பாகிஸ்தானி காதல்! fedayeen தற்கொலைத் தாக்குதல்!

உலகமெல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நாளில் பாகிஸ்தான் காஷ்மீரில் தனது காதலை வெறித்தனமான fedayeen தாக்குதல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.ஃபிடாயீன் என்ற அரபி வார்த்தைக்கு தன் உயிரைக் கொடுப்பது என்ற தற்கொலைத் தாக்குதல்  என்று அர்த்தம் சொல்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து ISI யால் இயக்கப்படும் JeM இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. 
கோழைத்தனமான இந்தத்தாக்குதலில் பலியான நம் வீரர்களுக்கு அஞ்சலி செய்கிறோம்! காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வீரர்களுக்கு, இந்திய தேசமே உங்களோடு சேர்ந்து நிற்கிறது என்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள முடிவுசெய்ததில், தாலிபான்களிடமே முழு பிரதேசத்தையும் தூக்கிக் கொடுத்துவிட்ட மாதிரி ஒரு சிக்கலான நிலைமை உருவாகி இருக்கிறது. தாலிபான் அமைப்பில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பாக். ராணுவத்தின் ரௌடி ISI யால் பயிற்றுவிக்கப்பட்ட பாகிஸ்தானிகள்! இந்தியாவுக்குள் எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகிற Lashkar-e-Taiba, Jaish-e-Mohammed போன்ற இன்னொரு அமைப்பு தான்! இப்படி இந்தப் பக்கங்களில் சொல்லியிருத்தபடியே, தாலிபான்கள் வெற்றியைக் கொண்டாடுகிற விதத்தில் புல்வாமா தாக்குதலும் நடந்திருக்கிறது.
இந்த தொலைகாட்சி விவாதத்தோடு எதுவரை ஒத்துப் போவது?     ஜம்மு காஷ்மீர் அரசி.யலில் நிறைய விஷப் பாம்புகளை பாலூட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் அப்பட்டமான உண்மை!

வெளியே இருக்கும் பகையைக் கவனிக்கும் அதேநேரம் உள்ளேயிருக்கும் பகையை அறவே ஒழிப்பது மிக மிக முக்கியம்!

காலத்தோடு செய்யவேண்டிய பணி இது!
     

4 comments:

 1. Sorry to ask you. As a be trur BJP person / Supporter, please tell me, BSNL closing???? Below is true????
  ஜியோவுக்காக பி.எஸ்.என்.எல். மூடுவிழா !
  மோசடி அரசின் சாதனை !
  கார்ப்பரேட்டுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, பல பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

  அந்தப் பட்டியலில் முதலில் மூடுவிழா காணவிருக்கும் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் உள்ளது.

  மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், இந்தியாவில் அதிக அளவிலான நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.


  2017-18 -ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 31,287 கோடி நட்டத்தை அடைந்திருப்பதாக தொலைத்தொடர்பு செயலர் அருணா சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

  நிறுவனத்தின் நிதி நிலவரம், வருமான இழப்புகள், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு வர்த்தகம் எப்படி இருந்தது, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியாளர்களை பணியைவிட்டு அனுப்புவது உள்ளிட்ட விவரங்களை பி.எஸ்.என்.எல். தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா, தொலைத் தொடர்பு செயலரிடம் தெரிவித்துள்ளார்.

  முகேஷ் அம்பானியின் ஜியோ வருகைக்குப் பின், இந்த இழப்பு இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக பி.எஸ்.என்.எல். தலைவர் அறிக்கை அளித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவது குறித்த திறனாய்வை செய்யும்படி அவரிடம் செயலர் வலியுறுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சொல்கிறது.

  பெரும் நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனியாரின் தலையீட்டை தடுக்காமல், பணியாளர்களின் சம்பளம்தான் பிரச்சினை எனவும் பணி ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்க வேண்டும் எனவும் இதனால் ரூ. 3000 கோடி நட்டம் தவிர்க்கப்படும் எனவும் ஆலோசனைகள் பி.எஸ்.என். எல். அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

  இதன் மூலம் 50% சதவீத பணியாளர்கள் அதாவது 33,846 பேர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

  தொலைத்தொடர்பு பணிகளை விட்டுவிட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 15,000 கோடி வருமானம் ஈட்டலாம் எனவும் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது பி.எஸ்.என்.எல். தரப்பிலிருந்து.


  மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என். எல். மூடுவிழா காணும் செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் 98.8% சதவிகித இடங்களில் ‘சிறப்பாக’ செயல்படுவதாகவும் செய்தி வெளியாகிறது!

  ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.

  பிரதமர் மோடியின் விருப்பத்துக்குரிய முகேஷ் அம்பானி, மேற்கு வங்க பெண் சிங்கம் மம்தாவுடன் கை குலுக்கிறார். (மேற்கு வங்க தொலைதொடர்பு நெட்வொர்க்கில் அதிக முதலீடுகளை செய்துள்ளது ரிலையன்ஸ்)

  தமிழகத்தின் ஆட்சியில் பிடிக்கலாம் என கருதப்படும் திமுக தலைவர் ஸ்டாலினை மட்டும் சென்னைக்கு வந்து திருமணத்துக்கு அழைக்கிறார்.

  ஆக மொத்தத்தில் அதிகாரத்தை அண்டி பிழைப்பதில் முகேஷ் அம்பானி ஒரு ‘கார்ப்பரேட் மான்ஸ்டர்’. அரசு நிறுவனத்தை அழித்து, அம்பானிகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு என்ன பெயர் வைப்பது?
  கலைமதி
  நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய புரிதலுக்காகக் கேட்கிறேன்.

   எத்தனை பேர் பிஎஸ்என்.எல் மொபைல் இண்டெர்னெட் கனெக்‌ஷன்லாம் வச்சிருக்கோம்?
   எத்தனைபேர் அரசு பஸ்லதான் பிரயாணம் செய்வோம்னு செய்யறோம்?
   எத்தனை பேர், அரசு பள்ளியில்தான் படிப்போம், அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை மேற்கொள்வோம் என்று சொல்றோம்?
   எத்தனைபேர், எந்தக் காரணம் கொண்டும் தனியார் ஷேர்களை வாங்கமாட்டோம் என்று ஷேர் மார்க்கெட்டிலோ இல்லை மறைமுகமான ஷேர் மார்கெட்டிலோ நுழையாமல் இருக்கோம்?
   எத்தனைபேர் அரசு காதி அல்லது அரசின் நிறுவனங்களில்தான் முடிந்தவரை எல்லாப் பொருட்களையும் வாங்கணும்னு நினைக்கிறோம்?

   அரசு சார்ந்த நிறுவனங்களில் எப்படிப்பட்ட சேவை நமக்கு அளிக்கப்படுகிறது?

   தேவதூதன் வந்து நம் வாழ்க்கையைச் சரிப்படுத்த முடியுமா? ஜப்பானில் அரசாங்கம், அமெரிக்கக் கார்களை வாங்குங்கள் என்று விளம்பரப்படுத்தறாங்க, மக்கள் உள்ளூர் கார்களைத்தான் வாங்குவோம்னு அப்படியே செய்யறாங்க.

   அப்போ, நம்ம பெரும்பாலான மக்களுக்கு என்ன பெயர் வைப்பது (என்னையும் சேர்த்துத்தான்)

   Delete
  2. திரு மணிவண்ணன் காமராஜ்,

   இவ்வளவு நீளமாக எங்கிருந்தோ எடுத்து கட் அண்ட் பேஸ்ட் செய்த நேரத்தில் கொஞ்சம் சுயமாக யோசிக்கவோ தேடித் பார்க்கவோ முயற்சித்திருக்கலாமே!

   தகவல்கள் உண்மைதானா வெறும்வாதந்திகளா என்று கொஞ்சம் சுயமாக யோசித்துக் கேள்வி கேளுங்கள் சொல்கிறேன்!

   Delete
 2. வாருங்கள் நெல்லைத்தமிழன்!

  ஒரு கன்ஸ்யூமராக ஜனங்களுக்கு பொறுப்பான பதில், சேவைகளை வழங்குகிற நிறுவனம் நிலைத்து நிற்கும். இந்த அடிப்படை கூடத் தெரியாமல், இங்கே பலபேருக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மீது திடீர்க்காதல் வந்திருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

  நான் மூன்றாண்டுக்கு முன்புவரை BSNL தான் வைத்திருந்தேன். அம்பானிக்காக BSNL மூடப்படுகிறது என்பதே அபத்தம். நாசப்படுத்திவிட்டுப்போன தயாநிதி ஆ ராசா வகையறாவைப் பற்றி பேசாமல் இதுமாதிரி அபத்தக் குரல்கள் எங்கிருந்து கிளப்பிவிடப்படுகின்றன என்பதை பார்த்துவிட்டு தனிப்பதிவாகவே எழுதுகிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!