ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட அதிமுகவின் ஒற்றைத்தலைமைப் பிரச்சினை இன்று நடந்து முடிந்த முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட மாதிரித்தான் தெரிகிறது. போதாக்குறைக்கு அதிமுக சார்பில் எவரும் தொலைகாட்சி விவாதங்கள், பேட்டி எனக் கலந்துகொள்ள வேண்டாமென்று அறிவுறுத்தப் பட்டதில் சேனல்களுக்குத் தீனி கிடைக்காவிட்டாலும் எதிர்க் கட்சிப் பேச்சாளர்களுடன் வதந்திகள், வெறும் ஊகங்கள் என்றே ஒருகை ஓசையாகத் தொடரும்! அவர்களும் பிழைப்பு நடத்தியாக வேண்டுமே!
அதிமுகவில் ஒற்றைத்தலைமைப் பிரச்சினை ஓய்ந்ததோ இல்லையோ, திமுகவில் ரெட்டைத்தலைமை இருக்கு என்று அதிமுகவில் ஐக்கியமானபிறகு நடிகர் ராதாரவி சொல்லியிருப்பது இன்றைக்கு ஆகப்பெரிய காமெடி!
"தி.மு.க-விலிருந்து நான் வெளியேற்றப்பட்டபோது உண்மையாய் இருப்பவனை கட்சி ஒருபோதும் மதிப்பதில்லை என்பதை இரண்டாவது முறையாக உணர்ந்தேன். இருப்பினும், நான் வேறு கட்சிக்குச் செல்வதைப் பற்றி யோசிக்கல. ஆனா, நடக்கவிருக்கிற நடிகர் சங்க தேர்தலுக்காக நான் ஓட்டு கேட்கப் போயிருந்தேன். அப்போ, எனக்காக யாரும் வேலை செய்யக்கூடாதுனு தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து உத்தரவு வந்ததாகச் சொன்னாங்க. என்னாடா இது, ஒரு கட்சித் தலைமையே இப்படிச் சொல்லுதேன்னு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. தி.மு.க தலைவர் அப்படி சொல்லச் சொல்லியிருப்பாரான்னா தெரியலை. நம்மால அங்க இனி தாக்குப்பிடிக்க முடியாது. ஏன்னா, தி.மு.க-வில் இப்போ இரட்டைத் தலைமை இருக்கு. இன்னொருவர் யாருன்னு சொல்ல விரும்பல. இனியும் அங்க மதிப்பு இருக்காதுனு முடிவு பண்ணிட்டு, அ.தி.மு.க-வில் வந்து சேர்ந்துட்டேன்"
இது ராதாரவி சொன்னது. திமுகவில், ஒன்றல்ல, பல அதிகார மையங்கள் இருப்பது தெரிந்த விஷயம் தான்! ஆனால் ஒரே தலைமை என்று சொல்லிக் கொள்வதுகூட, பரவலாகத்தெரிந்த விஷயம்தான்! ஆனால் கட்சிக்குள் அடுத்த வாரிசுப்பட்டம் சூட்டப்பட்டு விட்டது என்பதை ராதாரவி தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர இதில் புதிய செய்தி எதுவுமில்லை. தமிழன் பிரசன்னா போன்ற ஜுனியர் வெற்றிகொண்டான்களுக்கு பதில் சொல்ல அதிமுகவுக்கும் ஒரு டிச் வாயர் கிடைத்துவிட்டார்.
பா.ரஞ்சித் பேசுவதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து ஓசி விளம்பரம் செய்யவேண்டாமே என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் மாரிதாஸ் போன்ற இளைஞர்கள் ஒரு தவறான கருத்தைப் பொதுவெளியில் வைக்கும் ரஞ்சித் போன்றவர்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.

இங்கே மாரிதாஸ் தன்தரப்பை எடுத்துவைக்கிறார். கேட்டுப் பார்த்துவிட்டு என்ன தோன்றுகிறதென்று கொஞ்சம் இங்கேவந்து சொல்லலாமே!
என்ன... ராதாரவி மறுபடி அதிமுகவுக்கு வந்து விட்டாரா? ஒரு நாள் பேப்பர் பார்க்கலைன்னா என்னென்ன நடக்குது!
ReplyDelete//தமிழன் பிரசன்னா போன்ற ஜுனியர் வெற்றிகொண்டான்களுக்கு பதில் சொல்ல அதிமுகவுக்கும் ஒரு டிச் வாயர் கிடைத்துவிட்டார்//
Deleteசெய்திகளை முந்தித்தந்தது தந்தி என்பதெல்லாம் அந்தக்காலம் ஸ்ரீராம்! :-)))
எல்லாரும் தினசரி பேப்பர் பார்க்கிறதாலத் தான் இதெல்லாம் நடக்கின்றன...
ReplyDeleteநாம நம்ம வேலையப் பார்த்துக்கிட்டு இருந்தா இதுகள் எல்லாம் ஒழுங்கா இருந்திருக்கும்...
சட்டை பண்ணக் கூடாது....
சீ...ந்னுட்டுப் போயிடணும்...
அரசியல் செய்திகளை பாமரனுக்கும் எடுத்துச் சென்றது தினத்தந்தி செய்த பெரிய உபகாரம் துரை செல்வராஜூ சார்! ஆனால் பலன்களை முழுக்க அறுவடை செய்து ஆண்டனுபவித்தது தி மு கழகம்!
Deleteசெய்தியை எழுத்துக்கூட்டி வாசித்த பாமரன் எங்கேயோ மழைபெய்யுது என்றிருந்ததனால் மட்டுமே இப்போதைய அடாவடி அரசியல் கேள்விகேட்பார் இல்லாமல் வளர்ந்திருக்கிறது என்பது என் கருத்து.
திருமா மாதிரி ஆக்கிரோஷமா பேசிட்டு அப்புறம் அடிமையாக வா - நல்லா எழுதியிருக்கார் இந்த போர்ஷன் மட்டும்
ReplyDeleteஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை - இது இப்போ இருக்கறவங்களால் சரிப்பட்டு வராது. சசிகலா அல்லது தினகரன் தலைமை தாங்கினாலோ இல்லை வெளியிலிருந்து அஜித் அல்லது ஸ்டார் திரையுலக பெர்சன்/குஷ்பூ தலைமை தாங்கினாலோதான் சாத்தியம். இல்லைனா கட்சி அழிந்துவிடும். இதையெல்லாம் சுயநலமில்லாமல் யோசித்து முன்னமேயே ஓபிஎஸ்ஸிடமே கட்சி இருந்திருக்கவேண்டும்.
நல்லாத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கப்புறம் எந்தத்திக்கில் பாய்வார் என்பது அவருக்கே தெரியாது நெல்லைத்தமிழன் சார்! மேற்குப் பகுதியில் 33 MLAக்கள் தேவமார் ஆதரவில் கெலிச்சது 27 என்ற கணக்கால் தான் எடப்பாடி முதல்வராகவே முடிந்தது. ஓபிஎஸ் பக்கம் அந்த 27 பேரும் நின்றிருந்தால் ஓபிஎஸ் ஒற்றைத்தலைமை ஆகியிருக்கலாம்தான்! ஆனால் ஆசைகளெல்லாம் குதிரைகளாவதில்லையே!
Delete