ஆரம்பமும் முடிவும்! மம்தா பானெர்ஜி! ,

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபசானதோடு மம்தா பானெர்ஜிக்கு இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடவில்லை என்றுதான் இன்றைக்கு வரும் செய்திகளைப் பார்க்கும் போது தெரியவருகிறது. இந்த முறை மம்தா பானெர்ஜி வரிந்துகட்டி தன்னை எந்த  முஸ்லிம் மக்களின் ஏகோபித்த பாதுகாவலராகக் காட்டிக்  கொண்டிருக்கிறாரோ, அதே முஸ்லிம் மக்களிடமிருந்து வேண்டுகோளாக வந்திருக்கிறது!  


“Last night absolutely shook me. This is not the Kolkata, I came back to; not the Kolkata I left my flourishing career outside to come back and live. I represented Kolkata and won the title of Miss India. I represent this city. I represent this county. I stand up for every girl, every citizen who is scared to live in this situation,” என்கிறார் 2010 இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உஷோஷி சென் குப்தா. இது நடந்தது திங்கட்கிழமை அதிகாலைப் பொழுது.   கொல்கத்தா போலீசாருடைய அலட்சியம், செயலற்ற தன்மை இரண்டுமே உஷோஷியின் முகநூல் பகிர்வுக்குக் கிடைத்த வெகுஜன ஆதரவிலும், குற்றவாளிகள் முஸ்லிம்கள் என்பதால் விட்டுவிடவேண்டாம் என்று முஸ்லிம் மக்களே மம்தா பானெர்ஜியை வேண்டிக்கொண்டிருக்கிற கடிதத்திலும்  நடந்திருக்கிறது    

In what can be seen as a rejection of West Bengal Chief Minister Mamata Banerjee’s minority appeasement policies, prominent Muslim citizens of Kolkata have written to the chief minister, asking her not to spare the accused – who happen to be Muslims – in the case of a doctor getting assaulted in NRS Hospital and a model getting attacked in Kolkata on Monday night.  
இங்கே தமிழகத்திலும் திமுக திக  விசிக மாதிரியான போலி செகுலர்களின் சுயநலத்தோடு கூடிய  அரவணைப்பிலிருந்து முஸ்லிம் நண்பர்கள் விடுபட்டு அவர்களிடமிருந்து விலகிநிற்கிற காலம் வருமென்று நான் உறுதியாக நம்புகிறேன். கொல்கத்தாவில் அது நடக்குமென்றால் இங்கே சென்னையில், தமிழகத்திலும் நிச்சயம் நடக்கும்!   


ஏற்கெனெவே ராமசந்திர குகா சொன்னதுதான்! ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வரவில்லையென்றால் அவர் வேறு வேலை பார்க்கப்போக வேண்டியதுதானே! மொபைல் போனை நோண்டிக்கொண்டிருப்பதற்குத்தான் வயநாடு தொகுதி மக்கள் வாக்களித்து எம்பியாக்கினார்களா?


ஆந்திர அரசியலில் இது சந்திரபாபு நாயுடு  ஏற்கெனெவே விதைத்த வினைதான்! இவ்வளவு சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டிவரும் என்பதை அவரோ வேறு யாருமோ எதிர் பார்த்திருக்க முடியாதுதான்! மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தெலுகு தேசக்கட்சிக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய கட்சிக்காரர்களே சந்திரபாபு நாயுடுவைக் கைகழுவிக் கொண்டிருக்கிறார்கள்! இதை  வெறும் கட்சித்தாவல் என்று மட்டும் பார்க்க முடியவில்லை, வரவேற்கவும் முடியவில்லை. ஏற்கெனெவே மோடி மீதிருக்கிற பயத்தினால் மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று வரிந்துகட்டிக்   கொண்டிருக்கிற எதிர்க்கட்சிகளை இப்படியா இன்னும் பயமுறுத்துவது? !!

 
இந்தப்படம் அப்படியென்ன பேசுகிறதாம்? உங்களுக்காவது ஏதேனும் புரிகிறதா?  

மம்தாவிடமிருந்து ஆரம்பித்த பதிவை மம்தா பானெர்ஜியை வைத்தே முடித்தாலென்ன? மம்தா தீதியிடம் செய்திகள், பரபரப்பு, கலாட்டா இவைகளுக்குப் பஞ்சமுண்டா என்ன?
   
A day after TMC supremo Mamata Banerjee directed party leaders to give back the money if they had taken any bribe from beneficiaries of government schemes, elected representatives faced public ire in various parts of the state Wednesday with the people demanding return of the "cut money"

அட! ஒரு பேச்சுக்காக, திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் யாராவது நலத்திட்ட உதவிகளைப்பெறுவதற்காக ஜனங்களிடம் இருந்து அன்பளிப்பு வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று மம்தா பானெர்ஜி சொன்னது தான்! ஜனங்கள் அதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களிடம் எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு என்று சுற்றி வளைக்கிறார்களாம்! 

Angry people gheraoed TMC leaders and elected representatives of panchayats and municipalities in the districts of Birbhum, Malda, Purulia and Bankura.They demanded that the Trinamool Congress leaders return the money allegedly taken from them to provide them benefits from various schemes of the government.   .

மீண்டும் சந்திப்போம்.
         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!