , பத்திரிக்கைகள் கூட சசிகலா அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத நிலையில் சசிகலாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது என்பதைக் குருமூர்த்தி சார் தெளிவுபடுத்த அதைக் கூறியுள்ளார்.
இல்லை என்றால் ?
அதைத் தொடர்ந்து குருமூர்த்தி சார் சொன்னது "அவர் மௌனமாகச் சமாதியில் சென்று அமர்ந்தார், 45 நிமிடம் அவர் அமைதியாகச் சமாதியில் உக்காந்ததும் மொத்த தமிழகமும் மாறியது , காரணம் மாறுவதற்குத் தமிழகம் தயாராக இருந்தது. அதற்காக ஒருவர் மௌனமாக அமர்ந்தார் அதை வைத்து மாறியது. he can be a symbol.
எந்த தன்மானமுள்ள நபருக்கு ஒரு முதல்வரை துப்புரவு பணிகள் சரியாக வேலை நடக்கிறதா என்று சசிகலா வேலை ஏவினால் கோபம் வருது தான் இயல்பு. சசிகலா அவர்கள் நடத்திய விதத்தால் OPS அவர்கள் கொண்ட மனவருத்தம் , குருமூர்த்தி அவர்கள் கொண்ட கோபம் இதனைத் தான் தொடர்ந்து நடந்த மாற்றம் என்பதாக ஒரு தகவலை பகிர்ந்தார்.
இதனை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது ஒரு கூட்டம். எனக்குத் தெரிந்து துக்ளக் விழாவில் குருமூர்த்தி சார் தவறாக எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. எதிர்த் தரப்பில் குழப்பத்தை உண்டாக்கத் துடிக்கிறது திமுக , இன்னொரு பக்கம் OPS,குருமூர்த்தி இருவரது உறவில் விரிசல் உருவாக்க ஒரு கூட்டம் கூச்சல் போடுவதாகவே நான் கருதுகிறேன்.
இங்கே விசித்திரம் என்னவென்றால் ஓபிஎஸ்நீங்கஆம்பளையா என்று trend செய்ய துடிக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். ஒருவேலை இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக பாலியல் குற்றவாளியா ஸ்டாலின் என்று trend செய்தால் ஏற்பார்களா??? மாப பாண்டிய ராஜன் அவர்களை மாமா பாண்டிய ராஜன் என்று trend செய்வர் , துணை முதல்வர் OPS அவர்களை ஆம்பளயா என்று trend செய்வர். பதிலுக்கு பாலியல் குற்றவாளி ஸ்டாலின் என்று அவர்கள் தரத்திற்கு இறங்கி பதில் கொடுத்தால் கொலை மிரட்டல் விடுவர்.
தமிழகத்தில் அனைத்து தரம் தாழ்ந்த அரசியலும் செய்யும் திமுக தன்னை எதிர்த்தால் மட்டும் யோக்கியவான் போல் அரசியல் நாகரீகம் பேசுவர். எனவே பாலியல் குற்றவாளி ஸ்டாலின் என்று trend செய்தால் அவமானம் யாருக்கு என்பதை உணர்ந்து கொஞ்சம் நாகரீகமான அரசியலை திமுக மேற்கொள்ள வேண்டும்.
ஆக
ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் குருமூர்த்தி சார் கேட்டதைத் திரித்துப் பரப்புவது தவறு. இதை முதலில் செய்தது NEWS18 தமிழ் பத்திரிக்கை குணா டீம் தான். எனவே செய்தி நிறுவனங்களில் இருக்கும் திமுகவிற்கு வேலை செய்யும் கூட்டத்தைத் தேடி தேடி ஒழித்தால் ஒழிய இங்கே மாற்றம் உருவாகாது.
-மாரிதாஸ் 

முகநூலில் மாரிதாஸ் OPS ஜெ சமாதியில் தியானம் செய்ய அமர்ந்து அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஒரு கலகத்தை ஆரம்பித்ததைத் தொட்டுப்பேசிய ஒரு விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் குருமூர்த்தி பேச்சில் அது ஒரு சிறுபகுதி மட்டுமே! மஹாராஷ்டிரா அரசியலைத் தொட்டுப் பேசியது மிக விரிவாக இருந்தது. சரத் பவாரைப் பற்றி இங்கே தமிழ்நாட்டில் அதிகம் தெரியாது என்று அவர் தொடர்ந்து பேசியது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அவைகளைக் கோட்டை விட்டு, பொருட் படுத்த வேண்டாத குப்பை விஷயங்களையே ஊதிப் பெரிதாக்குவது திராவிடங்களுடைய குப்பை அரசியல்! அவர்களிடம் விலைபோன ஊடகங்களும் அதையே செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஏன் தொடர்ந்து இவர்கள் குருமூர்த்தியைக் குறிவைக்கிறார்கள்? ரஜனி காந்த் ஒருவரால் தான் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று குருமூர்த்தி தொடர்ந்து சொல்லி வருவது காரணமாக இருக்கலாம்! 


காங்கிரசின் காசுக்கார வக்கீல்கள் வாதம், எதிர்வாதம் எல்லாம் கேட்டு முடித்த உச்சநீதி மன்றம் நாளை காலை 10.30 மணிக்கு, மஹாராஷ்டிரா சட்டசபை பலப் பரீட்சைக்கு தேதி எதுவென்று உத்தரவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறது.

இங்கே மஹாராஷ்ட்ரா இழுபறி நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கும் தூக்கம் போச்சுடி  இரவுகள் காத்திருக்கிறதென்று செய்திகள் சொல்கின்றன. சிந்தியா ஆதரவு MLAக்கள் 20 பேர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்களாம்!

மீண்டும் சந்திப்போம்.     

2 comments:

  1. Sir,
    i am yet to see Gurumurthy's Video. But it is true that there are people who will make issue of things and blow it out of proportion. Waiting for tomorrow's Thuglak to see what Gurumurthy is saying... I have seen few videos of Maaridhas.. i was wondering who is this fellow .. should have a strong background to take on these people ... on reading the transcript posted in your page, it seems he wanted to defend gurumurthy... but i was wondering why would gurumurthy say such words...which he said in private ... in a public function .. knowing well that there are many so called media .. as mentioned by Maaridhas which will blow things out of proportion and derail the scheme of things ...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்,

      ஆடிட்டர் குருமூர்த்தி முழுப்பேச்சும் வீடியோவாக இந்தப்பதிவிலேயே இருக்கிறது. ரஜனி வந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விடிவு என்று அவர் பேசுவதை நான் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை.. அதேபோல இந்த 36 நிமிட உரையில் அவர் நிறைய விஷயங்களைத் தொட்டுப்பேசுகிறார். அவருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுக்கும் இருந்த உறவு, சோவுடன் இருந்த ஆழமான உறவு, ராஜீவ் காண்டி உபயத்தில் ஒரு பத்திரிகையாளராக ஆனது, துக்ளக் ஆசிரியராக சசிகலாவை எதிர்த்தது, அதையொட்டி OPS ஜெ சமாதியில் போய் உட்காரும்படி சொன்னது என்று வரிசையாகப் பலவிஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டே மஹாராஷ்டிரா அரசியலில் பிஜேபி எப்படி ஒரு தர்மசங்கடமான சூழலில் தற்போதைய முடிவை எடுக்க நேரிட்டது என்பதை எல்லாம் பேசியிருக்கிறார். எவரிடமும் அந்தரங்கமாகப் பேசத்தெரிந்து கொண்டதை அம்பலப்படுத்தவில்லை.

      இங்கே அதிமுகவின் அமைச்சர் ஜெயகுமாரும், சில திராவிட புள்ளிகளும் OPS ஜெ சமாதி விவகாரத்தை மட்டும் செலெக்டிவாக எடுத்துக் கொண்டு வழக்கமான அரசியல் புரட்டு செய்ய ஆரம்பித்திருப்பதை குருமூர்த்தி என்ன பேசினார் என்பதை நேரடியாகவே பார்த்து, கேட்டு அதற்கப்புறமாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்ல வருவது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!