ஒரு புதன் கிழமை! மஹாராஷ்டிரா அரசியல் குழப்பங்கள்!

உண்மையை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாமே மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்டதில் நிம்மதியோடு இருக்கின்றன. உடனடியாக இன்னொரு தேர்தலை மாநிலத்தில் சந்திப்பதற்குத் தயாராக இல்லை என்பதுதான் முக்கிய காரணம் என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை, பணம் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், ரிசல்ட் எதிர்பார்க்கிறபடி இருக்குமா என்ற சந்தேகம்தான் பணத்தையும் விட மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.


காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம். அரசியல் என்பது simple arithmetic மட்டுமே அல்ல என்பதை நண்பர்கள் இந்நேரம் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். அதேமாதிரி அரசியல் என்பது இங்கே திராவிடங்கள் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துகொண்டு வருகிற மாதிரி வெட்டி சவடால்கள், வீர வசனங்களால் மட்டுமே, செய்யப்படுவதல்ல என்ற பாடம் சிவசேனாவுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும்   கற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் பேசியதில் வெளிப்பட்டிருக்கிறது. 

சிவசேனாவை விட காங்கிரஸ் நிலைமை இன்னும் பரிதாபம்! NCPக்கு அடுத்து எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லையே என்று நிருபர்கள் கூட்டத்தில் நேற்று வெளிப்படையாகப் புலம்புகிற அளவுக்கு, இன்னொரு தேர்தலுக்குத் தயாராக இல்லை, ஆட்சியில் பங்குபெறுகிற வாய்ப்பைக் கோட்டை விட்டு விட்டால் காங்கிரஸ்கட்சி மாநிலத்தில் இனி மீளவே மீளாது என்று கட்சியின் சமஉக்கள் அழுத்தம் ஒருபுறம், இன்னமும் காங்கிரசுக்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருக்கிற மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற AK அந்தோணி போன்றவர்கள் கொடுக்கிற அழுத்தம் ஒருபுறம், ஆக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத தலை(மை)யில் வெற்றிடமாக இருக்கிற கட்சி மேலிடம் காங்கிரசின் நிலையை இன்னும் பரிதாபமானதாக ஆக்கி வைத்திருக்கிறது. Maharashtra political crisis: Lending support to Shiv Sena will be a risky deal in the long run for Congress என்று    FirstPost  தளத்தில் தேபோப்ரத் கோஸ் எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையைவிட மிகச் சுருக்கமாக நச்சென்று வந்திருக்கிற பின்னூட்டம் இன்னும் கூர்மையாக நிலைமையைச் சொல்லிவிடுகிறது.
Rakesh Katyal
There will  be two winners and two losers if SS, NCP and Cong form government. SS is any case biggest loser, Cong will be the next having compromised without any major benefit. BJP will be biggest gainer, NCP being next having retrieved some ground. BJP will become the major national party in Maharashtra and NCP the major regional party.  

சிவசேனாவுக்கும் விஷயம் மெல்ல மெல்ல உறைக்க ஆரம்பித்திருக்கிறதென்பது Drawing back from its previous claim about filing new plea in Supreme Court, the Shiv Sena on Wednesday said it is not seeking an urgent hearing in the apex court, CNN-News18 reported.It was also reported that the party will file new petition only after letters of support from the NCP and Congress என்கிற தற்போதைய செய்திநிலவரத்தில் தெரிகிறது.


இந்தப்பிரச்சினையில் NCPயின் சரத் பவார் double game ஆடினாரா என்பது கவனிக்கப்படவேண்டிய சுவாரசியமான விஷயம். நேற்றிரவு   8.30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 11.30 மணிக்கே சரத்பவார் கூடுதல் அவகாசம் கேட்டுக் கடிதம் அனுப்பவேண்டிய அவசியம் என்ன? சிவசேனா காங்கிரஸ் இருகட்சிகளுக்கும் தெரியாமல் விஷயம் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது ஏன்? நேற்று முந்திக்கொண்டு திங்கள் காலைமுதல் இரவு 7மணிவரை காங்கிரஸ் ஆதரவுக்கு கடிதத்துக்காகக் காத்திருந்தோம், வரவில்லை  என்று நிருபர்களிடம் போட்டுடைத்ததன் காரணம் என்ன?

கதை கட்டுரைகளை விட அரசியல் மிக சுவாரசியமானது! கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தான் சுவாரசியம் பிடிபடும்! 

மீண்டும் சந்திப்போம்.          

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!