மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் மஹா இழுபறி!

மஹாராஷ்டிரா அரசியலில் நேற்றே சில ருசிகரமான திருப்பங்கள் தொடங்கி விட்டன. 105 MLAக்களுடன் தனிப் பெரும் கட்சியாக பிஜேபி இருந்தாலும் ஆளுநர் அழைப்புக்கு தங்களிடம் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எண்ணிக்கை இல்லை என்பதால் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டது.


வீடியோ 13 நிமிடம். பிஜேபிக்கு அடுத்து அதிக MLAக்கள் (56) உள்ள கட்சியாக சிவசேனா இருப்பதனால், அதற்கு இன்றிரவு 7.30 மணிவரை ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்கு வசதியாக மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்து, செய்தும்  விட்டார். 


புலிவால் பிடித்த நாயர் கதையாக சிவசேனா தன்னுடைய வறட்டு வீம்பில் தானே சிக்கிக் கொண்ட மாதிரி நிலைமை இப்போது ஆகிவிட்டது. சரத் பவார் விரித்த கண்ணியில் சிக்கிக் கொண்டு, எப்படியாவது முதல்வர் நாற்காலியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில், தன்னுடைய அரசியல் தற்கொலையைச் செய்து கொள்வதில் இன்னமும் விடாப்பிடியாக இருக்கிறது. ஆனாலும் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


இன்னொரு குமாரசாமியாக சிவசேனா மாறி விடுவதைத் தவிர ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியாது என்பதே பொதுவான பார்வை. உத்தவ் தாக்கரே இத்தனை பிடிவாதமாக நிற்பதற்கு  பிரசாந்த் கிஷோர் மாதிரி சில புதிய ஆலோசகர்கள் தான் காரணம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். என்ன சொல்கிறது, பாருங்கள்.  
Sena insiders say a major reason behind Thackeray’s aggression is his set of advisors, who include political strategist Prashant Kishor. “The new set of advisors has convinced Uddhavji that the post-poll situation is favourable for Sena and it can be exploited to get what the party wants. That isதெரிகிறது  why, he is insisting that the chief ministership should be shared by the allies,” said another key party leader. “They have convinced him that the party will get benefit even if it forms the government with NCP. It will help the Sena leadership end the dominance of BJP that Thackeray faces in the alliance,” 


வாரிசைக் களமிறக்கியதிலேயே சிவசேனா தலைவர் எண்ணம் என்ன,  என்ன செய்யப்போகிறார் என்பது தெரிந்தது. ஆனாலும் அவருடைய நினைப்பு பலிக்குமா என்பதில் சிவசேனாக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லாத மாதிரித்தான் தோன்றுகிறது.  


Why TN Seshan Was the Greatest Ringmaster of the Great Indian Electoral Circus என்று தலைப்பிட்டுச் சொல்வதிலேயே T N சேஷன் என்கிற IAS அதிகாரி தேர்தல் ஆணையராக இருந்த நேரத்தில் இந்திரா காண்டி உள்ளிட்ட அரசியல்வியாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல்கட்சிகளோ அரசோ தேர்தல் சீர்திருத்தங்களுக்குத் தயாராக இல்லாவிட்டால் தான் என்ன? இருக்கிற சட்டங்களை வைத்தே என்ன செய்ய முடியும் என்று காண்பித்தவர் TN சேஷன். நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். ஒரு நல்ல மனிதர், நேர்மையானவரும் திறமையானவரும் கூட. என்னுடைய சிரம்தாழ்த்தி அஞ்சலி செய்கிறேன்.

T.N. சேஷன்..
சிஸ்டம் சரியில்லை என்கிற ஆதங்கம் + கோபம் நிறைந்த நம்முடைய குரல்கள் பரவலாக கேட்கும் நிலையில்...நாம் பார்க்கவும் , உணர்ந்து கொள்ளவும் மறுக்கும் ஸிஸ்டத்தின் வலிமையை உணர்த்தும் உருவம் தான் .. சேஷன் !
தனிமனிதராக ..தன்னுடைய அதிகார எல்லைகோட்டை தாண்டாமல் ..தன்னுடைய பதவிக்கான கடமையை சரி வர செய்ததன் மூலம் .இந்திய தேர்தல்களில் நீக்கமற நிறைந்திருந்த ஆகப்பெரும் ரவுடியிசத்திற்கும் , விதிமீறல்களுக்கும் கடிவாளமிட்டு..ஜனநாயகத்தை அதற்குரிய பாதையில் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர் சேஷன் !
அரசியலமைப்பு சட்டமும், நாம் சிஸ்டம் என்று குறிப்பிடுகிற அரசு இயந்திரத்தின் செயல்பாட்டு விதிமுறைகளும் தெளிவாக இருக்கின்றன.
''நேர்மையான தனி மனிதர்கள்''.... அரசு துறையின் அல்லது அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரியாகத் தான் இருக்கவேண்டும் என்பதல்ல ! அதிகாரப் படிநிலையில் கடைக்கோடி நிலையில் இருக்கும் ஒரு பியூன் கூட ...அந்த அலுவலகம் அல்லது துறையின் நேர்மையான செயல்பாட்டுக்கு உத்திரவாதம் அளிக்க இயலும் !
தவறுகளும், விதிமீறல்களும் , ஊழல்களும் நடக்காமல்...அரசியல் / அதிகார/ ரவுடியிச அழுத்தங்களுக்கு பணிந்து போகாமல் ..தன் அளவில் கடமையை சரிவர செய்யும் தனி மனிதர்களால் தான்...
அனைத்து இருட்டடிப்பு , அதிகார துஷ்ப்ரயோகங்களையும் தாண்டி..
தவறுகள் வெளிப்படுகின்றன.
சிஸ்டம் என்பது அரசு இயந்திரம் மட்டுமல்ல. ஜனநாயகத் தூண்களில் ஒன்றான ஊடகங்களுக்கும் கூட பொருந்தும். அதிலிருக்கும் ஓரிரண்டு தனிநபர்களின் துணிச்சல் ..அவர்களின் மீதான அழுத்தம், கணக்கு முடக்கம், இருட்டடிப்பு, கொலை மிரட்டல்கள் ஆகியவற்றை தாண்டி .. பல தவறுகளை மக்கள் பார்வைக்கு வெளிகொண்டுவருகிறது என்பது சமீபத்திய 'தமிழக' உதாரணம்.
பிரச்சினை என்னவெனில்...மக்கள்..இத்தகைய தனி நபர்களை..பாதுகாப்பதும் இல்லை. பாராட்டுவதும் இல்லை. கண்டுகொள்வதும் இல்லை. மாறாக.. பிழைக்கத்தெரியாதவர் என்று எள்ளிநகையாடும் மக்கள் தான் அதிகம்.
இங்கு மாறவேண்டியது மக்கள். சிஸ்டம் அல்ல.
சேஷன் ..ஒரு தனிமனிதராக ..சிஸ்டம் குறித்தும், சிஸ்டம் சிறப்பாக இயங்குவதற்கு தேவைப்படும் தனிமனித நேர்மை குறித்தும் இதை தான் உணர்த்தினார்!

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.   

 ............        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!