நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி காங்கிரசிலும் வெற்றி கொண்டான்கள் உண்டு என்பதை நிரூபித்தார். நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து நரேந்திர மோடி பதிலடி கொடுத்துப் பேசியதில், மிகுந்த அரசியல் முதிர்ச்சியும், எதிர்ப்பைக் கையாளுவதில் உறுதியும் வெளிப்பட்டதென்று தான் சொல்ல வேண்டும்!
முன்னாள் இடதுசாரி, தொழிற்சங்கவாதி என்றும் சொல்லிக் கொண்டு மோடியையும் ஆதரிப்பதா? இப்படி நேரடியாக என்னிடம் வந்து கேட்டவர் எவருமில்லை! ஆனாலும் அதைத் தெளிவு படுத்தவேண்டியது என்னுடைய கடமை தான்!
எதிர்க்கட்சிகள் இன்னும் பழைய மிதப்பிலேயே பொறுப்பற்ற விதத்தில் அரசியல் செய்யும் போது, அதைத் திறமையாக சமாளித்து, அவர்களுடைய யோக்கியதை என்னவென்பதை அம்பலப் படுத்துகிற மோடியின் சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் எப்படி இருப்பது? பிரதமர் பதிலுரையைக் கேட்பதற்காக ராகுல் காண்டியே, மதியம் வரை மக்களவைக்கு வராமலிருந்தவர் மாலை வந்து சேர்ந்தார் என்றால் என்ன சொல்ல? பிரதமர் பதிலுரை இங்கே
கெட்டபின்பு ஞானம் வருகிறதோ இல்லையோ, 2021 இல் வர இருக்கும் சட்டசபைத்தேர்தல் மம்தா பானெர்ஜியை ரொம்பவுமே யோசிக்க வைத்திருக்கிறது. பிரசார உத்தி வியாபாரி பிரசாந்த் கிஷோர் யோசனையா என்று தெரியவில்லை. சென்ற செவ்வாய்க்கிழமை மம்தா ஆவேசமாக கட்சிக்காரர்கள் யாராவது அரசுத்திட்ட உதவிகள் பெறுகிறவர்களிடம் cut money லவட்டியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஜனங்களும் TMC ஆசாமிகளை கெரோ செய்து எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு என்று போராட ஆரம்பித்ததில், ஒரே ஒரு ஆசாமி மட்டும் சுமார் 2.27 லட்சரூபாயை MGNREGA பயனாளிகளுக்கு தலா 1691 வீதம் தான் பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம்! அதிசயம் தான்! ஆனால் சாரதா மோசடியில் ஏமாந்த ஜனங்களுக்கு சம்பந்தப்பட்ட TMC பெரும்புள்ளிகள் எப்போது திருப்பிக் கொடுப்பார்களாம்? நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான சதாப்தி ராய் வெளிப்படையாகவே தீதியின் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்று சொல்லிவிட்டார்.
எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி மம்தா பானெர்ஜி இன்று புதன்கிழமை மார்க்சிஸ்டுகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டும் என்று பேசியிருப்பதுதான்! "The people of the state are witnessing in Bhatpara what happens if you vote for the BJP. I feel all of us [TMC, Congress and CPI(M)] should come together in the fight against the BJP. It doesn't mean we have to join hands politically, but on common issues at the national level, we can come together," என்று சட்டசபையிலேயே இன்று பேசியிருக்கிறார்.
அர்ஜுன் சிங் என்பவர் TMC யிலிருந்து பிஜேபிக்குத் தாவி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரக்பூர் தொகுதியின் எம்பியாகவும் ஆகிவிட்டார். திரிணாமுல் கோட்டை பறிபோனதில் தேர்தலுக்குப் பிறகும் கூட பிஜேபி திரிணாமுல் இடையே வன்முறைத் தாக்குதல்கள் தொடருகின்றன என்பதை வைத்து மம்தா இடதுசாரிகள், காங்கிரசுக்கு அழைப்பு விடுத்திருப்பது செல்லுபடியாகுமா? இடதுசாரிகள் கணக்கும் காங்கிரஸ் கணக்கும் வேறு வேறு என்பது தெரிந்த விஷயம்தான்!
சிறுபான்மைக்காவலர்களாக வேஷம்போட காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தான் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது போல! செய்திக்கான லிங்க் இதுவும் இன்றைய செய்திதான்!
மீண்டும் சந்திப்போம்.
எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி மம்தா பானெர்ஜி இன்று புதன்கிழமை மார்க்சிஸ்டுகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டும் என்று பேசியிருப்பதுதான்! "The people of the state are witnessing in Bhatpara what happens if you vote for the BJP. I feel all of us [TMC, Congress and CPI(M)] should come together in the fight against the BJP. It doesn't mean we have to join hands politically, but on common issues at the national level, we can come together," என்று சட்டசபையிலேயே இன்று பேசியிருக்கிறார்.
அர்ஜுன் சிங் என்பவர் TMC யிலிருந்து பிஜேபிக்குத் தாவி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரக்பூர் தொகுதியின் எம்பியாகவும் ஆகிவிட்டார். திரிணாமுல் கோட்டை பறிபோனதில் தேர்தலுக்குப் பிறகும் கூட பிஜேபி திரிணாமுல் இடையே வன்முறைத் தாக்குதல்கள் தொடருகின்றன என்பதை வைத்து மம்தா இடதுசாரிகள், காங்கிரசுக்கு அழைப்பு விடுத்திருப்பது செல்லுபடியாகுமா? இடதுசாரிகள் கணக்கும் காங்கிரஸ் கணக்கும் வேறு வேறு என்பது தெரிந்த விஷயம்தான்!
மீண்டும் சந்திப்போம்.
சிறுபான்மை சார்பு நிலை எடுக்கும் கட்சிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனம் பாஜகதான். சொல்ல முடியாது, அடுத்த முறை கம்யூனிஸ்டுகள், மம்தா, காங்கிரஸ் கூட்டணி அமையலாம்.
ReplyDeleteசிறுபான்மையினருக்காக ஆதரவுநிலை எடுப்பதில் எந்தப்பிரச்சினையும் இல்லை நெ.த.! ஆனால் இங்கே சிறுபான்மைக்காவலர்களாக வேஷம் போடுகிற கட்சிகள் என்ன செய்கின்றன என்பதிலிருந்துதான் பிரச்சினையே தொடங்குகிறது. மிகச்சமீபத்தைய உதாரணமாக முஸ்லிம்களுக்கு இடையூறாக இருக்கும் என்று அவர்கள் சொல்லாமலேயே துர்கா பூஜா பந்தல்களுக்கு, வழிபாடுகளுக்குத் தடைவிதித்தது மம்தா அரசு! இந்த போலித்தனமான appeasement தான் பிரச்சினைகளுக்குக் காரணம். காங்கிரஸ் முதல் இடதுசாரிகள் வரை எவரும் விதிவிலக்கல்ல.
Deleteஹிந்தி பேசாத மக்கள் இந்தப் பேச்சை தெரிந்து கொள்ள பிரதமர் பேச்சை கீழே ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கலாம். ஏன் மாநில பிரிவினைவாதம் வெல்கிறது என்பது இங்கிருந்து தான் தொடங்குகின்றது.
ReplyDeleteஇப்போது பெரிதாக இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாது ஜோதிஜி! அனேகமாக எல்லா சேனல்களுமே ஆங்கிலத்திலோ அல்லது உள்ளூர் மொழியிலோ சுருக்கமாகவாவது பேச்சின் சாராம்சத்தை கூடவே வெளியிடுகின்றன. எனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் இரண்டு அல்லது மூன்று தேடல்களில் என்ன பேசினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
Deleteபிரிவினைவாதம் இங்கே பெரும்பாலும் பிழைப்புவாதம் மட்டுமே என்று குறுகிக் கிடக்கிற