ஹரியானா, மஹாராஷ்டிரா இருமாநிலங்களிலும் சட்ட சபைத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதில் ஒரே ஒரே கேள்விதான்! ஹரியானாவிலோ மஹாராஷ்டிராவிலோ சென்ற 2014 சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த சொற்ப இடங்களையாவது காங்கிரஸ், NCP முதலான உதிரிக் கட்சிகள் தக்கவைத்துக் கொள்ள முடியுமா அல்லது அதிலும் கோட்டை விடுவார்களா என்பது மட்டும்தான்!
காங்கிரசையே தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற NDTV யுமே கூட அதை மறைக்கவோ தெளிவாகவே பூசிமெழுகவோ முடியவில்லை என்பது இன்றைய ஊடக அதிசயம்! இத்தனை நாட்கள் காங்கிரசை உதிரிக் கட்சி என்று நான் சொன்னதில்லை, ஆனால் இந்தத் தேர்தல்களில் அதை விட மோசம் என்பது உறுதியாகி வருவதுதான் விஷயமே! பிஜேபிக்கு சரியான அரசியல் மாற்று சக்தியாக இருப்பதற்கு லாயக்கில்லாத கட்சியாகக் குறுகிப்போய்விட்ட காங்கிரசின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவானேன்? டெக்கான் க்ரானிக்கில் நாளிதழில் Centre for the Study of Developing Societies (CSDS) என்ற அமைப்பின் இயக்குனர் சஞ்சய் குமார் இன்று எழுதியிருக்கிற இந்தச் செய்திக் கட்டுரை கொஞ்சம் சுவாரசியமான அலசலாக இருக்கிறது. முக்கியமாக உள்ளூர்ப் பிரச்சினைகள் ஏன் சமீபகாலத் தேர்தல்களில் பிரதான காரணமாக இருப்பதில்லை? இந்தக் கேள்விக்கு சரியான காரணத்தைத் தேட இங்கே எவருமே முனைவதில்லையே, ஏன் என்கிற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருக்கிறது.
பிஜேபிக்கு எதிர்ப்பு வெளியே இருந்து இல்லை என்பது உண்மைதான்! ஆனாலும் உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பார்களே அதுபோல மஹாராஷ்டிராவில் சிவசேனா பிஜேபி கூட்டணியில் இருப்பதுபோக, பிஜேபி பக்கம் காற்று வீசுகிறது என்பதற்காகவே கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட ஒருநாள் ஆகலாம்! தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையோடு முடிந்து விட்டாலும் சிவசேனாவின் நாளிதழ் சாம்னாவில் சஞ்சய் ராவத் ஒரு அக்கப்போரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்:
A day after the high-spirited campaigning for the Maharashtra Assembly polls came to an end, the Shiv Sena on Sunday sought to know why there were so many BJP rallies with leaders like Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah addressing them, when Chief Minister Devendra Fadnavis feels that there is no opposition left in fray to challenge his party-led alliance. “The chief minister has been asserting that the opposition ‘does not exist’ any more in the poll campaign. The question then arises about the motive behind some 10 rallies of (Prime Minister) Modi, 30 of (Union Home Minister) Amit Shah, and Fadnavis himself holding 100 rallies across Maharashtra,” Sena leader Sanjay Raut wrote in a column in the party’s mouthpiece ‘Saamana’. என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. ஆனால் இதுமாதிரி நிறைய அக்கப்போர்களைச் சந்தித்துவிட்டுத் தான் பிஜேபி இன்று வளர்ந்திருக்கிறது.
டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாரை சந்திப்பதற்காக, காங்., தலைவர் சோனியா இன்று (அக்., 21) திகார் சிறைக்கு செல்ல உள்ளார். சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிவக்குமார், கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சிவக்குமாரை சோனியா சந்திக்க உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று காலை திகாருக்கு சென்று சிவக்குமாரை சந்தித்துள்ளார் என்கிறது தினமலர். போகிற போக்கைப் பார்த்தால் காங்கிரசின் முக்கியப்புள்ளிகள் திஹார் சிறையிலேயே தங்கள் கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டிவருமோ?
வந்தால் நாட்டுக்கு மிகவும் நல்லது! மீண்டும் சந்திப்போம்.
நீங்க சொன்னதைத் தான் சுப்பி என்கிற சுப்ரமணியன் சுவாமியும் சொல்லி உள்ளார். தீபாவளிக்கு அப்பூச்சி வெளியே வருவாரா? தேங்காய் பலகாரம் செய்ய நினைத்துள்ளேன். எங்கே அனுப்பி வைப்பது? அது தான் இப்போது அவர் வயிற்றில் செரிக்கும். காரணம் எல்லாமே கடந்த ஒரு மாதத்தில் கழன்று போயிருக்கும்.
ReplyDeleteடாக்டர் சுப்ரமணியன் சுவாமியை நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இன்னும் நிறையப்பேர் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஜோதிஜி! பிஜேபி கூட அவரை கருவேப்பிலை மாதிரித்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
Deleteசீனாதானா விவகாரத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் புள்ளிகள் விவகாரங்களில் கூட, இவர்கள் மறுபடி ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையற்றுப் போய்க் கொண்டிருப்பதில் இப்போதுதான், இதுவரை உறுதுணையாக இருந்த அதிகாரிகள் கும்பலும் நீதிமன்றங்களும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தீபாவளிக்குப் பலகாரம் அனுப்பிவைப்பதாயிருந்தால் திகார் முகவரிக்கே அனுப்பி வைக்கலாம்! :-)))