Showing posts with label யெஸ் பேங்க். Show all posts
Showing posts with label யெஸ் பேங்க். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! அக்கப்போர்களும் அரசியலும்!

இந்திய அரசியல், அதிலும் தமிழக அரசியல் வெறும் அக்கப்போர்களால் ஆனது என்பதை அனுபவ சத்தியமாகப் பார்த்து வந்திருக்கிறோம்! நாளுக்குநாள் அதிகரித்துவருகிறதே தவிர குறைகிற வழியாய்க் காணோம்! இதில் எந்த அக்கப்போருக்கு முன்னுரிமை கொடுத்து எழுதுவது என்கிற அக்கப்போர் வேறு! முதலில் ரஜினிகாந்துக்கு பொழிப்புரை தேவைப் படுகிற அக்கப்போரைப் பார்த்துவிடலாமா?


ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து  சுமார் 3 நிமிடம் பேசியதற்கு ரங்கராஜ் பாண்டே சுமார் 30 நிமிட பொழிப்புரை கொடுத்ததை சுபவீ செட்டியார் இது பார்ப்பனீயச் சதி என்று புறந்தள்ளிவிட்டு தமிழருவி மணியன் வந்து பொழிப்புரை தந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார். பாண்டே பார்ப்பனர்தான், ஆனால் பாப்பாத்தியைக் கட்டிக் கொண்டதாலேயே ரஜனியும் பாப்பான்தான் என்றாக்கின அவசரம் அவஸ்தை சுபவீ செட்டியாருக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் அவர் வேண்டுகோளை தமிழருவி மணியன் நிறைவேற்றி விட்டார் என்பதில் சுபவீ செட்டியார் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்! நேற்றைக்கு இந்த 58 நிமிட பொழிப்புரை  நேரலையில் ஒளிபரப்பானபோது ஆடியோ சுத்தமாக இல்லை. இப்போது ஆடியோ சரியாக இருக்கிற வீடியோவை  வலையேற்றி இருப்பது இங்கேயும். கூடவே ஒரு கருத்துக்கணிப்பு முடிவையும் வெளியிட்டிருக்கிறார்கள். சரியான குசும்பு!
  

ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து சொன்னதில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என்றார். மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜனி ஒன்றரை மணிநேரம் பேசியதில் என்ன நடந்தது என்று ரங்கராஜ் பாண்டே சொன்னதைத்தான், இங்கே தமிழருவி மணியனும் ஒருமணிநேரமாக நீட்டி முழக்கிச் சொல்கிறார். சுபவீ செட்டியார் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பவன் நான் ஒருவன்தான் இருப்பேன் போல!


அபிஷேக் மனு சிங்வி மாதிரி காசுக்கார வக்கீல் வக்காலத்து வாங்கிப்பேசும்போது, இந்த கொடுக்கல் வாங்கலில் என்ன தவறு இருக்கமுடியும் என்றுதான் தோன்றும்! ஆனால் நடந்தது வக்கீல் வக்காலத்து வாங்குகிற மாதிரித்தானா?

   
முதலில் M F ஹுசைன் வரைந்து கொடுத்த ராஜீவ் காண்டியின் படம் பிரியங்காவுடையது தானா? அல்லது காங்கிரஸ் கட்சியின் சொத்தா? அப்புறம் அதன் விலை சந்தைமதிப்பில் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று யார் மதிப்பீடு செய்தார்களாம்? அதற்கப்புறம் ராணா கபூர் என்ன காரணத்துக்காக அவ்வளவு விலை கொடுத்து அந்தப்படத்தை வாங்கினாராம்? 

#பணவாசனை அடிக்கிற இடங்களில் எல்லாம் நம்மூர் பானாசீனா இருப்பார், அப்படியே காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். ஆக யெஸ் பேங்க் விவகாரத்தில் இன்னும் பூதங்கள் வெளியே வந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.


சேகர் குப்தா இந்த 26 நிமிட வீடியோவில் யெஸ் பேங்க் விவகாரத்தைக் கொஞ்சம் பாலிஷ் போட்டுச் சொல்வது என்ன? காங்கிரஸ் சார்புள்ள ஊடகக்காரர்தான்! மாற்றுக் கருத்து என்ன, எப்படி நகாசு செய்து செய்தியைச் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?  

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யெஸ் பேங்க் விவகாரம் இன்னும் சிலகாலத்துக்குப் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாகத்தான் இருக்கும். ஒரு முன்னாள் வங்கியாளனாக, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு மட்டும் விருப்பமிருக்காதா என்ன!! 

மீண்டும் சந்திப்போம்.         

சண்டே supplement! யெஸ் பேங்க் புராணம்!

பானாசீனா எகத்தாளம் கொஞ்சம் ஓவராகவே போய் விட்டதோ, ? பானாசீனா எகத்தாளம் தன்னுடைய பங்கு வெளிப்பட்டுவிடாமல் இருக்கச் செய்த தந்திரம்தான் என்றாலும் அது முன்னாள் கூட்டாளி ராணாகபூர் மற்றும் குடும்பத்தினர் சிக்கிக் கொள்ளக் காரணமாகவும் ஆகிவிட்டது போல! முந்தைய பதிவின் கடைசிப்பகுதியாக ஒரு முகநூல் பகிர்வை முழுதுமாகக் கொடுத்திருந்ததை எதற்கும் ஒருமுறை வாசித்து விடுங்களேன்!


இந்த 20 நிமிடத்தொகுப்பில் இன்று அதிகாலை ராணா கபூர் கைதுசெய்யப்பட்டதில் இருந்து தோண்டத் தோண்ட நடந்த மோசடிகளின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள், லண்டனுக்குத் தப்ப முயன்ற ராணாகபூர் மகள் மும்பை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டது என்று ஏகக்கதைகள் வெளியே வந்திருக்கின்றன.

    
பானாசீனாவின் அதிமேதாவித்தனம் பிரியங்கா வாத்ராவையும் யெஸ் பேங்க் விவகாரத்துக்குள் இழுத்து விட்டிருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது! ஓவியர் பிரியங்கா வாத்ரா வரைந்த ஓவியத்தை ராணா கபூர் 2 கோடி கொடுத்து வாங்கியதாக ஒரு சந்தேகம்! இதே டெக்னிக்கை  முன்பு மம்தா பானெர்ஜியும் கையாண்டு காசுபார்த்தார் என்பதையும் அப்படியே ஒரு நினைவூட்டலாக!  

சேகர் குப்தா என்ன சொல்கிறார்?
வீடியோ 22 நிமிடம் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுப்போன சுமை என்று சொன்னதில் எந்தத்தவறும் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்து ஆறாண்டுகளாகிறதே என்று கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. 2004 - 2014 வரையிலான ஐமுகூ அரசு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தது தெரிந்த விஷயம். அரசு, வங்கிகள் நிர்வாகத்திலும்  பெருச்சாளிகள்  இன்னமும் தொடர்வதை அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாதபடி தற்போதைய சட்டங்கள், நீதிமன்ற  முடிவுகள் இருப்பதை மறந்துவிட முடியுமா?

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #அரசியல் #விமரிசனங்கள் #யெஸ்பேங்க்

இந்த ஞாயிற்றுக் கிழமை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் செய்தியாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது இருக்கிறது.  இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி மட்டுமல்ல, சமீபநாட்களில் வெளிநாட்டு ஊடகங்கள், மற்றும் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியா மீது தொடர்ந்து கக்கும் வன்மம் கலந்த விமரிசனங்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மீதான ஒன்லைனர்.

    வீடியோ 32 நிமிடம் 

குளோபல் பிசினெஸ் சம்மிட் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கம். சர்வதேச அரங்கில் நம்முடைய நண்பர்களை இழந்து வருகிறோமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் மிக ஆழமானது. "Maybe we are getting to know who our friends really are." ஒருவேளை நம்முடைய நண்பர்கள் யாரென்று தெரிந்து கொள்ளப் போகிறோமோ? முந்தைய நாட்களில் ஒதுங்கியிருப்பதே உலக விவகாரங்களை எதிர்கொள்வதற்கான வழி என்று இருந்தது இனிமேலும் அப்படியே தொடர முடியாது. உலகத்தின் 5வது பெரிய பொருளாதாரமான இந்தியா விரைவிலேயே மூன்றாவது இடத்தைப் பிடிக்க இருக்கிற தருணத்தில் எல்லோருடனும் புழங்கத்தான் வேண்டும்! தீர்வுகளையும் கண்டாக வேண்டும் என்று வெளியுறவு விவகாரங்களைக் கையாளுவதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சொன்னார்.

CAA பற்றி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி 
நாலே நிமிடம்!  

CAA குறித்து வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் கூட  எழும் விமரிசனங்கள் கண்டனங்களுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி! எல்லோரையும் இருகரம் நீட்டி வரவேற்கிற எந்த ஒருநாடாவது உண்டா? "Everybody, when they look at citizenship, has a context and has a criterion. Show me a country in the world which says everybody in the world is welcome. Nobody does that. Look at America. Look at the Europeans. I can give you example of every European country. There is some social criterion," நாடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த சட்டத்திருத்தத்தின் வழியாக முயற்சி செய்திருக்கிறோம். அப்படிச் செய்ததிலும் கூட நமக்கே பெரும் தலைவலியாக மாறிவிடாதபடி செய்திருக்கிறோம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமை ஆணையம் செலெக்டிவாக இந்த விஷயத்தில் குறுக்கிட்டதையும் கண்டித்திருக்கிறார்.  

உண்மையில், நமக்கு , நம்மைத் தவிர யாரும் இல்லை என்பது தான் உண்மை. அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உறவுகளை பேனுகிறோம்...அம்மா கூட நம்முடன் இல்லை...இந்த புரிதல் தான் இந்த வாழ்வின் விடுதலை உணர்வாக இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
பொதுவாய் உறவுகளை பேணுவதில் நான் மிக பலவீனமானவள். எந்த உறவையும் கையாளத் தெரியாது..யாரையும் ஈர்க்கவோ, இருத்தி வைத்துக் கொள்ளவோ கூடிய வசீகரம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவுகளை தேடுகிற
மெனக்கெடல் சுத்தமாக இல்லை.அதனாலேயே என் நட்பு வட்டம சிறு வயதிலிருந்தே ஒன்றிரண்டோடு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்...அது தான் இப்போது வரையிலும் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்துக்கு முன்பு வரை, என் எது ஒன்றுக்கும், வார்த்தைகளின் அரவணைப்பு தேடி நான் அங்கு தான் போய் விழுவேன்...
ஒருமுறை கனவு ஒன்றில் என் சிநேகிதி மறைந்து போன பிறகு , ஏதோ ஒரு நிகழ்வில் நான் கலந்து கொள்ள நேரிடுகிறது..அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலகலத்து பேசிக் கொண்டிருக்க , நான் என் சிநேகிதியை தேடுகிறேன்..அவள் மறைந்து போனது மறந்த நிலையில்.
பிறகு சட்டென உறைக்க , அந்த தருணத்தின் அனாதைத்தனம் இன்னுமே நினைவில் இருக்கிறது...எனக்கு இந்த உலகத்தில் பேச எதுவுமற்று , யாருமற்று. ..மொழி அறியாத கிரகத்தில் இனி காலத்துக்கும் தனித்து விடப்பட்டதை போல..அப்போது அந்த நிலையை தாங்கவே முடியாது மூச்சு முட்டியது..
இப்போதெல்லாம், பேசுவதற்கு எனக்கு நான் இருக்கிறேன் என்கிற இடத்தில், நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது.. 

கூகிள் ப்ளஸ் காலங்களில் நட்பாக இருந்து இப்போது விடுபட்டுப்போன பிரபா இன்றைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் முகநூல் பகிர்வில் கண்ணில் பட்டார். முகநூல் பக்கங்களில் புழங்குவதில்லை என்பதால் மகளிர் தின சிறப்பு விருந்தாளியாக அவருடைய நாலுநாள் முந்தைய பகிர்வு. இதுவே கூகிள் பிளஸ்சாக இருந்திருந்தால், ஏனம்மா சண்டைபோடவும் சமாதானமாகப் போகவும் நாங்களெல்லாம் இல்லையா என்று தலையில் ஒரு கொட்டும் வைத்திருக்கலாம்!

    
ஏற்கெனெவே ஒரு ரவுண்டு வந்த மேட்டர்தான்! ஆனால் #தமிழேண்டா குரூப்புகள் திருந்துகிற வரை இன்னும் பலரவுண்ட் வரலாம்! #வரலாம்வரலாம்வா  


மார்ஜின் கால் படத்தின் ஒரு சுவாரசியமான கட்டம் 

YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.
அந்த ஜூனியர் அன்று இரவே தனது மேலதிகாரிக்கு இதை தெரியப்படுத்துவான். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். இல்லை இப்போது கவனிக்காவிட்டால் வங்கி திவாலாகி விடும் என்று சொல்லவும் அலுவலகத்திற்கு ஓடி வருவார். அங்கிருந்து கதையின் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்த மேலதிகாரி அவருக்கு மேலுள்ள அதிகாரிக்கு அழைத்து சொல்வார். இதில் முடிவெடுக்க அவராலும் முடியாது. அவர் வங்கியின் CEOக்கு போன் போடுவார். அவர் நேரில் வந்து பார்த்து திகைத்துப்போய் வங்கியின் போர்டு மெம்பர்கள் அனைவரையும் அழைப்பார். இறுதியில் வங்கியின் சேர்மன் வந்து கேட்பார். இதெல்லாம் ஓர் இரவிற்குள் நடக்கும்.
எல்லா வகைகளிலும் தீரவிசாரித்தாலும் வங்கி திவாலாகி போவதை தடுக்க முடியாது என்றுதான் வரும். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்கும் வழிகள் எதுவும் கிடையாது என்று தெரியவரும்போது இரவு மூன்று மணி ஆகிவிடும். அப்போது இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். வங்கியின் அனைத்து பங்குகளையும், சொத்துக்களையும் கிடைத்த விலைக்கு விற்று வெளியேறுவது என்று முடிவெடுப்பார்கள்.
இது அநியாயம், நம்மை நம்பி இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இதனால் ஒரே நாளில் ஏமாற்றப்படுவார்கள். அவர்களின் முதலீடுகள் முற்றிலுமாக காணாமல் போகும் என்று விற்பனைத் துறை மேலதிகாரி கத்துவார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அதைப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னாவது? இருப்பதை விற்பனை செய் உன்னுடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்பார். வேறுவழியின்றி அவரும் மனசாட்சிக்கு விரோதமாக ஃபயர் சேல் செய்வார்.
மொத்தத்தில் வங்கியின் மேல்அடுக்கில் உள்ள அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு வங்கியை, அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்வார்கள்.
அந்தப்படத்தில் ஒருநாளில் செய்ததை எஸ் பேங்க் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடம் செய்திருக்கிறார்கள். வங்கியின் ஆரம்பகட்ட புரமோட்டர்கள் அனைவரும் நல்ல விலைக்கு தங்கள் பங்குகளை விற்றுவிட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆர்பிஐ இப்பொழுது பாவத்தை சுமக்கிறது.
- Karthikeyan   

மீண்டும் சந்திப்போம்.   

அப்பாலே தூரப் போ! காங்கிரஸ் சாத்தானே! யெஸ் பேங்க்!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு CAA NPR NRC இவைகளை வைத்து ஒருசில பல்கலைக்கழகங்கள், டில்லியின் சிலப்பகுதிகளை கலவரபூமியாக்கியது போதவில்லையாம்! கடந்த 5 நாட்களாக டில்லி கலவரம் பற்றி விவாதிக்கவேண்டும் என்று ரகளை, ஒரே அமளி! சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக  7 காங்கிரஸ் எம்பிக்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்கள். இரு அவைகளும் வருகிற 11 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. எதையும் பேசி விவாதித்து முடிவு செய்யவேண்டும் என்கிற ஜனநாயக நடைமுறை காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது.

    வீடியோ 16 நிமிடம்    

ஒரு தொடர் உரையாடல்களைநிகழ்த்தி ஒரு தெளிவுக்கு வரவேண்டும் என்கிற நடைமுறை கும்பலாகச் சேர்ந்து கூக்குரல் எழுப்புவது, கோஷமிடுவது, காகிதங்களைக் கிழித்து வீசுவது, மற்றவர்களைப் பேசவிடாமல் ரகளை செய்வது இதெல்லாம் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்ச்சி என்றாகி விட்டது. இந்த அசிங்கத்துக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டு வேறு!


இந்தச் செய்திக்கு தினமலர் நாளிதழில் ஒரு வாசகர் பின்னூட்டம்: காங்கிரஸ் கட்சியை ஒரு 150ஆண்டுகளுக்குத் தடை செய்து விட வேண்டும்! அந்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சி ஜனநாயக சீரழிவுகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.


யெஸ் பேங்க் மீது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. HDFC வங்கியின் ஆதித்ய பூரி இந்த விஷயத்தைப் பற்றித் தனது கருத்துக்களை 9 நிமிட வீடியோவில் சொல்கிறார். தொடர்ந்து   கடந்த சில  வருடங்களாகவே யெஸ் பேங்க் தடுமாறி வருவதும், அன்னிய மூலதனம் வரும், வருகிறது என்றே சொல்லிக் கொண்டிருந்ததும், வங்கித்துறை விஷயங்களைக் கவனித்துவருகிறவர்களுக்கு நன்கு தெரிந்த  செய்திதான்! ஏதாவது வங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளுமானால், பொதுத்துறை வங்கி ஒன்றுடன் இணைத்துவிட்டுப் பிரச்சினையை அப்படியே மறக்கடித்துவிடுவது முந்தைய ஆட்சிக் காலத்து நடைமுறை! பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் பல புதுப்பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதைப் பற்றி யார் கேட்கப்போகிறார்கள்? யார் கவலைப்படப்போகிறார்கள்?

நிதியமைச்சர் விரிவாகவே கேள்விகளுக்கு 
பதிலளிக்கிறார் வீடியோ 33 நிமிடம் 

ஆனால் தன்னைப் பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக் கொண்டு இருக்கிற பானாசீனாவுக்கு மெல்வதற்கு ஒரு புது விஷயம் கிடைத்துவிட்டது!


இந்த ஒன்று மட்டுமல்ல, அப்பச்சி வேகவேகமாக இன்னொரு நாலைந்து ட்வீட்டுகளையும் தட்டி விட்டிருக்கிறார் என்பதில் திருடன் திருடன் என்று முந்திக்கொண்டு கூவுகிற மாதிரிப் புலப்படுகிறது. 


அதிசயமாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இதில்   ஒரு சஸ்பென்ஸ் வைத்துக் கேள்வி எழுப்புகிறார்! 



பதறாமல் இருப்பது யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான்! ஆனால் நம்மூர் சூழலில் அது தவிர்க்க முடியாதது. பானாசீனா மாதிரிப் பெருச்சாளிகள் வெட்கமில்லாமல் கருத்து சொல்வதையும் கூட சகித்துக் கொள்ள வேண்டுமா?

அப்பாலே போ சாத்தானே என்று எப்போது தள்ளி வைக்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்