வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! சிவசேனா! ஒரு அரசியல் தற்கொலை!

மகாராஷ்டிரா அரசியலில் ஒரேயடியாக வறட்டு இழுப்பாக சிவசேனா இழுத்துக் கொண்டே போவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்கமுடியாமலும், புதிய அரசு அமைக்க முடியாமல் ஒரு இழுபறிநிலைமை நீடித்துக் கொண்டே போவதும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சிவசேனாவால் outgoing Chief Minister என்று நக்கலடிக்கப்பட்ட தேவேந்திந்திர ஃபட்னவிஸ் தனது ராஜினாமாவை இன்று ஆளுநரிடம் கொடுத்து விட்டார்.


அப்படியானால் சிவசேனா ஆசைப்பட்டபடி சிவசேனா ஆசாமி ஒருத்தர்தான் மகாராஷ்டிராவின் முதல்வராக வரப் போகிறாரா? நிச்சயமாக இல்லை! 


உத்தவ் தாக்கரே, ஒரு கட்சித்தலைவராக, முன்னால் மின்று பேசியிருக்கவேண்டிய தருணங்களில் சஞ்சய் ராவத் மாதிரி அடிப்பொடியைப் பேசவிட்டதும். நெகிழ்வுத் தன்மை இல்லாமல் வரட்டுப் பிடிவாதத்திலேயே நின்றதும் ஒரு அரசியல் கட்சிக்குக் கொஞ்சமும் உதவாதவை. தங்களுடைய இருப்பு ஒரு மாநிலக்கட்சியாகத்தான்,  அதுவும் ஒரு பகுதி மக்களிடம் மட்டுமே எடுபடுகிற மாதிரி இருக்கும் போது, வெறும் பிடிவாதம் மட்டும் போதுமா? எனக்கு என்னவோ உத்தவ் தாக்கரே, harakiri ஒரு அரசியல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. முதலமைச்சராக நாங்கள் தான் இருப்போம் என்று இன்னமும் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்.
  
MLAs being 'moved' in Maharashtra. This is what happens if you neighbour Karnataka...some of the politics rubs off on you :-) #ResortPolitics in #Maharashtra
7:12 PM · Nov 8, 2019

ANI செய்தி நிறுவனத்தின் எடிட்டராம்! சரத் பவார் கட்சி MLAக்களைத் தவிர, காங்கிரசும் சிவசேனாவும் தங்கள் கட்சி சமஉக்களை, பத்திரப்படுத்தி வைக்க ஆரம்பித்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன.

அரசியல் என்றால் அக்கப்போர்கள் இல்லாமலா? வாக்களித்த ஜனங்களை கேணைகளாக்குகிற போக்கை என்னவென்று சொல்வது?Winner takes all என்கிற Westminster தேர்தல்முறைகளில் உள்ள கோளாறுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் பல முறை பேசியிருக்கிறோம். 

எங்கே போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.               

           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!