நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியவிதமும் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு அளித்த பதிலும் கவனித்துப் பார்க்கவேண்டிய விஷயமாக இன்றைய அரசியல் இருப்பதை நண்பர்கள் கவனித்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த 24 நிமிட விவாதத்தில் விசிகவின் வன்னியரசு பேசியதில் ஏற்றுக்கொள்கிற மாதிரி ஏதாவது இருந்ததா? மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத், மக்களவையில் அதிர் ரஞ்சன் சௌதுரி பேசியது இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிற மாதிரி அமெரிக்க அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நெறியாளர் கார்த்திகேயன் கேள்வி கேட்டது எந்தவகையில் பொருத்தமானது? இந்த மாதிரிக் குப்பையைப் பார்ப்பானேன்? கருத்து சொல்வானேன், என்கிறீர்களா?
இங்கே விசிக மாதிரியான கட்சிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது மாதிரி தலித்துகள், சிறுபான்மையினர் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? உண்மை நிலவரம் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது!
ஜூலை 18 அன்று தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதில் திமுக அதிமுக இரண்டுக்குமே தலா 3 இடங்கள் கிடைக்கலாம் என்ற நிலை. வைகோ, அன்புமணி இருவருக்கும் ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்துவிடலாம். நெட் ரிசல்ட் என்னவாக இருக்குமாம்?ராஜ்யசபாவில் திமுகவுக்கு 5 அதிமுகவுக்கு 10 என்ற அளவில் இருப்பார்கள் என்பது மட்டும்தான்! இது ஒரு புள்ளிவிவரமே தவிர, இவர்கள் என்னமோ தமிழ்நாட்டுக்காக வெட்டி முறித்து விடுவார்கள் என்பதெல்லாம் இல்லை!
திமுக என்ற கட்சியின் பட்டத்து இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கே எந்த நேரத்தில் விவாதம் மக்கள் முன் அழைத்தாலும் காத்திருக்கிறேன். 2006-2011 வரை மட்டும் திருவாளர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த அயோக்கியத்தனத்தினை மாத விவரங்களுடன் 100% அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பேச நான் தயார்.
எனவே உதய நிதி அடிப்பொடிகள் , சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு குடும்பத்தின் அடிமை உடன் பிறப்புகள் எவருக்கும் நான் தனித் தனியே பதில் கொடுக்க விரும்பவில்லை. நான் இப்போதும் கூறுகிறேன் லாட்டரி மார்டீன் -விவகாரத்தை எடுத்துப் பேசினால் மொத்த சென்னையும் காறித் துப்பும் அளவிற்கு நான் ஆதாரங்களை மக்கள் முன் வைத்து விவாதம் செய்யத் தயார்.
வேண்டும் என்றால் உங்கள் அடிமை ஊடகங்களையும் அழைத்து வாருங்கள் ஒரு பொது மேடையில் சந்திக்கலாம்.
எனவே இந்த அவனே இவனே என்ற பேச்செல்லாம் வேண்டாம். உங்கள் கம்பெனி ஓனர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சொல்லுங்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் மத்தியில் விவாதம் நடத்த மாரிதாஸ் தயார்.
20 , 30 மீம்ஸ் தயாரிக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு - 10 , 20 பக்கங்களை மறைமுகமாக நடத்திக் கொண்டு - அவர்களை வைத்து அவதூறாகப் பதிவுகள் போடுவதெல்லாம் சரி உங்கள் சந்தோசத்திற்குச் செய்து கொள்ளுங்கள் அதற்கு முன் வாருங்கள் உதய நிதி ஸ்டாலின் அவர்களே. இல்லை திமுக அதிகாரப் பூர்வமாக எந்த நபரை விவாதம் செய்ய முன் வைத்தாலும் சரி நான் தயார். உதய நிதிக்குப் பதிலாக அவர் என்னோடு விவாதம் செய்ய வரவேண்டும்.
நான் தமிழ் அது இது என்று எல்லாம் பேச விரும்பவில்லை நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ன கொள்ளை அடித்தார்கள் என்று பேச விரும்புகிறேன். சரியா? எனவே வரும்போது உங்கள் பினாமி விசயங்களையும் எடுத்து வைத்து கொண்டு விவாதம் வரவும்.
விவாதத்தின் தலைப்பு இப்படி வைத்து கொள்ளலாம்
1.காமராஜர் படிக்க வைத்தார் - கருணாநிதி குடிக்க வைத்தார்.
தலைப்பு பிடிக்கவில்லை என்றால்
2.ஏரி திருடன் எங்கே?
இந்த தலைப்பு இலக்கியம் போல இருக்கா. வேண்டுமானால் உங்கள் உலக வியாக்கிதம் பேசும் கம்யுனிஸ்ட் கட்சியினரை வைத்து கொள்வோம் நடுவராக. வெக்கம் கெட்ட கம்யுனிஸ்ட் கட்டாயம் முட்டுகொடுக்க வருவர். குழப்பமாக இருந்தால் "நீதாண்டா லூசு" புகழ் அருணன் அவர்களை அழைத்து கொண்டு வரவும்.
இல்லை என்றால் கடைசி வரை மீம்ஸ் போட்டுகிட்டே இருங்க.
-மாரிதாஸ்
என்ன இது!? வாரிசுக்கு வந்த சோதனை! முடிஞ்சா விவாதத்துக்கு வா! இல்லீன்னா கடேசி வரைக்கும் (200 ரூபாய் கொடுத்து) மீம்ஸ் போட்டுக்கினே இருங்கறாரே மாரிதாஸ்!
இங்கே இன்னொரு வாரிசு! அவருக்கென்ன? பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்! நம்பிக்கெட்டது, இன்னும் கெடுவது சோனியாG காங்கிரஸ் தான்! அதனால் தானோ என்னவோ மறைமுகமாக குலாம் நபி ஆசாத் கூட எங்களுக்கு புது இந்தியாவெல்லாம் வேணாம் பழைய பெட்ரோமேக்ஸ் லைட்டே போதும்னு சொன்னாரோ?
திமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்! BJPயை நம்பாமல் கெடுவதும்! எது உங்கள் சாய்ஸ்?
மீண்டும் சந்திப்போம்.
// பழைய பெட்ரோமாக்ஸ் லைட்!..//
ReplyDeleteஇந்த வட்டாரத்துக்குள்ளே தீவட்டிய சேர்த்துக் கொள்ள மாட்டீர்களா!...
பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமுன்னு அடம் பிடிப்பதே குலாம் நபி ஆசாத் மாதிரித் தீவட்டிகள் தானே துரை செல்வராஜூ சார்! அப்புறம் எப்படித் தனியாகச் சொல்வது, சொல்லுங்கள்!
Deleteஅரசியல் செய்திகளைப் படிக்க வெறுப்பாத்தான் இருக்கு. உதயநிதிக்கெல்லாம் என்ன தெரியும்? கொள்கை, கொள்ளைனு பேச வந்துடறாங்க.
ReplyDeleteஏரி திருடன் - அருமையான தலைப்பு. இப்போ தண்ணீர் இல்லாததற்கு முக்கியக் காரணம் கருணாநிதிதான். அவர்தான் ஏரிகளைத் தூர்த்து இடங்களை விற்று காசுபார்த்தார்.
இப்படி பெரும்பாலோனோர் ஒதுங்கிப்போவதால் தான் இங்கே அரசியல் தீவட்டிக்கொள்ளைக்காரர்களுடைய கொண்டாட்டக்களமாக ஆகிவிட்டது நெ.த. சார்!
Delete