இன்றைக்கு சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் ஜியின் 550வது பிறந்த நாள். சீக்கியர்களின் நம்பிக்கை, வழிபாட்டு முறையில் ஐந்து என்ற எண் மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த 550வது பிறந்தநாளும் கூட மிக சிறப்பானதாகக் கொண்டாடப் படுகிறது. பாஞ்ச் பியாரே, பாஞ்ச் க, கல்சா என்று இப்படி ஐந்து ஐந்தாக!
மொகலாயர்களின் கடுமையான மதமாற்ற முயற்சிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு ஆரம்பமே சீக்கிய மதத்தின் தோற்றுவாயாக இருந்தது என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் காலத்தில் மொகலாயர்களின் தொந்தரவு அதிகமாக இருந்த சமயம், தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாராக ஒரு ஐந்து பேரை வேண்டிய போது குரு கோவிந்த் சிங்கின் சொல்லை மதித்து சர்வ பரித்தியாகம் செய்ய முன்வந்த ஐந்து பேரே பாஞ்ச் பியாரே என்றழைக்கப்பட்டவர்கள்.
அதை நினைவு படுத்திக் கொள்ளும் விதமாக, ஐந்து வெள்ளை ஆடை அணிந்த சிறுவர்கள் முன்னால் காவி ஆடையில் குரு கோவிந்த் சிங்கை நினைவுபடுத்துகிற சிறுவன் என்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் இன்று.
இவ்வாறு நாட்டுக்காக தம் இன்னுயிரை தேவிக்குப் பலி கொடுக்க முன்வந்த ஐந்து வீரர்களைத் தமது முதல் சீடர்களாகக் கொண்டே, குரு கோவிந்தர் தமது "கால்சா" என்ற மார்க்கத்தைத் தொடங்குகிறார். இதன்பின் அவர்களுக்கு தீட்சை அளித்து உபதேசம் செய்கிறார்: "தாய்த் திரு நாட்டைச் சந்ததம் போற்றி புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!" என்று குரு கோவிந்தர் அவர்களை வாழ்த்த, சீடர்கள் அவனடி போற்றி ஆர்த்தனர். "குரு கோவிந்தன் நாட்டிய கொடி உயர்ந்து அசைய குவலயம் புகழ்ந்தது. ஆடியே மாய்ந்தது ஒளரங்கசீப் ஆட்சி". என்று பாடல் முடிகிறது. குரு கோவிந்த சிங்குக்குக் கிடைத்த ஐந்து சீடர்களைப் போன்று அஞ்சா நெஞ்சம் படைத்த இளைஞர்கள் பாரத நாட்டை விடுவிக்கத் தம் உயிரையும் பலி கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும் என்பது பாடலின் கருத்து என்று பாரதியாரின் குரு கோவிந்த சிம்மன் பாடலைப்பற்றி இங்கே வாசிக்கலாம்! போற்றி வணங்கலாம்!
******
திருவள்ளுவர்! இது 1955 இல் ஓவியர் மணியம் வரைந்த கல்கி அட்டைப்படம்! காவி ஆடை, திருநீறு, ருத்திராட்சம், ஓலைச்சுவடி இவற்றோடு தாமரை வேறு!திராவிடப்புரட்டுக்களை புரட்டியெடுக்கவே இப்படித் தேடி எடுத்துப் போட்டுக் கும்முகிறார்களோ? !!
மிரட்டப்படுகிறதா ஊடகங்கள் என்று தலைப்பை வைத்து அப்படி மிரட்டுகிறவர்களையே அல்லது அவர்களது கூட்டாளிகளையே விவாதத்துக்கு கூப்பிட்டால் எப்படி வருவார்கள்? மதன் ரவிச்சந்திரன் தான் மிரட்டப்படுவதையே ஒரு கலந்துரையாடலாக 51 நிமிட வீடியோவில் நடத்தி முடித்துவிட்டார். கொஞ்சம் பார்த்துவிட்டு எப்படி என்று சொல்லுங்களேன்!
மகாராஷ்டிரா முதல்வர் நாற்காலிக்கான சிவசேனா முயற்சிகள் வெறும் கனவாகவே கருகிப்போய் விடுமோ? நடப்பு நிகழ்வுகளைக் கவனித்துப் பார்த்தால் அது ஒன்றுதான் உறுதியாக நடக்கப்போகிறது என்று தான் தோன்றுகிறது. வெறும் மாநிலக் கட்சியாக மட்டுமே இருப்பதில் இதுதான் மிகப்பெரிய கோளாறு. மாநிலத்தில் நாங்கள்தானே சீனியர்! நேற்று வந்த BJP எப்படி எங்களை முந்தலாம் என்கிற அவர்களுடைய ஆதங்கம் ஒருவகையில் நியாயமாகத்தான் தோன்றும். ஆனால் அரசியலில் சீனியர் ஜூனியர் கணக்குகள் எடுபடுவதில்லை என்ற களயதார்த்தம் அவர்களுக்குப் புரியவே இல்லை. BMC மும்பை மாநகராட்சியைத் தாண்டி மிகப்பெரிய அரசியல் கனவுகளுக்குத் தயார் செய்து கொள்ளாத ஒரு fringe அமைப்பு, திடீரென்று ஒரு வாரிசைக் களம் இறக்கி முதலமைச்சராகவும் ஆசைப் படுவது ஒரு எலி, ஏன் ஒரு பெருச்சாளி என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன், ஒரே வாயில் ஒரு பெரிய யானையையே விழுங்கிவிடுவேன் என்று சவடால் விட்டுப் பார்க்கிற முயற்சிதான்! சேகர் குப்தா இந்த 22 நிமிட வீடியோவில் நேற்றைய நிலவரம் வரை சொல்கிறார். ஆனால் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டுமென்கிற ஆசை இருந்தாலும், இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்குவரமுடியாதபடி சிவசேனாவுடன் கூட்டு என்பது அத்தனை உறுத்தலாக இருக்கிறது.
Offer them chief ministership proportional to their seats, which is one-third. Give them 18 months, and BJP rest of the term till next elections. But get this in writing, for Sena cannot be trusted to keep word if given the first 18 months. Can go with NCP-Cong after 18 months
சிவசேனாவுக்காக இந்தத் தருணத்திலும் ஆதரவுக் குரல் கொடுக்க டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒருத்தர் மட்டும் தான் இருக்கிறார் போல. ஆனால் NCP கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு இன்றிரவுடன் முடிகிறது.
அப்புறம்? ஜனாதிபதி ஆட்சிதானா? புதிய சட்டசபை கூடாமலேயே suspended animation இல் தானா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!