Showing posts with label ச்சும்மா ஜாலிக்கு. Show all posts
Showing posts with label ச்சும்மா ஜாலிக்கு. Show all posts

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! வரணே அவஸ்யமுண்டு

மலையாளத்திரைப்படங்களின் மிகப்பெரிய பலமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்துவிட முடிவதுதான்! ஏதோ ஒருகதை! அதையே கொஞ்சம் வித்தியாசமாகப் படமாக்குகிற வித்தை மலையாளிகளுக்கு இயல்பாகவே தெரிந்திருக்கிறது. சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைத் தகவலாகத் தருகிற ஒருதளத்தில் இருந்து தான், வெறும் நாலரைக்கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வரணே அவஸ்யமுண்டு படம் கடந்த இருமாதங்களில் 32 கோடி ரூபாய்அளவுக்கு வசூலைக் குவித்திருக்கிறது என்ற தகவலைத் தெரிந்து கொண்டேன். படத்தைப்பார்க்கிற ஆவலையும் தூண்டிவிட்டது.


துல்கர் சல்மான் இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் முதன்முறையாக ஆகி இருக்கிறார் என்பது தவிர கொஞ்ச வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் இந்தப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது கூடுதல் விசேஷம். கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகநடிகையாகவே தெரியாதபடி அப்படி ஒரு இயல்பான நடிப்பு! அது போக மீரா கிருஷ்ணன், ஊர்வசி, என்று பரிச்சயமான முகங்கள். சத்யன் அந்திக்காடின் மகன் அனூப் சத்யன் இந்தப்படத்தின் வழியாக இயக்குனராக ஆகியிருக்கிறார். ஒரு நல்ல டீம் ஒன்றுசேர்ந்து இருப்பதில் ஒரு சுமாரான கதையையும், சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் சுமார் இரண்டரை மணிநேரம் அலுப்புத்தட்டாமல் படம் நகர்கிறது.


சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டைவீட்டுக்காரர்களாக கதாபாத்திரங்கள் ஒவ்வொரு செட்டாக அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். பிபீஷ் என்கிற   fraud ஆக துல்கர் சல்மான்,  சென்னையில் தன்னுடைய நிகிதா என்கிற மகளுடன் (கல்யாணி ப்ரியதர்ஷன்)  குடியேறும் ஆசிரியை நீனா (ஷோபனா), அதே குடியிருப்பில் திருமணமாகாத பட்டாளக்காரராக (சுரேஷ் கோபி) மேஜர் உன்னிகிருஷ்ணன் இவர்கள் தான் கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். மற்றவர்கள் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு காதலாக முகிழ்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது கதைச்சுருக்கம். காட்சிகளைக் கோர்வையாகச் சொல்லிக்கொண்டே போகிற விதம் இந்த அரதப்பழசான கதையைக் கூட மிக நேர்த்தியான கதைக்களமாக மாற்றிவிடுகிறது. 


துல்கர் சல்மானுக்கு இது ஒரு வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது. கதையைத் தேடாமல், லாஜிக் மீறல்கள் இருக்கிறதா என்ற நோண்டல்கள் இல்லாமல் இருந்தால், பொழுதுபோக்க ஒரு நல்ல படம் என்றே சொல்லலாம். Netlix இல் கிடைக்கிறது. 

என்னுடைய ரேட்டிங் 7.5 / 10 

மீண்டும் சந்திப்போம்.  
      

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு புதுப்பட விமரிசனம்! ராஜாவுக்கு செக்!

கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய படம் சேரனின் ராஜாவுக்கு செக்! ஜனவரி 24 அன்று திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சேரனின் படம் என்பதால், பார்ப்பதில் மனத்தயக்கம் எதுவுமில்லாமல் படத்தைப் பார்த்தேன். பார்த்தபிறகு தான் தெரிந்தது இது சேரன் எழுதி இயக்கிய படமில்லை, சேரன் நடித்திருக்கிற படம் மட்டுமே என்று! சேரன் கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை! இயக்குனர் சாய் ராஜ்குமார் ஏற்கெனெவே தமிழில் மழை என்ற ஜெயம் ரவி, ஷ்ரியா சரண் நடித்த படத்தை இயக்கியவர்! தயாரிப்பாளர், இசையமைப்பாளர்,  பல நடிகர்கள் தமிழுக்குப் புதிது.

   
ட்ரெய்லரைப் பார்த்தால் ஒரு த்ரில்லர் ரகமாகத் தெரிகிறது இல்லையா? இயக்குனர் இதை ஒரு எமோஷனல் த்ரில்லர் என்று சொல்லிக் கொள்கிறார். படத்தில் சேரன், ராஜா செந்தூர்பாண்டி என்ற போலீஸ் அதிகாரியாக! ஒரு மிக அபூர்வமான, நாட்கணக்கில்  தூங்குகிற ஒரு வியாதி! மனைவி காரணமேதும் சொல்லாமல் விவாகரத்து கோருவதில், வழக்கு 10 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே வந்து, நீதிபதி முன் விசாரணைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. பத்துவருடமாக மகளைப் பிரிந்து இருந்தேன் ஒரு 10 நாள் தன்னுடன் இருக்க ஒப்புக் கொண்டால் விவாகரத்துக்குச் சம்மதிப்பதாக நாயகன் சொல்ல, அடடே! இந்த தகப்பன் மகள் பாசத்தை ஏற்கெனவே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்துவிட்டாரே என்று நினைத்தால்,  அங்கே ஒரு திருப்பம்! 


அங்கிருந்து கதைக்களம் இயக்குனர் சொன்ன மாதிரி ஒரு  எமோஷனல் ட்ராக்குடன், ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகப் பயணிக்க ஆரம்பிக்கிறது. மகள் பத்தாம் நாள் முடிவில், தந்தைக்கு சர்ப்ரைஸாக நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று ஒருவனை அறிமுகப் படுத்துகிற மாதிரி! அங்கே  pause செய்துவிட்டு, சேரன் முந்தைய நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரியாக, சிறைக்கு அனுப்பிய ஒரு வசதியான இளைஞன் விவகாரத்தை பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு, கதை மேலே நகர்கிறது. மகளைப் பணயமாக வைத்து வில்லன் ஆடுகிற விளையாட்டில் சேரன் எப்படித் தவிக்கிறார்? மகளை மீட்க முடியுமா? இப்படிப் பார்வையாளர்களை சூடேற்றிக் கொண்டே கதை மெல்ல மெல்ல நகர்ந்து சேரன் எப்படி ஜெயிக்கிறார் என்பதோடு முடிகிறது.

V 1 மர்டர் கேஸ் மாதிரியே இதுவும் கூட ஒரு பட்ஜெட் படம்தான்!  எடுக்கப்பட்ட விதத்தை விட, இயக்குனர் தான் சொல்ல விரும்பிய ஒரு மெசேஜை எப்படி உறுத்தாமல், பா ரஞ்சித் மாதிரி பிரசார நெடி  தூக்கலாக இல்லாமல், அளவோடு சொல்லியிருந்தார் என்பதற்காகவே ஒரு விமரிசனமாக எழுதினேன்.

இங்கே இந்தப்படத்தில் இயக்குனர் சமூகத்துக்கு மெசேஜ் எதையும் சொல்லமுற்படவில்லை. தந்தை மகள் பாசப்பிணைப்பு என்று சேரனுக்கு ராசியாகிப் போன ஒரு ட்ராக் ஒருபக்கம்! சேரனால் சிறைக்குப் போன வில்லன் நண்பர்கள் பரிவாரத்தோடு, அதே பாசப் பிணைப்பை வைத்தே, பழிவாங்க முனைகிற ட்ராக்  இன்னொருபக்கம் என்று விரிகிற கதைக்களம். அலுப்புத்தட்டாமல் படம் நகர்வதில் சேரனுக்கு இருக்கிற brand image ஒரு முக்கியமான காரணம்.

படத்தில் பரிச்சயமான முகங்கள் என்று பார்த்தால் சேரனைத் தவிர சப்போர்டிங் ரோலில் ஸ்ருஷ்டி  டாங்கே மற்றும் அந்தநாட்களில் பிரபலமாக இருந்த கனா காணும் காலங்கள் சீரியலில்  நடித்த இர்ஃபான் வில்லனாக, என்று இருவர்தான். சேரனின் மகளாக நடித்திருக்கும் நந்தனா வர்மா தமிழுக்குத்தான் புதிதே தவிர மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரபலம் தான்! இசையமைப்பாளர் வினோத் யஜமான்யா கூட, அப்படித்தான்! மேலே கடவுளே கடவுளே பாடலைக் கூட இசையமைத்துப் பாடியிருப்பவர் அவர்தான்! பாட்டும் கூடக் கேட்க மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது!

மிகப்பெரிய லாஜிக் சொதப்பல் என்று பார்த்தால், ட்ரெய்லரில் சொல்கிறார்களே, நாட்கணக்கில் தூங்கும் வியாதி என்று, அது வில்லனுக்கு கூடத் தெரிந்து இருக்கிறது! ஆனால் பணியாற்றும் போலீஸ்துறைக்குத் தெரியாதா? எப்படி ஒரு போலீஸ் அதிகாரியாக நீடிக்கிறார் என்றெல்லாம் தமிழ்ப்பட இயக்குநர்களைக் கேள்வி கேட்டுவிட முடியாதே!

சேரனுக்காக, இந்தப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்! அதை இன்னொருமுறை இங்கே அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்!
  
மீண்டும் சந்திப்போம்.    

முகத்தில் முகம் பார்க்கலாம்! (முக நூலில்?) படித்தது! பிடித்தது!

முகநூல் தமிழில் ரத்தபூமியாக ஆபாச வசவுகளின் தனிப் பெருந்திரட்டாக இருந்தாலும் அங்கங்கே வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற, படித்து மறந்து போன தகவல்களை மறுபடி நினைவு படுத்துகிற   பகிர்வுகளும் நிறைய இருக்கின்றன என்பதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்! பார்த்ததும் சிரிக்க வைக்கிற மீம்களும் நிறைய உண்டு. முதலில் சிரித்து விடலாம்!
ஏக் மார்...தோ துக்கடா...
இதத் தவிற எனிக்கி ஒன்னும் தெரியாதுய்யா!


இப்படி ஒரு கேப்ஷனோடு இசுடாலின் முழிக்கிற படத்தைப் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்வதாம்?

சேட்டைக்காரன் பதிவர் முகநூலில் கொஞ்சம் மறந்து போன பழைய தகவல்களை எடுத்துக் கொடுக்கிறார்

படித்ததும் பிடித்தது:




பால்சாஹேப் தாக்கரே எமர்ஜென்ஸியை ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பை மாநகராட்சி தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சட்டவிரோதமான கட்டிடங்களை இடித்தபோது, அப்போதைய ஆணையருக்கு போன் செய்து நிறுத்தச் சொன்னவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்தால் பிரதீபா பாட்டீலை குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆதரித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சஞ்சய் தத்துக்கு ஆதரவாகப் பேசினார், எழுதினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மராட்டியர் என்ற ஒரே காரணத்துக்காக ஷரத் பவார் பிரதமராக வேண்டுமென்று சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாப்ரீ மஸ்ஜிதை நாங்கள்தான் இடித்தோமென்று சொல்லிவிட்டு, வழக்கு பாய்ந்ததும் பல்டி அடித்தது எத்தனை பேருக்குத் தெரியும்?
மண்ணின் மைந்தர் என்ற கோஷத்தையும், தென்னிந்தியர் மீதான துவேஷத்தையும் அவர் கைவிடக் காரணம், மும்பை நிழலுலக தாதாக்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஹாஜி மஸ்தான் தொடங்கி, வரதராஜ முதலியார் வரை பால் தாக்கரேயின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர்களால்தான், ‘இனி மராட்டி பப்பு வேகாது,’ என்று ’ஹிந்துத்வா’வைப் பிடித்துக் கொண்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மகாராஷ்ட்ராவில் கொங்கண் பகுதி தவிர்த்து பிற பகுதிகளில் சிவசேனாவை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; பாஜக இல்லாவிட்டால் சிவசேனா மும்பையைத் தாண்டி ஒரு கவுன்சிலர் கூட பெற முடியாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மனிதர் இறந்துபோய் விட்டார்; இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம் என்று அவரை என்னமோ கடவுளுக்கு நிகராக வர்ணிப்பவர்களின் அறியாமையை என்னென்று சொல்ல?
அவரும் ஒரு சந்தர்ப்பவாதிதான்! ஆனால், பின்னாளில் மும்பை நிழலுலக தாதாக்களுக்கு சிம்மசொப்பனம் ஆனார் என்ற ஒரே காரணத்துக்காக அவரைப் பாராட்டலாம். அவ்வளவுதான்.
அப்பாவைப் போல பிள்ளை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
ஒரு வாசகநண்பர் பின்னூட்டத்தில் வந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டுவதில் அன்றைய காங்கிரசின் முன்னெடுப்பில் உருவானது தான் சிவசேனா என்று இந்த லிங்க்கை எடுத்துக் கொடுத்து இருக்கிறார். 

The SS was formed in 1966 with the help of Congress and Bombay industrialists to combat Commie unions in Bombay. BT added another ingredient to it called “Aamchi Mumbai” and non-Marathis to get out. Therefore, the first assault by SS was on Commie union leaders and the non-Marathis (South Indians, Bengalis etc). Many non-Marathi families were violently attacked and driven out of Mumbai.என்று சிவசேனாவின் கதை ஆரம்பம் ஆகியிருக்கிறது 


பரத்வாஜ் ரங்கன் விமரிசனமெல்லாம் ச்சும்மா! 
ஆமா ENPT மூணு நாலு வருசம் தான லேட்டா வந்துருக்கு? அப்புராணி இளம் ஹீரோயின காமக்காசுவெறி புடிச்ச கார்டியன் ப்ரொடியூசர் கொடும படுத்துற ப்ளாட்லாம் 80ஸ்லயே காலாவதி ஆகிருச்சே... இது அதுக்கு முன்ன எழுதின கதையா?! இன்னிக்கி தேதிக்கு காண்டம்பரரியா எடுக்கணும்னா ப்ரொடியூசர் ஜல்சா வீடியோவ ஹீரோயினே எடுத்து வெச்சுட்டு லீக் பண்ணவானு மெரட்டியே நடிக்க சான்ஸ் புடிக்கற மாதிரிதான் பண்ணனும். டைட்டில் கூட என்னை நோக்கி பாயும் அனகோண்டானு வெச்சா மேட்சிங்கா இருக்கும்.😫 
இத்தனை ஷார்ப்பா ஷார்ட்டா விமரிசனம் பார்த்து எத்தனை நாளாயிற்று! 
மீண்டும் சந்திப்போம்.

அரசியல் குழம்பித் தெளியட்டும்! நாம பாட்டுக் கேட்கலாம்!

கர்நாடக அரசியல் நிலவரங்களைத் தொடர்ந்து பார்த்துச் சலித்ததில் கொஞ்சம் திரையிசை இருந்தால் நிம்மதி தான் இல்லையா? ச்சும்மா ஜாலிக்கு!  ஹிந்தி தமிழ் எல்லாம் கலந்து கட்டி வரும்! Enjoy!😎😎😄😄
  

தமிழில் கூட இதே மெட்டில் கேட்டிருப்பீர்கள்! அதை எப்படி நினைவு படுத்துவதாம்? சொல்லுங்கள்!  


சங்கம் படத்தில் ஒன்று சேராத ராஜேந்திரகுமார் வைஜயந்தி மாலா ஜோடி சேரும் படம் சூரஜ்! 1966 இல் வந்த இந்தப் படத்தை மதுரை சென்ட்ரல் டாக்கீசில் பார்த்ததாக நினைவு. ராஜேந்திரகுமார் மூஞ்சிக்காக இல்லையென்றாலும் மொகமது ரஃபி குரலுக்காக இரண்டு மூன்று முறை பார்த்த படம்.


தோ ராஸ்தே! பால்ராஜ் சஹானி, ராஜேஷ் கண்ணா, மும்தாஜ் நடித்த படம். அப்போதும் இப்போதும்  ஹிந்தி தெரியாது, அதனாலென்ன? பாட்டுக்காகவே ஹிந்திப்படங்களைப் பார்த்த காலம் அது. இது மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தது.  

       
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்கிறபோதே PB ஸ்ரீநிவாஸ் குரலும், படத்தில் ஆனந்தனோடு ஆடுகிற EV சரோஜா கண்களும் சேர்ந்தே ஞாபகம் வரும்! கண்ணழகி காந்தா!


இந்தப்பாடலைக் கேட்கிறபோதெல்லாம் MGR என்கிற மனிதர் தன்னுடைய ரோலோடு நின்றுவிடாமல் படத்தின் அத்தனை அம்சங்களிலும் கவனம் செலுத்தியதால் தான் நிறைய ஹிட் பாடல்கள் அவருக்கு அமைந்ததோ என்று நினைக்கத் தோன்றும்! நடனங்களிலும் அத்தனை graceul moves!


நாகேஷ்! தமிழ்த்திரைப்படங்களில் முடிசூட்டப்படாத  காமெடிச் சக்ரவர்த்தி! நடனத்திலும் கூட! ஜெர்ரி லூயிஸ் சாயல் இருந்தாலும்  நாகேஷ் தனக்கென்று ஒரு புதுப்பாணியை உருவாக்கிக் கொள்ளத் தவறியதே இல்லை! 

கர்நாடக சித்தராமையா ஏற்றிய கடுப்பைக் குறைத்த பாடல்கள் இவை. 

மீண்டும் சந்திப்போம்.