மண்டேன்னா ஒண்ணு! டொனால்ட் ட்ரம்ப்! அப்புறம் தான் மற்றவை!

நேற்றைக்கு ISIS இன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப்படையினரால் வேட்டையாடப்பட்ட செய்திதான்  தீபாவளிக் கொண்டாட்டமாக, மிகவும் முக்கியமானதாக இருந்ததென்று கூட சொல்லலாம்! சதா செய்திகளிலேயே வாழ்கிற ஒருவனுக்கு வேறெது அத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்க முடியும்? கொஞ்சம் சொல்லுங்கள்!  நேற்றிரவே  டொனால்ட் ட்ரம்ப்  அபு பக்கர் அல் பக்தாதி, ஒரு நாயைப் போல பயத்துடனும் கோழைத்தனத்துடனும் மரணத்தைச் சந்தித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டதை நேரலையில் பார்த்து விட்டாலும் கூட நண்பர்களுக்காக இங்கே ஒரு சுருக்கமான  8 நிமிட வீடியோ!
   
  
1. "He died after running into a dead-end tunnel, whimpering and crying and screaming all the way."
2. "The thug who tried so hard to intimidate others spent his last moments in utter fear, in total panic and dread, terrified of the American forces bearing down on him." இப்படி டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பேசியதில் இருந்து 41 வாக்கியங்களை மேற்கோள் காட்டி CNN விமரிசித்திருந்தது டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க ஊடகங்களுக்கு இருக்கிற வெறுப்பரசியல்!  ஆனால் கொஞ்சம் substance இருக்கிற வெறுப்பரசியல் என்பதையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட வேண்டும்!


அபு பக்கர் அல் பக்தாதியின் மரணம் மத்திய கிழக்கில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த 4 நிமிட வீடியோவில் விவாதிக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்புக்கு இது அரசியல் ரீதியான ஒரு வெற்றியாக இருக்கலாம்! ஆனால் தகுதி நீக்கம் (impeachment) செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க எந்தவிதத்திலும் உதவாது என்று கறுவுகிறது இன்னொரு CNN analysis! அது ஒரு பக்கம் என்றால் பிரிட்டனின் The Independent நாளிதழில் As long as Trump is in power, Baghdadi's death will not necessarily make the world a safer place- Donald Trump took obscene personal credit for the death, yet has put Isis back in business by his withdrawal of American forces from Syria என்று தலைப்பிட்டு இந்த விஷயத்தை விமரிசிக்கிறது. 


சிவசேனா தன்னுடைய சீனியர் நாட்டாமையைக் காட்டுவதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது என்பதில் காங்கிரசுக்கு இன்னும் கொஞ்சம் நப்பாசை! பிஜேபியை உதறிவிட்டு வந்தால் சிவசேனா தலைமையில் ஆட்சியை ஆதரிக்கத் தயார் என்று நூல்விட்டுப் பார்க்கிறதாம்! 


ஹரியானாவில் இதே நூல் அறுந்துபோய், பிஜேபியின்  மனோகர்லால் கட்டார் நேற்றைக்குப் பதவிப் பிரமாணமும் செய்துகொண்டு விட்டார். ஆனால் மஹாராஷ்டிராவில் மந்திரிசபை பதவியேற்க  நவம்பர் 2, அல்லது 3 தேதி ஆகலாம் என்கிறது இன்றைய செய்தி. காங்கிரசின் சஞ்சய் நிருபம் ட்வீட்டரில் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள் 


Instead of doing futile exercise,we must introspect why the party has lost 2 percentage of votes as compared to 2014 assembly election.We are down from 17 % to 15 % this time as total polled votes are concerned. As party we have come down to the 4th number from 3rd in the state.

அனுபவசாலியான சரத் பவார், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிற எண்ணமே இல்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார். ஆனாலும் காங்கிரசுக்கு நப்பாசை இன்னமும் இருக்கிறது. சிவசேனாவை சமாளிக்க  பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் வெளிப்படையாகத் தெரியவில்லை. 

மீண்டும் சந்திப்போம்.   
   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!