இது புதன்கிழமை! காங்கிரசோ கூட்டாளிகளோ வேண்டாமே!

முலாயம் சிங் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் மறுபடி நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும் என்று பாராட்டிப்பேசி, ஒரு புயலைக் கிளப்பி விட்டிருக்கிறார். சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு வைத்து, மோடி அரசை வீழ்த்தத் திட்டம் தீட்டி வரும் நிலையில், அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ் மக்களவையில் இன்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது என்கிறது ஹிந்து! காங்கிரசோடு நட்புறவு வைத்து என்பது எல்லோருக்குமே புதிய செய்தியாகத்தான் இருக்கும் போல!

   
டில்லிக்கு நேற்று வந்த மம்தா பானெர்ஜி அத்தனை சுரத்தாக இல்லை.நாடாளுமன்றத்தில் மம்தாவும், சோனியாவும் சந்தித்துக் கொண்டார்களாம்! சோனியா சமாதானமாக இப்படிச் சொன்னதாக! "We are accusing each other but we are friends," Sonia Gandhi told Mamata Banerjee என்கிறது NDTV செய்தி.      , 
A furious Mamata Banerjee today refused to calm down when Sonia Gandhi reached out to her after a Congress leader of Bengal attacked her in parliament. "We will remember," declared the Bengal Chief Minister when she encountered Sonia Gandhi, UPA chairperson and former Congress president, later! அதிர் ரஞ்சன் சவுத்ரி என்ற மே. வங்க காங்கிரஸ் எம்பி சாரதா மோசடியைப் பற்றிப் பேசிவிட்டாராம்!  Adhir Chowdhury had piped up during a discussion on a bill to crack down on unregulated schemes and chit funds, and said Mamata Banerjee was complicit in the Saradha chit fund scam. He said lakhs of people were looted and their money should be returned. His remarks were followed by chest-thumping by delighted BJP members.  

இப்படி சந்தித்துக் கொள்கிற தருணங்களில் ஒருமாதிரியும்  அந்தப்பக்கம் திரும்பும்போது முதுகில் குத்துவதுமாக,  மகா கெட்ட பந்தன் இதுவென்று அடையாளம் காட்டினால் என்ன சொல்வீர்கள்? 
லந்தென்றால் அப்படி ஒரு சூப்பர் அரசியல் லந்து! மம்தா பானெர்ஜி தன்னைக் காட்டுராணியாக நினைத்துக் கொண்டிருப்பதை டில்லியில் பல இடங்களில் பேனர் வைத்துக் கலாய்த்திருக்கிறார்கள்.
தமிழ்நாடுஎன்னடாவென்றால் யார் யாரோடு கூட்டணி எத்தனை சீட் என்பதைத் தாண்டி வரவே வராது போல! 
இது இப்படியென்றால் காங்கிரசுக்குக் கூட திட்டம், அடுத்த திட்டமெல்லாம் இருக்கிறதென்று இங்கே ஒரு காமெடி! சிரிக்கவா? முறைக்கவா? தெரியலையே!   
        

புதிதாக என்ன சொல்லிவிடப்  போகிறேன்? தென்கச்சி சுவாமிநாதன் இங்கே இன்று ஒருதகவலாக, முடிவுகளை சரியாக எடுங்கள் என்று சொல்வதற்கு மேல் வேறென்ன புதிதாகச் சொல்ல இருக்கிறது?
                                                     

2 comments:

 1. சென்ற பதிவுக்கான பின்னூட்டங்களே முழுமையாக இன்னும் பிரசுரமாகவில்லை. இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம் வந்தாலும் அது உங்களின் பதிலுடன் அடுத்த பதிவை நீங்கள் பதிப்பிக்கும் நேரத்தில் பிரசுரமாகும். வாசகர்களுக்கு புதுப் பதிவுகளைப் படிக்கத் தான் ஆர்வம் இருக்குமே தவிர சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தைப் பார்க்கவோ அதற்கு மறுவினை ஆற்றவோ தோன்றாது. இதனால் பின்னூட்டமிடுபவரும் நீங்களும் உரையாடுவதும் தான் தொடர்கிறதே தவிர மூன்றாவதாக ஒருவர் தன் கருத்தைச் சொல்வதற்கு இடம் இல்லாமல் போகிறது.

  அதனால் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை உடனுக்குடன் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

  இதனால் அதிக அளவில் வாசகர்கள் உங்கள் பதிவுகளை வாசிக்கவும் தங்கள் கருத்துக்களை பதியவும் வழியேற்படும்.

  அடுத்த பதிவிலிருந்து இந்த குறைபாடை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கேட்டபடியே மாற்றங்கள் செய்துவிட்டேன் ஜீவி சார் !

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!